AIBSNLPWA
மதுரை
மாவட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் அன்பான வேண்டுகோள்;
விருப்ப
ஓய்வூதியத்திட்டத்தில் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ள தோழர்களின் கனிவான
கவனத்திற்கு.
மிக்க
கவனத்துடன் ஆராய்ந்து விருப்ப ஓய்வில் ஓய்வு பெற இருக்கும் நீங்கள்,
விருப்பம் தெரிவித்த 1௦ நாட்களுக்குள்,
முழு ஓய்வூதிய விண்ணப்பத்தினை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
,
தவறின்றி விண்ணப்ப படிவத்தினை தயாரித்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க உங்களுக்கு
உதவிட
AIBSNLPWA
மதுரை மாவட்டச்சங்கத்தோழர்கள், வழக்கம்போல், நமது BSNL மாவட்ட முதன்மைபொது மேலாளர்
அலுவலக ஆண்கள் மதிய உணவருந்தும் அறையில் காத்திருக்கிறார்கள்.
கீழ்காணும்
விவரங்களுடன் AIBSNLPWA மதுரை மாவட்டச்சங்கத்தோழர்களைத் தொடர்பு கொண்டால் உங்கள்
பணி விரைவில், தவறின்றி நிறைவேறும்.
விரைந்து வாருங்கள்.பயன்
பெறுங்கள்.
தேவையான ஆவணங்கள்.
1.
அடையாளஅட்டை- ID CARD
2.
சமீபத்திய சம்பளப்பட்டியல்.
3.
ஊழியரின் ஆதார் அட்டை
4.
ஊழியரின் பான் அட்டை (PAN)
5.
ஊழியரின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல்
6.
மேற்படி வங்கி கணக்கின் காசோலைகள் 3(cheque leaveas)
7.
ஊழியர் தனது மனைவி/கணவர் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் 6 (5x8.5cm அளவில்)
8.
ஊழியரின் உயரம் செ.மி ல்(CM)
9.
ஊழியரின் அங்க அடையாளங்கள் (சேவைப்பதிவேட்டில் உள்ளபடி)
10.
ஒரு ரூ. மதிப்புள்ள ரெவெநுஎ ஸ்டாம்ப் 7
11.
ஊழியரின் மற்றும் மனைவி/கணவர் வயது சான்றிதழ்.
12.
ஊழியரின் மனைவி/கணவரின் முகம் மற்றும் கைகள், மற்றும்
பார்வையிடக்கூடிய இடங்களில் உள்ள மச்சம், வடு அடையாளங்கள் 2
13.
குடும்ப உறுப்பினர்களின் விவரம்(மகன்,மகள் மற்றும் ஊழியரை சார்ந்து
வாழும் பெற்றோர்.
14.
மேற்படியோரின் பிறந்த தேதி , ஆதாரத்துடன்
15.
மேற்படியோரின் திருமணமான நிலை (மணமானவர்களா இல்லையா) விவரம்
உங்களுக்கு உதவக்காத்திருக்கும்
AIBSNLPWA மதுரை மாவட்ட உறுப்பினர்கள்,