Wednesday 27 December 2023

ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம்

 முக்கியச்செய்தி

தோழர்களே!

9-12-2023 அன்று நடைபெறுவதாக இருந்து தவிர்க்க இயலாத காரணங்களால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட நமது மாவட்ட ஓய்வூதியர் தின சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வரும் புத்தாண்டில்

 5- 1- 2024 வெள்ளி அன்று அதே நிகழ்வு இடத்தில் அதே நிகழ்ச்சி நிரல்படி சிறப்பாக நடைபெற இருக்கின்றது. தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

மாவட்டச் செயலர்.





Friday 8 December 2023

 

மிக முக்கியச் செய்தி.

09-12-23 அன்று நடக்க இருந்த மதுரை மாவட்ட ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் செய்தி கீழே. சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெரு வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் விழாவிற்கு சென்னையிலிருந்து வரவேண்டிய தலைவர்கள் மதுரை வருவது  இயலாததா கிவிட்டது. எனவே 09-12-2023 அன்று நடத்த வேண்டிய சிறப்பு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது.

அதனால் பின்னர் சென்னையில் சகஜ நிலை திரும்பிய பின்பு சங்கத் தலைவர்கள் மதுரை வர இசைவான தேதியில் ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். சிரமத்தினை பொறுத்தருள வேண்டுகிறேன்.

நன்றி

மாவட்டச் செயலாளர்.

Saturday 4 November 2023

 

Pensioners' Patrika Nov Dec 2023 soft copy has been released just now. Click the Link given below to read the copy.

 

Friday 3 November 2023

நமது சங்கம் , ஓய்வுபெற்ற BSNL ஓய்வூதியர்களுக்கு ஏழாவது மத்திய ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கியது போன்று ஓய்வூதிய மாற்றம் 01-01-2017 முதல் IDA அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று PB CAT டில்லி கோர்ட்டில்வழக்கு பதிவு செய்து , வெற்றிகரமாக வாதாடி நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றோம் அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக 29-10-2023 அன்று மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக  நீதிமன்ற தீர்ப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தோழர் S .கனியப்பன்  தலைமை ஏற்று விழாவை நடத்தினார் .மாநிலத் தலைவர் தோழர் V. சாமிநாதன் சிறப்பு பேச்சாளர் , மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தோழர் சூரியன் , தோழர் மீனாட்சிசுந்தரம் , தோழர் பாலசுப்ரமணியன் ஆகியோர்  கலந்துகொண்டு உரையாற்றினார்கள் .

மாவட்ட தலைவரின் தலைமை உரைக்குப்பின் , மாவட்ட செயலாளர் தோழர் S .வீராச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார் . தேனி , திண்டுக்கல் , வத்தலக்குண்டு கிளைகள் மற்றும் விருதுநகர் , காரைக்குடி மாவட்டங்கள் இருந்து திரளாக வந்திருந்த தோழர்களை அன்புடன் வரவேற்றார். தஞ்சை மாவட்டத்தில் முதியோர் & அநாதை காப்பகங்களை சீரிய  தொண்டு பணியாற்றி வருவதை  கண்டு , மதுரை மாவட்டத்திலும் இது போன்று தொண்டு நிறுவனங்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று விரும்பி  மதுரை சேவாஸ்ரமம் காப்பகத்தில் இருக்கும் முதியோர்களுக்கு உடை , உணவு ஆகியவைகளை 2022 & 2023ஆம் ஆண்டுகளில் வழங்கினோம் என்று தமதுரையில் குறிப்பிட்டார் .

தோழர் மீனாட்சிசுந்தரம் தமதுரையில் நீதிமன்ற தீர்ப்பு மூலமாக  நாம் பெற்ற வெற்றியை மிகவும் போற்றி , இந்த சிறப்புக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கும் மதுரை மாவட்ட நிர்வாகத்தை வாழ்த்தி பேசினார்.

தோழர் சூரியன் , மாநில உதவி செயலர் தம் உரையில் , மாநில சங்கத்தின் அறிக்கைகள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் வெளியிட வேண்டும் மேலும்  உயிர் வாழ் சான்றிதழ் அளிப்பது  சம்பந்தமாக வாட்சப் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினார் .ஆண்டு சந்தா உறுப்பினர்கள் ஆயுள் சந்தா உறுப்பினராக மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .

அடுத்து பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் பாலசுப்ரமணியன் இது நீதிமன்ற தீர்ப்பின் விளக்க விழா என்றும் , உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதில் ஏற்படும் சிரமங்களை எடுத்துக்கூறி , இவைகளை களைந்திட மாநில சங்கம் முயலவேண்டும் என்று கூறினார்  .

மதுரை மாவட்ட சங்க கெளரவ தலைவர் தோழர் G.R . தர்மராஜன் தம் உரையில் 2003ஆம் ஆண்டு மிக குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு ஓய்வூதியர் சங்கம் மதுரையில் ஆரம்பித்தோம் .இன்று பல சாதனைகளை நிகழ்த்தி மிகப்பெரிய சங்கமாக வளர்ந்துள்ளோம். என்று வாழ்த்திப் பேசி தோழர் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவித்து , அவர் நடத்திவரும் " உதவும் உள்ளங்கள் " அமைப்பிற்கு ரூபாய் 1000/- நன்கொடை அளித்தார் . 85 வயது நிரம்பியுள்ள நம் தோழர் GRD, இந்த விழாவிற்கு வந்து , பேசியது மிகவும் போற்றத்தக்கதாகும் . அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழர் சாமிநாதன்  சிறப்புற்றை ஆற்றினார். விரைவில் LPD பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியும், PPO வில் இருக்கும் தேதிக்கும் மாறுபாடு இருப்பது , உயிர்வாழ் சான்றிதழ்  பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும். MRS வைத்துத்தான் முதன்முதலாக சங்கம் ஆரம்பித்தோம்.அதுவே இன்று அகில இந்திய அளவில் மிகப்பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது. கேடர் பாகுபாடு இல்லாமல் CGM முதல் RM வரை நம் சங்கத்தில் உறுப்பினர்கள் உள்ளனர் .2007ல் ஓய்வூதிய மாற்றம் DOT அதிகாரிகள் மற்றும் நம் துறை அமைச்சர்களை சந்தித்து பேசி பெற்றோம்.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் கோரி , அன்றைய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களை பலமுறை கண்டு பேசியும் பலனின்மையால் பெங்களூரில் கூடிய கூட்டத்தில் , நாம் நீதிமன்றம் செல்லலாம் என்ற கருத்தின் அடிப்படையில் PB CAT  டில்லியில் கேஸ் பதிவு செய்து , வெற்றிகரமாக வாதாடி இன்று வெற்றிக்கனியை பெற்றுள்ளோம். சுமார் 50 டாக்குமென்டுகள் , 300 பக்கங்களுக்கு மேலாக தயாரித்து அளித்த தோழர் DG அவர்களின் பங்கு பாராட்டுதலுக்கு உரியது.

நாம் பெற்றுள்ள வெற்றியினை மீண்டும் பரிசீலனை செய்ய அரசு தரப்பில் உயர்நீதி சென்று முறையிட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் இதற்கிடையில் சென்ற மாதம் 25 & 26 தேதிகளில் தோழர் வரப்பிரசாத் GS , கங்காதராவ் அகில இந்திய துணைத் தலைவர் மற்றும் பல முக்கிய தலைவர்கள் பல உயர் அதிகாரிகளை டில்லியில் சந்தித்து நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர் .என்று கூறி தஞ்சையில் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆற்றிவரும் சேவைகள் குறித்து பேசினார் .

இறுதியில் தோழர் சீனிவாசன்  நன்றி நவில கூட்டம் முடிவுற்றதுவந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.
அனைத்து தோழர்களுக்கும் தோழமை நன்றி வணக்கம்.
இவண்
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
மதுரை மாவட்டம்.