Saturday, 28 September 2024

15 வது மதுரை மாவட்ட மாநாடு.

15 வது மதுரை மாவட்ட மாநாடு.

மறைந்த நமது தோழர் வீராச்சாமியின் நினைவினை போற்றும் விதமாக          25-9-2024 புதன் கிழமை மதுரை தல்லாகுளம் காந்தி மியூசியம் அருகில் உள்ளபூங்கா முருகன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 15 வது மாவட்ட மாநாடு தோழர் வீராச்சாமி நினவரங்கம் என பெயரிடப்பட்டு  நடைபெற்றது.முதல் நிகழ்வாக தோழர் வீராச்சாமியின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  தோழர் ராஜேந்திரன் அவர்களின் விண்ணதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் மூத்த தோழர்    G R தர்மராஜன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின் தோழர் நாகராஜன் அவர்கள் அஞ்சலி செய்தியை படித்து   மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தோழர் G ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் கலந்து கொண்டார். நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக தோழர் ஜெபக்குமார் அவர்களும் மதுரை மாவட்ட NFTE சங்க செயலர் தோழர் V ரமேஷ் அவர்களும் AIBSNLPWREA மாவட்ட செயலாளர் தோழர் S ராமச்சந்திரன் அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநிலச் சங்கப் பிரதிநிதிகள் தோழர்கள் சூரியன், பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி உரை நிகழ்த்தினர். திண்டுக்கல் தேனி வத்தலகுண்டு கிளை செயலாளர்கள் மாநாட்டினை வாழ்த்தி அவர்களது கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 

மூத்த தோழர் திரு ஜி ஆர் தர்மராஜன் அவர்கள் சங்க வளர்ச்சி குறித்தும் ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

 மதுரை மாவட்ட பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சார்பில் திரு மோகன் தாஸ் DGMஅவர்களும் திருமதி கீதா AGM அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்களது உரையில் நமது ஓய்வூதிய சங்கத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய மாவட்டம் தயாராக இருப்பதாகவும் சங்கத்திற்கு நாம் கேட்டபடி   தல்லாகுளம் பகுதி வளாகத்தில் தரைத்தளத்திலேயே ஒரு அறையை கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வந்திருப்பதாகவும் மருத்துவப்படி மருத்துவ பில்கள் வழங்குதல் போன்றவற்றை விரைவாக செய்ய மேலும் ஒரு ஊழியரை நியமித்திருப்பதாகவும் கூறினர்.

மாநிலச் செயலாளர் தனது உரையில் முதலில் மாவட்ட சங்கத்தினை வாழ்த்தி பேசினார். பின்பு KYP ,FMA போன்ற பிரச்சனைகளை பற்றிய விளக்கங்கள் கொடுத்தார். ஓய்வூதியம் வழங்கப்படுவதில் உள்ள தாமதங்கள் களையப்பட்டு இம்மாதம் முதல் மாதத்தின் கடைசி வேலை நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய ஆவன செய்யப்பட்டதால் இம்மாத ஓய்வூதியம் 25 9 24 அன்று கிடைத்திருக்கிறது என்ற விளக்கத்தினை எடுத்துரைத்தார். குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் அதற்கு ஓய்வுதியர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் விளக்கிக் கூறினார். ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான பயோமெட்ரிக் கருவிகளை CCA அலுவலகம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இது நடைமுறைப் படுத்தப்படும்போது  ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிப்பதில் உள்ள பெரும்பாலான சங்கடங்கள் தீர்க்கப்படும். தமிழ் மாநில சங்கத்தின் முயற்சியின் காரணமாக ஒரு இன்கிரிமெண்ட் குறைக்கப்பட்டு 78.2% IDA இணைப்புடன்  ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயம் செய்ய ஆவன செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கு உரிய Declaration படிவத்தில் (affidavit in non judicial stamp paper ல் ) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். இதுவரையில் CCA அலுவலகத்துக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் 30 பேருக்கு இம்மாதம் இந்த இணைப்பு போடப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு விரைவில் கிடைக்க மாநில சங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் இதன்மூலம் பென்சன் மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 வரை அதிகரிக்கும். அரியர் தொகை சுமார் 1,20,000 வரை கிடைக்கும். இதுவரையில் அதற்கான விண்ணப்பித்தினை சமர்ப்பிக்காத பாதிக்கப்பட்ட தோழர்கள் விரைவில் அதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சென்னை சொசைட்டி விவகாரம் மத்திய சங்கத்தின் உதவியுடன் தீர்க்க  ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

ஓய்வூதிய மாற்றம் பெற  பாட்டியாலா மத்திய சங்க செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி செயல்படுத்தப்படும் என தெளிவு படுத்தினார். Notional Increment, Commutation பிடித்தல் காலம் குறைக்கப்படுதல்  பற்றிய விளக்கங்களையும் தெரிவித்தார். அவரது உரைக்குப் பின் மதிய உணவிற்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

சிறப்பான மதிய உணவிற்கு பின் மதியம் 2:30 மணி அளவில் மீண்டும் கூட்டம் தொடங்கியது கூட்டத்தில் ஆண்டறிக்கை செயலரால் படிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. வரவு செலவு கணக்கு மாவட்ட பொருளாளரால் படிக்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவரது பதில் பெற்று சபை ஏற்றுக் கொண்டது. 

அதன் பின்னர் மாநிலச் செயலாளர் மதுரைக்கு CGHS wellness centre வருவது குறித்து விளக்கங்கள் கொடுத்தார். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் CGHS பட்டியலிட்ட மருத்துவமனைகள் தொடங்கப்பட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாகவும் விரைவில் இவை அமுல்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார். 

அதன்பின்பு இப்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாவட்ட சங்க செயற்குழு தலைவரால் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில அமைப்பு செயலாளர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் நடத்தினார்.

புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் நன்றி உரை கூறி மாவட்ட சங்கத்தினை சிறப்பாக வழி நடத்த அனைவருடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டினார். 

தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.


























No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.