தோழர்களே!
நமது அமைப்பின் மதுரை மாவட்ட செ ய லா லராக நீண்ட காலம் தோழர் தர்மராஜன் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் மாவட்டமாக திகழ்ந்து வந்தது. வயது மூப்பு காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.
அந்த இடத்தை இட்டு நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் அந்த இடத்தை தோழர் வீராசாமி ஓரளவிற்கு இட்டு நிரப்பினார். மிகவும் இனிமையானவர். அனைவருக்கும் உதவும் பண்பு கொண்டவர். நிர்வாகத்துடன் சுமுக உறவு கொள்ளும் தன்மை கொண்டவர்.
அவருடைய மறைவு நமது அமைப்பிற்கு, அதுவும் 10 நாட்களில் அந்த மாவட்ட மாநாடு நடைபெற உள்ள சூழலில், மிகப்பெரிய இழப்பாகும்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
DG CHQ President
16/9/24
மாநில சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல். மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி அவர்கள் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு மாதங்கள் உடல் நலகுறைவால் அவதியுற்றார். ஆனால் இந்த நிலை வரும் என்பதை எதிர் பார்க்கவில்லை. வழக்கமாக என்னிடம் வாரத்தில் மூன்று முறை பேசுவார். இனிய முகம். இனிமையான பேச்சு. சிறந்த மனிதர். அனைவருக்கும் நண்பர். தமிழ் நாட்டில் அதிக உறுப்பினரை கொண்ட மதுரை மாவட்ட சங்கத்தை, எவ்வித பிரச்சனை யும் இல்லாமல் சுமூகமாக நடத்தி வந்தார். சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமன்றி நமது மதுரை மாவட்ட, மற்றும் மாநில சங்கத்திற்கும் இழப்பு தான். மாநில சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை அண்ணார் குடும்பத்திற்கும், மதுரை மாவட்ட தோழர்களுக்கும், மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிரேன். அன்னாரின் ஆத்மா, ஆண்டவன் திருவடியில் இளைப்பாற, இறைவனை வேண்டுகிரேன்.
இவன். Sundarakrishnan CS TN
It is with great sorrow that I learned of the passing of Com Veerasamy, District Secretary of Madurai. During my visit to Madurai in May 2019, he extended his help and since then we continued our friendship. We stayed connected over the years, meeting at association meetings, including the recent CEC Tamilnadu at Salem. His service as DS AIBSNLPWA Madurai is highly commended. His dedication to the association and his commitment to serving others were always evident. His sudden departure is a great loss, and my heartfelt condolences to his family. He will be remembered for his contributions.
V Vara Prasad // GS
BSNL ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் வீராச்சாமி அவர்கள் நம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தி மறைந்தார்.😭
தோழர் வீராச்சாமி அவர்கள் சிலகாலம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.அவரது இழப்பு BSNL ஓய்வூதியர் நல அமைப்பிற்கும் அவரது குடும்பத்தார்க்கும் பேரிழப்பாகும்.
அவரது குடுபம்பத்தார்க்கும் BSNL ஓய்வூதிய தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை நமது இந்திய தென் மண்டல அஞ்சல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். 😭
அன்பு நண்பர் தோழர். வீராச்சாமி,
மாவட்ட. செயலர்..அவர்களின்
மறைவு...
இவ்வளவு விரைவாக வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..
கடின உழைப்பை ..
இரு கண்களாக கொண்டவர்..
தனி நபராகவும் போராட தயங்காதவர்...
சிறிது காலமே பழக்கம் என்றாலும் மறக்கவொன்னா நட்பாக...
மனதில் பதிந்து விட்டது....
ஆழ்ந்த இரங்கல் அண்ணாரின் குடும்பத்தார்க்கு... அவரை இழந்து தவிக்கும் வேளையிலே...
அவரின் ஆன்மா அமைதியுற ஆண்டவனை வேண்டி நிற்ப்போம்.
இவண்.
நண்பன். நா.நடராசன்,தஞ்சை(சேலம்).16-9-24
இரங்கல் செய்தி
தோழர்களே தோழியர்களே வணக்கம்
.நான் மதுரை மாவட்ட சங்கத்தின் முன்னாள் மாவட்ட ச் செயலரும் இந்நாள் கௌரவ தலைவருமான தர்மராஜன்.
மதுரை மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு அன்று இருந்த சுமார் 30 ஓய்வூதியர்களை ஒருங்கிணைத்து ஒரு ஓய்வூதியர் சங்கம் துவக்கினேன். இந்தச் சங்கம் பின்னால் நான் விதை போட்டு உருவான AIBSNLPWA என்ற பெரிய ஆலமரத்தின் மாவட்டச் சங்கமாக இணைந்தது. எனது எண்பதாவது வயது வரை நான் மதுரை மாவட்ட சங்கத்தின் செயலராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். வயது மூப்பின் காரணமாகவும் அனைத்து இந்திய சங்க விதிகளின் காரணமாகவும் எண்பது வயதுக்கு பின்பு இந்த பதவியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது என் முன்னால் தோன்றியவர் எனது இனிய நண்பர் தோழர் வீராச்சாமி.
நான் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்ட பின்பு தோழர் வீராசாமி அவர்கள் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று இந்த மதுரை மாவட்ட சங்கத்தினை கட்டி காத்து சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாக உயர்த்தி அரும்பணி ஆற்றியிருக்கிறார். அவர் பதவி காலத்தில் அவர் ஆற்றிய பணி அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது. மாவட்ட சங்கத்திற்கு கல்வெட்டு, கொடிமரம் என்பன அவரால் செய்யப்பட்ட வாழ்நாள் சாதனைகள். எனக்கு பின்னால் மாவட்ட சங்கத்தின் செயலர் பொறுப்பேற்று அவர் திறம்பட செயலாற்றினார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவர் உடல்நிலை குறைவு காரணமாக 16 9 24 அதிகாலை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தையும் மன வேதனையையும் அளிக்கின்றது. அவரது செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீர் திரையிடுகிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மாவட்ட சங்கத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்குகின்றேன்.
இவண்
G R தர்மராஜன்.
கௌரவத் தலைவர் மதுரை மாவட்ட சங்கம்.
தோழர் வீராச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
தோழர்களே தோழியர்களே! வணக்கம்.
நம்மை மீளாத் துயரில் ஆழ்த்தி மறைந்த நமது மாவட்ட செயலாளர்
திரு S வீராச்சாமி அவர்களின் நினைவினை போற்றும் விதமாகவும் அவரது சேவையை பாராட்டும் விதமாகவும் ஒரு நினைவேந்தல் கூட்டம் 21 9 2024 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மதுரை தல்லாகுளம் Level 4 கட்டிட நுழைவாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்ற அனைத்து தோழர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.
இவண்
மாவட்டச் செயலர். மதுரை மாவட்டச் சங்கம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.