தோழர்களே!
உலகெங்கிலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் அதன் தாக்கம் கட்டுக்குள் அடங்காமல் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. நாமும் நமது தோழர் தோழியர்கள் பலரை இழந்துள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது தோழர்களின் நலனே நமது பிரதான குறிக்கோள். பெருந்தொற்று காரணமாக நமது தோழர்கள் பலர் பேரிழப்புகளை அடைந்துள்ளார்கள். இந்நிலையில் நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி நமது 14 ஆம் மாவட்ட மாநாட்டை 24-7-2021 அன்று நடத்துவது சாத்தியமானதாகவோ சரியானதாகவோ இருக்க முடியாது. மாநாடு நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நாம் அறியாதவை அல்ல.இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் மாநாடு நடத்த முன்னெடுக்கும் செயலிலும் நம்மை இணைத்துக் கொண்டு வயது மூப்பின் காரணமாக நம்மை களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வது சாத்தியமில்லை. மேலும் நமது மாநில மத்திய சங்கங்களும் நம் ஓய்வூதியர்களின் மேலுள்ள அக்கறையால் இக் கொரோனா காலத்தில் கூட்டங்களோ மாநாடுகளோ நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. எனவே பெருந்தொற்று முற்றிலுமாக நீங்கி நல்ல சகஜ நிலை திரும்பியபின் நமது 14 வது மாவட்ட மாநாட்டை நடத்துவதே நமக்கு நன்மையளிக்கும் என்ற காரணத்தால் மாநாடு 24-7-2021 அன்று நடத்த இயலாது.
எனவே நமது 14 வது மாவட்ட மாநாடு நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம்.
- சரியான முறையில் முகக் கவசம் அணிவோம்,
- சமுக இடை வெளி கடைப்பிடிப்போம்,
- அவசியமெனில் மட்டுமே வெளியில் செல்வோம்,
- அடிக்கடி சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வோம்.
- நம்மையும் காத்து மற்றவரையும் காப்போம்.
இவண்
மாவட்டத் தலைவர் மற்றும் செயலர்,
AIBSNLPWA,
மதுரை.