மதுரை
மாவட்ட அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் 11-3-2023
சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு மதுரை பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக மனமகிழ்
மன்றத்தில் மகளிர் தின விழா மற்றும் ஓய்வூதியர் தின விழாக்கள் இரு பெரு விழாக்களாக சிறப்பாக நடத்தப்பட்டன. விழாவில்
50க்கும் மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட சுமார் 300 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
தோழியர்
கல்யாணி சுந்தரேசன் அவர்களின் இறைவணக்கத்திற்கு பின்
மகளிர் தினம் தோழியர் R உமா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழியர் G பானுமதி அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரைக்குப் பின்னர் தலைவர் உமா அவர்கள் தனது தலைமை உரையில்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து மகளிர் தின வரலாறு அதன்
சிறப்புகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார்.
நமது மாவட்டச்சங்க உறுப்பினரும் தமிழ்நாடு
மகளிர் ஆய உறுப்பினருமான மகளிர் தின சிறப்புரையாளர் தோழியர் அக்னஸ் அமலோற்பவம்
அவர்கள் உரை மகாகவி பாரதியின் “தேடிச்சோறு தினம் தின்று..” பாடலுடன் தொடங்கியது.
தாய்மையே பெண்ணின் ஆளுமை என்பதை விளக்கமாக பதிவிட்டார். அவரது அழகு,கற்பு குறித்த கருத்துக்களும்,
பெண்களுக்கு இன்று சமூகத்தால் மறுக்கப்படும் ஆளுமைகளும் இழைக்கப்படும் கொடுமைகளும் பற்றிய விளக்கம் சிந்தனையை தூண்டுவனவாக அமைந்தன. முதுமை
வியாதிகளுக்கு துறைமுகமாவதையும் அதனை உடல்நலம் பேணுவதாலும், எப்போதும் அழகுணர்வுடன்
இருப்பதாலும் சக மனிதனுக்கு உதவி அதில் கிடைக்கும் சந்தோஷத்தாலும் வெற்றி கொள்ளமுடியும்
என்ற அவரது கூற்று மிகையானதல்ல. பட்டினத்தார் கூறியதுபோன்ற சலனமில்லா மனத்துடன், உளநலம்,உணவு,உடற்பயிற்சி,உண்மை என்ற 4 “உ”களை
கடைப்பிடித்தால் முதுமையும் இனிமையே என ஆணித்தரமாக இடித்துரைத்தார். மத்திய மாநில
அரசுகள் இணைந்து நடத்தும் 14567, 104 போன்ற சேவைகளை விளக்கினார்.
முறைப்படுதப்படாத வடவர்கல் வருகையால் தமிழகத்தில் அரங்கேறும் வன்முறைகள்,
வேலைவாய்ப்பு கேள்விக்குறி ஆவது ஆகியவை ஏற்படுவதால் அதனை அரசு முறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரும் காலங்களில் மகளிர் தின
நிகழ்வுக்கு மாவட்டச்சங்கம் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு காலம் கருதி தான் உரையை நிறைவுசெய்தார்.
தோழியர் மகாலக்ஷ்மி அவர்களின் பெண்ணியத்தின் பெருமை பேசும் மகளிர் தினக் கவிதை கரகோஷங்களையும்
பாராட்டையும் பெற்றது.
(கவிதை
முன்னமே குழுவில் பதிவேற்றம் ஆகியுள்ளது.)
ஓய்வூதியற்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், மகளிர் தினமாதலால் மகளிருக்கு மட்டுமான, வினாடி வினா நிகழ்ச்சி தோழியர் ரமாமுத்துக்குமார்
அவர்களால் நடத்தப்பட்டு சரியான விடை கூறியவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
தோழியர்
இந்துராணி சுந்தரராஜ் அவர்கள் சிறப்பான நன்றியுரை நல்கினார்.
மாவட்டச்
சங்கத்தின் சார்பில் மகளிர் தினத்தினை சிறப்பாக நடத்திய தோழியர்கள் கைத்தறியாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மகளிர்
தின நிகழ்வுகள் 11:45 மணிக்கு நிறைவுற்றன.
அதன்
பின்னர் 70 அகவை கடந்த ஓய்வூதியர்களை கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வூதியர்
தினம் மாவட்டத்தலைவர் தோழர் கனியப்பன் தலைமையில் நடைபெற்றது. நமது
மதிப்பிற்குரிய மூத்த தோழர் G R
தர்மராஜன் விழாவில் கலந்து கொண்டார்.. சிறப்பு
பேச்சாளராக மாநிலத்தலைவர் தோழர் சுந்தர
கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.
தோழர்
வீராச்சாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைவர்
தனது உரையில் வரும்
காலங்களில் தனி நிகழ்வாக மகளிர் தினம் கொண்டாடப்படும் என்பதினை பலத்த கரஒலிக்கிடையே அறிவித்தார்.
மாநிலச்செயலரின் பேச்சுக்கு அதிக கால அவகாசம் வேண்டும் என்பதால் தனது உரையினை
சுருக்கமாக முடித்தார்.
மாநிலச்செயலரும்,
சங்கப்பணிகளில் அவருக்கு அர்ப்பணிப்புடன் தன்னால் இயன்ற உதவிகளைப் புரியும் அவரது
துணைவியாரும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர். நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. மகளிர் தின அமைப்புக்குழு
சார்பிலும் மாநிலச்செயலரின்
துணைவியாருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
தோழர்
G R தர்மராஜன் அவர்கள் மாநிலத்தலைவாராக SI ஆக பணி ஓய்வு பெற்ற தோழர் சுவாமிநாதன் அவர்களும் DGM ஆக பணிஓய்வு பெற்ற தோழர் சுந்தரகிருஷ்ணன் மாநிலச்செயலராகவும் இணைந்து பணியாற்றுவது நமது AIBSNLPWA வுக்கு மட்டுமான தனித்துவமானது எனக்கூறி தனது பாராட்டுகளைக்கூறி அவரது சார்பில் மாநிலச்செயலருக்கு பொன்னாடை
அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
மாவட்ட
மாநாட்டு சமயத்தில் பரிசுப்பொருள், ஆண்டு அறிக்கை தணிக்கை செய்யப்பட்ட கணக்கு
விவரம், SUPPLEMENTARAY DIRECTORY
ஆகிவைகளை பொதிந்து கொடுக்க தனது சொந்த செலவில் துணிப்பை வழங்கிய தோழர் சீராளன் அவர்கள் மாநிலச் செயலரால் கௌரவிக்கப்பட்டார்.
மாநிலச்செயலரின்
உரைக்குப்பின் 70 வயது கடந்த ஓய்வூதியர்களில் விழாவிற்கு வந்தவர்கள் மாநிலச்
செயலரால் கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டப்பொருளாளரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது’
அனைவருக்கும்
சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
மாநிலச் செயலர் உரை
1. அதிக உறுப்பினார்களைக் கொண்டு தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மாவட்டமாக மதுரை திகழ்வதை பாராட்டினார்.
2. ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில்
நமது மாவட்டதில் கொடுக்கப்பட்ட 2 பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்திருப்பதாகவும்
மற்ற பிரச்சினைகள் தொடர்ந்து தீர்வுக்கு முயற்சிப்பதாகவும் கூறினார்,
3. மகளிரின் சிறப்பினால் அனுதினமும் மகளிர் தினமே என்றார்.
4. 1.SAMPANN ஏன் என்றும் , அதன் சாதாகபாதகங்களை ஒப்பிட்டு நோக்கினால்
SAMPANN சிறந்தது என காரண காரியங்களுடன் விளக்கினார்.
2.வங்கியிலும் CCA அலுவலகத்திலும் உள்ள ஓய்வூதிர்களின் தரவுகளில்
ஒத்திசைவு இல்லாததால் இன்னும் வங்கியில்
ஓய்வூதியம் பெறும் சிலர்.SAMPANNக்கு மாறவில்லை என்ற விளக்கம் கொடுத்தார். அவர்களும் தரவுகள்
சரிசெய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் SANPANN ல் இணக்கப்படுவர்.
3. SAMPANN ல் இணைந்த
பலரின் தரவுகள் தவறாக பதிவிட்டிருப்பது விரைவில் சரிசெய்யப்படும். CCA அலுவலகத்தில்
ஊழியர் பற்றாக்குறை இருப்பதே கால தாமதத்திற்கு காரணம். SAMPANN ல் இணைந்த அனைவரும் தரவுகளை சரிபார்த்து பிழை
இருக்குமானால் பிழையினைச்சுட்டிக்காட்டி எழுத்து மூலம் CCA
க்கு தெரிவிக்க வேண்டப்படுகிறார்கள்.
4. விரைவில் (மே மாதத்தில்)தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறும்
ஓய்வூதியர்களும் SAMPANN க்கு மாற்றபபட
இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தபால் அலுவலகத்தின் IFSC தேவைப்படுமாதலால் அவர்கள் தபால் அலுவலகங்களை அணுகி வரைவோலை புத்தகம் (CHEQUE
BOOK) பெற்று வைத்துக்கொள்ளவும்.
5.LIFE CERTIFCATE ஐ அதன் காலக்கெடு முடிந்த அடுத்த
மாதத்தின் 10 ம்
தேதிக்குள் சமரப்பித்தல் நல்லது.
6. சரியான மொபைல் எண் இல்லை என்றாலும் ஆதார் எண் சரியாக
இல்லாவிட்டாலும் DIGITAL LIFE CERTIFICATE சமர்ப்பிப்பதில் சிக்கல்
ஏற்படலாம்.
7. மாதத்தின் கடைசி வேலை நாளில் மட்டுமே ஓய்வூதியம்
வழங்கப்பட வேண்டும் என்ற விதியாலும் மேலும் பல நிர்வாகச்சிக்கல்கள் இருப்பதாலும், அனைத்து
வங்கிக்கணக்குகளுக்கும் சென்னை அடையாறு SBI வங்கி மூலமே ஓய்வூதியம்
வரவு வைக்கப்படும் என்பதாலும், மத்திய அரசு ஊழியர் ,மாநில அரசு ஊழியர் , ஓய்வூதியர்
என்ற வரிசையில் இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதால் இதுகாறும் மாதத்தின் கடைசி
நாளில் மதியத்திற்குப் பிறகே ஓய்வூதியம் வரவுவைக்கப்பட்டது. நமது CCA அவர்கள் இம்முறையினை மாற்றி ஓய்வூதியர்களுக்கு முதலில் இச்செயல்பாட்டை
மேற்கொள்ளுமாறு வேண்டியிருப்பதால் இம்மாதம் காலதாமதம் இருக்காது என நம்பலாம்.
8. LIFE CERTIFICATE சரியான நேரத்தில் CCA அலுவலகத்தில் பதிவாகவில்லை
என்றால் SUPPLEMENTARY பில் மூலமே மாதத்தில் ஒரு முறை
மட்டுமே ஓய்வூதியம் வழங்க முடியும் என்பது போன்ற நிர்வாகச்சிக்கல்கள்
பல உள்ளன. எனவே எதிர்பார்ப்பு படி LIFE CERTIFICATE
கொடுத்தவுடன் ஓய்வூதியம் கிடைக்காது. சிறிது கால தாமதம் தவிர்க்கமுடியாதது.
5.
சரியான தரவுகளுடன் குறிப்பிட்ட காலத்தில் DIGITAL LIFE
CERTIFICATE கொடுப்பதே சிறந்தது. முன்போல காகித LIFE
CERTIFICATE கொடுக்கவேண்டுமானால் அதற்கென அங்கீகரிக்கப்பட்ட
அதிகாரிகளின் சான்றளிப்பு அவசியம். வங்கி மேலாளர்களிலும் SBI
வங்கி மேலாளருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது. நமது CCA
இந்த ஆண்டு மட்டும் ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வூதியம் பெறும் மற்ற வங்கி
மேலாளர்களின் சான்றளிப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
6. 1
CGHS திட்டத்திற்கு மாறிக்கொள்வது நல்லது.
2. FMA கேட்டவர்களுக்கு
விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
3. தற்போது மதுரைக்கு CGHS இல்லை என்றாலும் தமிழகத்திலுள்ள
ஏதேனும் ஒரு CGHS ஐ மாற்றி மதுரைக்கு CGHS கிடைக்க முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது ஆறுதலான
விஷயம்.
7. MEDICAL BILL கார்ப்பரேட் அலுவலகத்தால் மட்டுமே பட்டுவாடா செய்யப் படுவதால் SSA அலுவலகங்கள் ERP ல் MEDICAL BILLகளை பதிவிட்டால் மட்டுமே கார்ப்பரேட்
அலுவலகம் அதை வழங்க வழிவகை செய்யும். எனவே SSA அலுவலகங்கள்
ERP ல் MEDICAL BILLகளை அவ்வப்போது பதிவிடவேண்டும்.
பழைய பில் களையும் பதிவிடும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும்
(2022-2023) ஆப்ஷன் கொடுப்பதற்கு 2023 பிப்ரவரி 28 வரை கால நீட்டிப்பு
வழங்கப்பட்டு இருந்தது . இது முந்தைய ஆண்டுகளுக்கு பொருந்தாது.
MRS பண பட்டுவாடா இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும்.
8. DOT ID CARD க்கு
விண்ணப்பித்தவர்களில் முதல் 5000 பேருக்கு வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளன.
9. மத்திய
சங்க செய்திகள்.
1.
ஓய்வூதியமாற்றத்திற்கான நமது போராட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தாலும் அது DOT ல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. அதனால் அடுத்த கட்ட முயற்சிகள்
மத்திய சங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
2. EXTRA INCREMENT வழக்கில் DOT மேல்
முறையீடு செய்திருப்பதாதல் நாம் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.
10. சென்னை
சொசைட்டி யை பொறுத்தவரை மாநிலச்சங்க வழிகாட்டுதல் படி ஒவ்வொரு வரும் தனித்தனியாக
மனுச்செய்யவேண்டும்.
மற்ற
செய்திகள்.
SAMPANN ல் இணைந்த ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியத்திற்கு CCAக்கு மனுச்செய்யவேண்டும். JOINT ACCOUNT
இருக்குமானால் FORM 14 தேவை இல்லை. JOINT ACCOUNT இல்லாதவர்கள் ஒரு DECLARATION கொடுத்தால் போதும்.
எல்லா ஓய்வூதியர்களும் FORM A ல் LIFE TIME ARREARS பெற NOMINATION தரவேண்டும். இதில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் பெயர் இருக்கக்கூடாது.
இந்த படிவம் BSNL AO அவர்களின் கையொப்பத்துடன் (4 நகல்கள்) சமர்ப்பிக்கப்படவேண்டும்