23 -08 -2023 -அன்று நமது அகில இந்திய சங்க அமைப்பு தின விழா காலை 11 மணி அளவில் திருப்பாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் தொடங்கியது.மாநில, மாவட்டச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல திரளாக தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் முதியோர் இல்ல பொறுப்பாளர் திருமதி முத்துமாரி அவர்கள் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நமது மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் திரு சீனிவாசகன் மற்றும் திரு முருகேசன் விழாவில் கலந்து கொண்ட நமது தோழர் தோழர்களுக்கும் இல்லத்தில் வசிப்போர்க்கும் இல்ல பொறுப்பாளர்களுக்கும் இனிப்பு காரம் தேநீர் வழங்கி தங்களது மகிழ்வினை தெரிவித்தனர்.
இல்ல பொறுப்பாளர் திருமதி முத்துமாரி பேசுகையில் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டினை வெகுவாக பாராட்டி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தோழர் தோழர்களுக்கும் இனிப்பு காரம் தேநீர் வழங்கிய திரு சீனிவாசகன், திரு முருகேசன் ஆகியோற்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அதன் பின்னர் மதுரை தபால் தந்தி நகர் செல்லும் வழியில் உள்ள சேவாஸ்ரமம் ஆதரவற்ற மாணவியர்கள் வசிக்கும் இல்லத்திற்கு சென்று அந்த மாணவிகளுக்கு மதிய உணவு அளித்து நமது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தினோம். மாணவியர்களுக்கு உணவு அளிக்க தோழர்கள் தோழியர்கள் பலரும் ஆர்வமுடன் செயல் பட்டு மகிழ்வுற்றனர்.
இவ்விரு நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நமது அகில இந்திய மாநில மாவட்ட சங்கங்கள் முதியோர் நலனிலும் சமூக சேவையிலும் கொண்ட அர்ப்பணிப்பினை வெகுவாக வெளிக்கொண்டு வருகிறது.
விழாவிற்கு நன்கொடை கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் விழா நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்த தோழர்கள் தோழியர்களுக்கு நன்றியை தெரிவிக்க மாவட்ட சங்கம் கடமைப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுகள். விழா நிகழ்வுகளின் சில புகைப்படக் காட்சிகள் கீழே.