மதுரையில் அனைத்துலக மகளிர் தினம் 2025 மார்ச் மாதம் எட்டாம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில் 10:00 மணி முதல் 11 மணி வரையில் திருமதி மகாலட்சுமி
அவர்கள் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிவுகளை
அறிவித்தார். சுமார் 11 மணி அளவில் மகளிர் தின கருத்தரங்கம் மதுரை பிஎஸ்என்எல் பொது மேலாளர்
அலுவலக மன மகிழ் மன்ற அறையில் தோழியர் விசாலாட்சி அவர்கள் தலைமையில் துவங்கியது.
தோழியர் கல்யாணி சுந்தரேசன் அவர்கள் இறை வணக்க பாடல் பாட, தலைவர்
தனது தலைமை தனது உரையை ரத்தினச் சுருக்கமாக நிகழ்த்தினார். தோழிகள் லட்சுமி
அவர்களின் வரவேற்பு உரைக்குப்பின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி சுந்தரவல்லி
அவர்கள் ஐந்து A
1.Assessment of self
& others.
2.Acceptance.
3.Adaptability.
4.Achivement .
5.Appreciation .
என்ற 5A பற்றி விளக்கமாக எடுத்துரைத்து வாழ்வியல் நெறிகளை பற்றிய சிந்தனை
கருத்துக்களை அனைவரின் மனதிலும் ஆழமாக விதைத்தார். அடுத்துப் பேசிய தோழியர் பத்மா அவர்கள் கற்றல் குறைபாடு
உள்ள குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து சிறப்புரை
நிகழ்த்தினார். தோழியர் இந்திராணி சுந்தர்ராஜ் அவர்கள் கருத்தான ஒரு பாடலை பாடி
அனைவரையும் மகிழ்வித்தார். தோழியர் ரமா முத்துக்குமார் சீறிய கருத்துக்கள் கொண்ட
மகளிர் தின சிறப்பு கவிதை வாசித்தார்.
தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி தோழியர் அருணோதயம் உரைக்குப்பின் தோழியர் மதினா
யாஸ்மின் அவர்கள் சிறப்பு வினாடி வினா நடத்தினார். சரியான விடைகள் கூறியவர்களுக்கு
சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தோழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு தோழியர் சுந்தரவருணி அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் சிறப்புடன் நிறைவு பெற்றது. தோழியர் வத்சலா அவர்கள் கேக் வெட்டவைத்து அனைவருக்கும் வழங்கியது விழாவிற்கு மகுடம் வைத்தது போல அமைந்தது.