21-6-14
ஓய்வூதியம்
புதிய வழிமுறைகள்
ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் பெறுவதிலும்
ஓய்வூதிய உத்திரவு PENSION PAYMENT ORDER என்ற PPO பெறுவதிலும் பெரும் தாமதம் நிலவுகின்றது.
தற்போது வங்கிகள்/அஞ்சல் அலுவலகம் மூலமாகவே
PPO ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த நடைமுறையில் மிகுந்த தாமதம் ஏற்படுவதால்
12/06/2014 அன்று ஓய்வூதிய இலாக்காத்துணை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது.
இத்தகைய தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு
இனிமேல் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும்
அலுவலகம் மூலமாகவே ஓய்வூதிய உத்திரவு
வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு அவர்களுக்குரிய PPO மற்றும் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட
உறுதிமொழிப்பத்திரம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்களிடமிருந்து அனுப்பப்படும்.
இதன் மூலம் ஓய்வு பெறும் தோழர்களின்
பெருமளவு சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நன்றி: திருநெல்வெலி மாவட்ட வலைத்தளம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.