Friday 26 February 2016

ரயில்வே பட்ஜெட் - ஒரு கண்ணோட்டம்

ரயில்வே பட்ஜெட்:

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த
 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் 
பல்வேறு பயணிகள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். 
அதன் முக்கியமானவை: 

1. ரயில் பெட்டிகளுக்குள்ளே ஜிபிஎஸ் அடிப்படையிலான காட்சி அமைப்பு, மற்றும் அந்தந்த நேர தகவல்களுக்காக ரயில் ஸ்பீட் நெட்வொர்க் என்ற ஒன்றும் உருவாக்கப்படும். 

2. 2,000 ரயில் நிலையங்களில் மொத்தம் 20,000 காட்சித் திரைகள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு தகவல்களை அளிப்பதில் துல்லியம் அதிகரிக்கப்படவுள்ளது.

3. குழந்தைகளுக்கான உணவு மெனு, குழந்தைகள் உணவு வகைகள் ஆகியவை ரயில்களில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

4. ஐ.ஆர்.சி.டி.சி இ-கேட்டரிங் சேவையை தொடங்கவுள்ளது. இதில் பயணிகளுக்கு பிடித்தமனா உள்ளூர் உணவு வகைகள் கிடைக்கச் செய்யப்படும்.

5. ‘கிளீன் மை கோச்’ திட்டத்தின் படி, ரயிலில் தங்கள் பெட்டிகளில் கழிவறை அசுத்தமாக இருந்தால் சுத்தம் செய்யக்கோரி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

6. பார்-கோட் டிக்கெட்டுகள்; இது எதற்காகவெனில் டிக்கெட்டுகள் எடுக்காமலேயே பயணம் செய்யும் முறைகேட்டைத் தடுக்கவே.

7. மேம்படுத்தப்பட்ட இ.-டிக்கெட்டிங் வசதி. இதன் மூலம் நிமிடத்திற்கு 2,000 டிக்கெட்டுகள் என்பதிலிருந்து நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது. 

8. இந்த ஆண்டில் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை.

9. மூத்த குடிமக்கள் மற்றும் பெண் பயணிகளுக்காக கீழ்ப்படுக்கை வசதிக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. 

10. தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 1,780 புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன.

11. அனைத்து ரயில் நிலையங்களும் சிசிடிவி கண்காணிப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்படும்.

12. ரிசர்வ் செய்ய முடியாத பயணிகளுக்காக நெரிசலான தடங்களில் முழுதும் அன் ரிசர்வ்டு சூப்பர் பாஸ்ட் ரயில்கள் விடப்படும். 

13. ரயில்வே கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.
14. 139 ஹெல்ப்-லைன் எண்கள் வசதியுடன் டிக்கெட் ரத்து செய்யும் வசதி மேம்படுத்தப்படும்.
 
நன்றி:
நெல்லை வலைத்தளம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.