Sunday 29 May 2016

செய்திகள்- நெல்லை மாவட்ட வலை தளத்திலிருந்து

ஏழாவது...ஊதியக்குழு 


மத்திய அரசு ஊழியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட் 7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்துவது சம்பந்தமாக மத்திய அமைச்சரவை செயலர் தலைமையில் குழு ஒன்று  அமைக்கப்பட்டது.

இந்தக்குழு தனது பரிந்துரையை ஜூன் 2016ல் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின் ஜூலை 2016ல் ஊதியக்குழுவின் முடிவுகள் அமுலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள குறைந்த பட்ச அடிப்படை ஊதியமான
 7000த்தை 18000மாக உயர்த்துவதற்கு
 7வது ஊதியக்குழு பரிந்துரை செய்திருந்தது. 
DA ரூ. 8750/= ஆக 125 சதம் உயர்ந்துள்ள நிலையில்..
 7000க்கு 18000 அடிப்படை சம்பளம் 
என்பது மிகவும் குறைவான உயர்வாகும்.  
மொத்த உயர்வு 14.29 சதமேயாகும்.

அடிப்படைச்சம்பளம்        = 7000
DA 125 சதம்                           = 8750
மொத்தம்                               = 15750
15750ல் 14.29 சத உயர்வு   = 2250
மொத்தம்                              = 18000 ( 15750 + 2250)
MULTIPLICATION FACTOR   = 2.57   ( 7000 X  2.57 = 18000)



6வது ஊதியக்குழுவில் 
30 முதல் 40 சதம் வரை ஊதிய உயர்வு கிட்டியது.
 ஆனால் 7வது ஊதியக்குழு மிகக்குறைந்த அளவில்  
சம்பள உயர்வைப் பரிந்துரை செய்துள்ளது. 

இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.  எனவே ஊழியர் தரப்பு  
குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளமாக ரூ.26000/- 
வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஊழியர் தரப்புக் கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்...
அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 20000/=மாக 
 உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் மூலம் MULTIPLICATION FACTOR  
2.57லிருந்து 2.86ஆக உயரும் வாய்ப்புள்ளது.
 (7000 X 2.86 = 20000)

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது 
ஆண்டு உயர்வுத்தொகையை 3 சதத்திலிருந்து 5 சதமாக 
உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள் ஆகஸ்ட் மாதம்  அமுலுக்கு வரும்.. 

இந்திய அஞ்சல் வங்கி PBI

வரும் மார்ச் 2017 முதல் 
இந்திய அஞ்சல் வங்கிச்சேவை துவக்கப்படும் என 
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  

அஞ்சல் துறை நாடு முழுக்க 1,54,939  கிளைகளைக்  கொண்டுள்ளது.
 7000 இந்தியர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் 
அஞ்சல்  துறையின் சேவை நாடு முழுக்க விரிந்து பரந்துள்ளது. 
எனவே அஞ்சல் துறையின் கட்டுமான வசதியைப்  பயன்படுத்தி 
அஞ்சல் வங்கிச்சேவையைத் துவக்க வேண்டும் 
என  2006ம் ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டது. 

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 
அஞ்சல் வங்கிச்சேவை துவக்கம் தள்ளிப்போடப்பட்டு வந்தது. 
கடைசியாக 2015 ஆகஸ்ட்ல் RESERVE BANK OF INDIA 
அஞ்சல்துறைக்கு வங்கிச்சேவை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளது. அனுமதி பெற்ற 18 மாதங்களுக்குள் வங்கிச்சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 2017ல் வங்கிச்சேவையை  
ஆரம்பிக்க அரசு உத்தேசித்துள்ளது.

ஏற்கனவே 2014ல் அஞ்சல் துறை ATM வசதியை
 முக்கிய நகரங்களில் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
அஞ்சல் நிலையங்களில் 90 சதம் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதால் 
அஞ்சல் வங்கி ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வங்கிச்சேவை எளிதில் கிடைக்கும். 

நமது சங்கத்தின் மாநில மாநாடு 


கோயம்புத்தூரில் நடைபெறும் .

ஆகஸ்ட் மாதம் 

23 மற்றும் 24 ஆகிய நாட்களில் 

ஐயப்பா பூஜா  மண்டல் மண்டபம் 

ராம்நகர் 

கோயம்புத்தூர் 

சார்பாளர் கட்டணம்  ரூ. 400 

மாநில சங்க தகவல் 

நன்றி: நெல்லை வலைத்தளம்.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.