Thursday, 31 December 2020

HAPPY NEW YEAR 2021.



 இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்  வாழ்த்துகள் .

Tuesday, 29 December 2020

கண்ணீர் அஞ்சலி.
நமது மாவட்டச் சங்க மூத்த தோழரும், மாவட்டப் பொருளாளர் பொறுப்பினை திறம்பட பல காலமாக தன் உடல் நலிவுகளையும்பொருட்படுத்தாது சிறப்பான பணி புரிந்து  அனைவரின் மனதிலும் நிறைந்தவருமான, மதுரை K புதூர்ஆத்திகுளம் பிரதான சாலை, 5 வது குறுக்குத்தெரு, கதவு ஏண் 5/173 ல் வசித்தவரும், மதுரை தந்தி அலுவலகத்தில் CTM ஆக பணிபுரிந்து பணிநிறைவில் ஓய்வு பெற்றவருமான திரு S ராஜாமணி அவர்கள் உடல் நலம் குன்றிய நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று(28-12-2020, திங்கட்கிழமை) பிற்பகல் 2:20 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது இழப்பு நமது மாவட்டச்சங்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குவோம். அவரைப்பிரிந்து
வாடும் ஆவரது குடும்பத்தார்களுக்கும்,
நமது சங்க உறுப்பினர்களுக்கும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
9486997010.
S .வீராச்சாமி
மாவட்ட செயலர்


Tuesday, 22 December 2020

2019 விருப்ப ஓய்வூதியத்திட்டத்தில் 2020 ஜனவரி31 ல் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் கவனத்திற்கு

2019 விருப்ப ஓய்வூதியத்திட்டத்தில் 2020 ஜனவரி 31 ல் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் அனைவரும் 2021 ஜனவரி மாதத்தில் உயிர் வாழ் சான்றிதழ் தமிழ் நாடு CCA அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தடையின்றி ஓய்வூதியம் பெற 2021 ஜனவரி 2௦ க்கு முன்   உயிர் வாழ் சான்றிதழ் தமிழ் நாடு CCA அவர்களுக்கு  அனுப்புதல் நலம்.



Thursday, 3 December 2020

 

Medical bill Payment for Outdoor treatment in respect
of Pensioners for the P/E 31.03.2019 is likely to be
 made by 05.12.2020. This is applicable to all BSNL Circles like TNCircle, STR,  STP ,CH.TD etc.