Monday 15 March 2021

 

AIBSNLPWA , மதுரை மாவட்டத்தின் சார்பாக உலக மகளிர் தினம் மற்றும் ஓய்வூதியர் தினம் ஆகிய இரண்டு விழாக்களும் மிக சிறப்பாக 14-03-2021 அன்று PGM  அலுவலக TRC  ஹாலில் காலை 10-00 மணிக்கு  நடைபெற்றது. திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்களின் இறை வணக்க பாடலுடன் நிகழ்ச்சிகள் துவங்கின

மதுரை மாவட்ட செயலர் தோழர் S வீராச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அடுத்து தமிழ் மாநில உதவி செயலர் தோழர் சூரியன் உலக மகளிர் தினம் மார்ச் 8 அதைத்தான் நாம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம் என்று கூறி பெண்களின் பிரச்சினைகளை எடுத்து விவரித்தார். தமிழ் மாநில சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சங்கங்களின் பெருமைகளை அழகாக எடுத்துரைத்தார். திரு  அண்ணாமலை DGM  அவர்கள் தோழர் சூரியனுக்கு பொன்னாடை போர்த்தினார்.

பிறகு உலக மகளிர் தின விழா திருமதி K .R கலாவதி அவர்களின் சீரிய தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

திருமதி. மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் .தோழர்

G பூமிராஜன் DGM அவர்களையும் மற்ற தோழர் தோழியற்களை வரவேற்று பேசினார். சுய கௌரவமே மகளிருக்கு மகிழ்ச்சி தரும் . இன்னமும் 33 சதவீத இட ஒதுக்கீனம்  அளிக்கப்படாதது குறித்து தமது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.  திருமதி ரேவதி அவர்களின் உரைக்குப் பின் திருமதி ரமா முத்துகுமார் அவர்கள் தற்காலத்தில் பெண்கள் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்து வருவதாக கூறினார் .பரஸ்பரம் அன்பு பாசம் , நேசம் .கருணை இவைகளில்தான் தாய்மை மிளிர்வதாக கூறினார் .மகளிர் அனைவரும் ஆதரவற்றோருக்கு உதவி புரிவதை கருத்தாக கொள்வோம் என்று பேசி முடித்தார்.

திருமதி R. வத்சலா  அவர்கள் பெண்மையை போற்றும் கவிதை ஒன்றை வாசித்தார். தலைமை வகித்த தோழியர் கலாவதி அவர்கள் மேடையில் பேசிய மங்கையர்களின் உரை வீச்சுகளை பெருமை பாராட்டி பேசி , பெண்கள் தங்களுக்கு வயதாகி விட்டது என்று உணராமல் இளமை உணர்வுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி பேசி தம் தலைமை உரையை முடித்துக்கொண்டார் .திருமதி சுந்தரவருணி அவர்களின் நன்றி உரையுடன் மகளிர் விழா இனிதே முடிவுற்றது.

மகளிர் கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மகளிருக்கு மாவட்டத்தின் சார்பில் கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டது.

ஓய்வூதியர் தின விழா மதுரை மாவட்ட தலைவர் தோழர் GR தர்மராஜன் அவர்கள் தலைமையில் துவங்கியது. மகளிர் விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைத்து மகளிருக்கும் நன்றி பாராட்டினார். இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தஞ்சை மாவட்ட AIBSNLPWA செயலர்  தோழர் v .சுவாமிநாதன் அவர்களையும் மற்றும் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். தோழர் சுவாமிநாதன் அவர்களை பற்றிய வாழ்த்து மடலை தோழியர் மதினா யாஸ்மின் அவர்கள் மிக அருமையாக ஏற்ற இறக்கத்துடன் கணீரென்ற குரலில் வாசித்தார் .

தோழர் சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி , தோழர்கள் கண்ணன் மற்றும் பிச்சைமணி   அவர்கள் ஏலக்காய் மாலை மற்றும் சால்வை அணிவித்தார்கள். தோழர் சூரியன் வாழ்த்து மடலையும் , தோழர் சுந்தரேசன் மதுரை மீனாட்சி அம்மன் போட்டோ படத்தையும் அளித்து கௌரவப்படுத்தினார்கள். தஞ்சை மாவட்ட பொருளாளர் தோழர் சீனு மற்றும் உடன் வந்திருந்த மாவட்ட நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.

தோழர் சுவாமிநாதன் நம் மாவட்ட தலைவர் தோழர் GRD  மற்றும் மாவட்ட செயலர் வீராச்சாமி அவர்களுக்கு பொன்னாடை அளித்து கௌரவப்படுத்தினார். மாவட்ட நிர்வாகி பிரான்சிஸ் சேவியர் அவர்கள் ஓய்வூதியர் தின பெருமைகளை எடுத்துரைத்தார் . தோழர் சுவாமிநாதன் தஞ்சை தரணியில் ஏழைமக்களுக்கு , அனாதைகளுக்கு , முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஆற்றிவரும் தொண்டு குறித்து பேசினார்.தலைவர் GRD  அவர்களும் சுவாமிநாதன் குறித்து நீண்ட புகழ் உரை ஆற்றினார் .

சுவாமிநாதன் அவர்கள் தமது ஏற்புரையில் , மதுரை மாவட்ட சங்கம் அளித்துள்ள பாராட்டுக்களை தம்முடைய 40 ஆண்டுகளுக்கான சேவைக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்வதாக கூறினார் .Dr .முத்துலட்சுமி  அவர்கள் பெண்ணினத்திற்கு ஆற்றிய சேவைகளை எடுத்துரைத்தார் . தாயைப்பற்றி பட்டினத்தார் பாடியுள்ள கவிதையை உணர்ச்சிகரமாக பாடி விளக்க உரையாற்றினார்.

நமக்கு ஓய்வூதியம் போராடி பெற்றுத்தந்த தலைவர்கள் OP குப்தா மற்றும் வள்ளிநாயகம் அவர்களை பாராட்டினார் . 4 வது ஊதிய குழு பரிந்துரைக்குப் பிறகுதான்  ஓய்வூதியத்திற்கு DA கிடைத்தது. Family Pension குறித்தும் பேசினார் .

விழாவின் முத்தாய்ப்பாக இந்த ஆண்டு 70 வயது பூர்த்தியாகும் ஓய்வூதியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் . தோழர் சீனிவாசன் நன்றியுரை கூற விழாக்கள் இனிய நினைவுகளுடன் முடிவுற்றது.

செவிக்கு விருந்தளித்தபின்  வயிற்றுக்கும் இன்சுவை உணவு பரிமாறப்பட்டது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.