அதிகப்படி வருடாந்திர ஊதிய உயர்வு வழக்கு(Extra increment case) ல் தீர்ப்பு நகல்.
இந்த வழக்கு வெற்றி , தாக்கம் குறித்த விளக்கம்
ONE INCREMENT
whatsapp மூலம் நமது extra increment வழக்கு வெற்றி பற்றி குறிப்பிட்டிருந்தோம் .எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். சில தோழர்கள் அந்த மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள் .முத்தியாலு மாநில செயலராக இருந்த பொழுது இந்த வழக்கு மாநிலச்சங்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்டதால் எல்லோரையும் விட எனக்கு மகிழ்ச்சி அதிகமே .
சிலதோழர்கள் இதுபற்றி சில கேள்விகள் கேட்கிறார்கள்.சிலருக்கு இந்த பிரச்சனை தெரியவில்லை என்கிறார்கள்.எனவே அதைப்பற்றிய சிறிய விளக்கம் தரவே இந்தப்பதிவு.
1979 ம் ஆண்டு NFPTE சம்மேளனத்தின் வெள்ளிவிழா பாட்னா நகரில் நடைபெற்றது .அப்போது சம்மேளனப் பொதுச்செயலராக இருந்த தோழர் குப்தா தபால் ,தந்தி தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு பதவி உயர்வுகளாவது பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .மாநாடு அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது ,அப்போதெல்லாம் ஒரு பதவி உயர்வும் ,ஊதியத்தில் தேக்கநிலையும் தன இருந்தது.எனவே எல்லோரும் வரவேற்றனர்.அப்போது அஞ்சல் ,தந்தி என்று இலாகா பிரியாமல் ஒன்றாக இருந்தது.
பல்வேறு இயக்கங்களுக்குப்பிறகு 16 ஆண்டில் முதல் பதவி உயர்வு என்றும் 2 வது பதவிஉயர்வுக்கு மாற்றாக மேலாளர்களுக்கு ரூ 35 ,சூபர்வைசர் அலவன்ஸ் SI க்கு ரூ 25 என்று முதலில் ஏற்கப்பட்டது .இந்த பதவி உயர்வு 30-11-1983 முதல் அமுலுக்கு வந்தது
16.10.1990 முதல் 26 ஆண்டுகள் முடிந்தால் அடுத்த பதவி உயர்வு 20.10.1990 முதல் அமுலுக்கு வந்தது 16 ஆண்டுகள் OTBP (கிரேடு II ) 26 ஆண்டுகள் (கிரேடு III ) என்று சொல்லப்பட்டது GRADE III அதாவது BCR வாங்கியவர்களில் 10% ஊழியர்களுக்கு GRADE IV வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
GRADE IV பதவி உயர்வென்பது பல தோழர்களுக்கு கிடைக்கவில்லை எனவே GRADE IV பதவிஉயர்வு கிடைத்தால் ஒரு ஆண்டு உயர்வு தொகை பலன் கிடைக்கும்.அதே பலனை BCR பதவி உயர்வு பெற்று GRADE IV
பெற முடியாதவர்களுக்கும் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்பு தரவேண்டும் ..அதாவது ஒரு ஆண்டு உயர்வு தொகை தரவேண்டும் என்று BSNL அமைத்த பிறகு நடைபெற்ற 2 வது தேசியக்கவுன்சில் கூட்டத்தில் தோழர் குப்தா NFTE சங்கத்தின் கோரிக்கையாக எழுப்பினார்.இந்த தேசிய கவுன்சில் கூட்டம் 28.05.2003 ல் நடைபெற்றது.கோரிக்கை ஏற்கப்பட்டது .18.11.2003 அன்று EXTRA INCREMENT என்ற பெயரில் உத்தரவு வெளியிடப்பட்டது .BCR ல் ஓராண்டு நிறைவு செய்திருக்கவேண்டும் என்பதும் இந்த EXTRA INCREMENT பென்ஷன் மற்ற பலன்களுக்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் BSNL உத்தரவு .BSNL போட்ட உத்தரவை DOT ஏற்க மறுத்துவிட்டது.நமது தோழர்கள் ஓய்வு பெறும்போது BSNL லிருந்து CCA அலுவலகத்திற்கு பென்ஷன் நிர்ணயம் செய்து அனுப்பப்படும்.ஆனால் CCA அலுவலகத்தில் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை ( EXTRA INCREMENT ) வெட்டப்பட்டு LPD குறைத்து பென்ஷன் நிர்ணயம் செய்தது.வாங்கிய உத்தரவு பயனில்லாமல் போய்விட்டது .
இதை நமது தமிழ் மாநில சங்கம்தான் CCA விடம் எடுத்தது.தோழர்கள் D.கோபாலகிருஷ்ணன் ,ராமராவ் இருவரும் தான் முதலில் எழுப்பினார்கள்.ஒவ்வொரு முறையும் FINANCE MEMBER சென்னை வரும்போது இது பற்றி விவாதித்தோம் .அப்போது PCCA வாக இருந்த உயர்திரு அழகர்சாமி அவர்கள் நமது கோரிக்கை நியாயம் என்று பரிந்துரைத்தார் .DOT நிர்வாகம் 27.07.2009 ல் ஒரு EXTRA INCREMENT ஐ கணக்கிலெடுத்துக்கொண்டு பென்ஷன் நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவு வந்ததும் ஒரு EXTRA INCREMENT கொடுக்கப்பட்டவர்களுடைய பென்ஷன் மாற்றியமைக்கப்பட்டது .தமிழ்நாட்டில்தான் முதலில் செய்யப்பட்டது .பிறகுதான் மற்ற நடைமுறைப்படுத்தப்பட்டது .
78.2% அகவிலைப்படி இணைப்பிற்காக நமது சங்கம் போராடி 2016 ம் ஆண்டு அதற்கான உத்தரவு பெறப்பட்டது
78.2% அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்பட்டு 6000 பேருக்குமேல் பெரும்பாலான ஓய்வூதியர்களுக்கு புதிய PPO அனுப்பப்பட்டு நிலுவைத்தொகையும் பெற்றுவிட்டனர் .ஏறத்தாழ 650 ஓய்வூதியர்களுக்கு 78.2% நிர்ணயம் செய்ய வேண்டிய தருணத்தில் DOT இடமிருந்து வந்த உத்தரவைக் குறிப்பிட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு EXTRA INCREMENT ஐ வெட்டி விட்டு 78.2% நிர்ணயம் செய்ய உத்தரவிட்டு பைல்களை விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று CCA அலுவலகம் மாவட்டங்களுக்கு திருப்பியது.
ஓராண்டு அல்லது அதற்குமுன் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து அவர்களுக்குரிய தொகைக்கு அதிகமாக ,தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உசசநீதிமன்றத் தீர்ப்பையும் அதையே DOP&T OMNO.2/3/2016 RNO.18/3/2015 STT (PAY) ன்படியும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டி CCA நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினோம்,பேசினோம் நிர்வாகம் ஏற்காததால் நீதிமன்றத்தில் 7.1.2017 அன்று வழக்கு தொடுத்தோம் .அந்த வழக்கின் முடிவின் அடிப்படையில் CCA வுக்குக் கடிதம் கொடுத்தோம் .அதன்பின் PCCA 9/10/2017 அன்று நிலுவையைப் பிடிக்கவில்லை,பென்ஷனை குறைக்கவில்லை என ( SPEAKING ORDER ) உறுதியளித்தார்.
3/12/2017 அன்று EXTRA INCREMENT வாங்கியவர்களுக்கு 78.2% அகவிலைப்படி இணைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய போது PCCA திரு நிரஞ்சனா அவர்கள் 1/1/2017 முதல் EXTRA INCREMENT வெட்டிவிட்டு 78.2 சத அகவிலைப்படி இணைப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் .
PCCA அவர்கள் டெல்லிக்கு எழுதிய கடிதத்தில் 10/06/2013 முதல் அகவிலைப்படி இணைப்பு வழங்காமல்
1/1/2017 முதல் கொடுப்பதாகவும் EXTRA INCREMENT இல்லாமல் கொடுப்பதாகவும் பின்னர் வருங்காலத்தில் பிடித்தம் செய்ய வேண்டி இருந்தால் 10/06/2013 முதல் வழங்கும் நிலுவையில் சமன் செய்யலாம் என்றும் அதனால் ஓய்வூதியர்களுக்கு பாதிப்பு ( HARDSHIP) இருக்காது என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பென்ஷன் குறைப்பது தற்போது கொடுக்கக்கூடிய 78.2 % இணைப்பினால் சரியாகிவிடும் என்றும் வரிகட்டுபவர்களின் பணம் இதில் அடங்குகிறது என்பதால் ( TAX PAYING MONEY ) அதிகம் கொடுத்ததை சரிக்கட்ட உதவும் என்றும் DOT க்குக் கடிதம் எழுதியிருந்தார் .இதிலிருந்து PCCA நிர்வாகத்தின் நோக்கம் EXTRA INCREMENT ஐ வெட்டுவது என்பதும் பென்ஷனைக் குறைப்பது என்பதும் தெளிவாக தெரிந்தது.
எனவே நமது மாநில சங்கம் உடனடியாக ஆலோசனை செய்து மீண்டும் வழக்கு தொடுத்தது EXTRA INCREMENT ஐ வெட்டக்கூடாது .நிலுவை பிடித்தம் கூடாது 78.2 % அகவிலைப்படி இணைப்பு வழங்காதவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 29/12/2017 அன்று வழக்குத் தொடுத்தோம் .
7/7/2018 அன்று முதல் அமர்வு நடைபெற்றது பல அமர்வுகள் தேதியிடப்பட்டு பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக 3/2/2022 அன்று விடுதி வாக்கு வாதம் (argument) நடைபெற்றது .
17/02/2022 அன்று OA allowed என்று வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையான தீர்ப்பு விவரம் கிடைக்கும்
CAT ( Central Administrative Tribunal ) அமைக்கப்பட்டதே கலவரையத்தை தவிர்பதற்குத்தான் அதிலும் இப்போது ஆண்டுக்கணக்கில் தாமதமாகிறது நமது வழக்கில் இரு நீதிபதிகள் இருக்கவேண்டும் இரண்டாவது நீதிபதி இல்லாததால் ஏறத்தாழ ஓராண்டும் கொரோனா தொற்று காரணமாக ஓராண்டும் மேலும் தாமதமாகி மொத்தம் 5 ஆண்டுகளாகிவிட்டன .
இந்த வழக்கில் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவர் என்ற முறையில்தோழர் . முத்தியாலு ,CTO பகுதியை சார்ந்த தோழர் . R.டெல்லிராஜ்,சென்னை தொலைபேசி மாநிலத்தை சேர்ந்த தோழர் அட்சயகுமார் அவர்களும் கையெழுத்திட்டோம் .
வழக்கறிஞ்ர் திரு கார்த்திக் ராஜன் அவர்கள் நமது வலக்கை வெற்றியாக்கியமைக்கு நமது ஓய்வூதியர் களின் நெஞ்சு நிறைந்த நன்றி .
இந்த வழக்கில் துவக்கம் முதல் வழக்கறிஞ்ரை நியமிப்பது,தொடர்ந்து அவர்களோடு தொடர்பு கொள்வது அமர்வு தேதிகளை தெரிவிப்பது அமர்வு நாட்களில் நீதிமன்றம் செல்வது.என்று அயராது பணி செய்த முன்னர் மாநில துணை தலைவரும்,இந்நாள் அகில இந்திய துணை தலைவருமான தோலார் சுகுமாரன் அவர்களுக்கும்
இந்த வழக்கை முதலில் தமிழ் மாநில நிர்வாகத்துடன் விவாதித்து வழக்கிற்கு ஆவணக்களை தயாரிப்பது தேவையான விளக்கங்களை வழக்கறினருக்கு வழங்குவது என எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்தது தோழர் D.கோபாலகிருஷ்னன் ,அகில இந்திய துணை தலைவர் ஆவார் .அவர்களுக்கு நமது நெஞ்சு நிறை நன்றி .
நமது பொது செயலாளராய் இருந்த தோழர் G .நடராஜன் ,நமது மாநில சங்க தலைவர் வழக்கு தொடுக்கும் போதும் தோழர் ராமராவ் தான் இன்றும் அவர்தான் வழக்கின் அமர்வின் போதும் பலவற்றிற்கு வந்திருந்து நேரில் பார்த்தவர்,நீதிபதியிடம் கூட பேசியவர் அவர்களும் நன்றி .வழக்கு அமர்வுகளில் போது நமது மாநில .
செயலர் தோழர் R.வெங்கடாசலம் ,தோழர்கள்.சுந்தரகிரிஷ்ணன்,கிருஷ்ணமூர்த்தி,சம்பத்குமார்,ரத்னா,அவர்களுக்கும் நன்றி.
இந்த வழக்கு தாமதமான காலத்தில் ஒரு உறுதிமொழி கொடுத்து சகோதர சங்கத்தை சேர்ந்த சிலர் வாங்கிவிட்டனர்.ஆனால் நமது சங்கத்தை சார்ந்த அனைவரும் பொறுமை காத்ததற்கு நன்றி.
அன்புள்ள தோழர்களே ,இந்த வழக்கு எதோ 700 பேருக்கு EXTRA INCREMRNT வாங்குவதற்கானது என்றும் யாரும் எண்ண வேண்டாம் .இந்த வழக்கை நாம் நடத்தி பெறாமலிருந்தால் EXTRA INCREMRNTவழங்கிய 6000 பேருக்கும் அவர்களுடைய EXTRA INCREMRNT வெட்டப்பட்டு பென்சன் குறைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொகை பிடித்தம் செய்யப்படும் என்று உணர்ந்தே வழக்கு தொடுத்தோம் .
போராடி பெற்ற உரிமையை ,கூட்டு ஆலோசனைக்குழு மூலம் பெற்ற ஒன்றை நிர்வாகம் எதேட்சையாக மாற்றுவதையும் ,மறுப்பதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும் .நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நமது அமைப்பு என்றும் சளைக்காது போராடும் ஓய்வூதியர்களின் ஒற்றுமையே நமது பலம்
தோழமையுடன்
K.முத்தியாலு
இணை பொதுச்செயலாளர்
அகில இந்திய BSNL
ஓய்வூதியர் நல சங்கம்
சென்னை