Friday 11 March 2022

பென்ஷன் மாற்றத்திற்கான நமது முயற்சிகள்.

 பென்ஷன் மாற்றத்திற்கு வழக்கு தொடுத்ததுடன் நில்லாத   நம்  முயற்சிகள் 

திருச்சியில் நமது சங்க கூட்டத்தில் நமது அழைப்பின் பேரில் கலந்து  கொண்ட ஹிந்து பத்திரிகையின் மூத்த நிருபர் திரு  C ஜெய்சங்கர் அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஹிந்து பத்திரிகையில் நமது                கோரிக்கை  குறித்த செய்தி வெளியிட்டதுடன் தொலைத்தொடர்புத்துறை செயலர் திரு  K ராஜாராமன் அவர்களுடனும் நமது கோரிக்கையின் நியாயம் பற்றி பேசி நமக்கு உதவும்படி கோரியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.  

நமக்கு உதவும் படி வேண்டி பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளோம். 

1 . ஆந்திரா, காக்கிநாடா பாராளுமன்ற உறுப்பினர் 

திருமதி. வாங்க கீதா விஸ்வநாத் (Smt Vanga Geeta Viswanath) அவர்கள்

நமது நியாயமான கோரிக்கைகளை  பாராளுமன்றத்தில் பேசியதோடல்லாமல் நமது துறை மத்திய  அமைச்சர், தொலைத்தொடர்புத்துறை தலைவர், ஊய்வூதியார் நலத்துறை செயலர் ஆகியோரையும்  சந்தித்து விவாதித்து சாதகமான முடிவெடுக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.  





2 ஆந்திரா , அனந்தபூர்   பாராளுமன்ற உறுப்பினர் 

BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் 01-01-2017 லிருந்து,  ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி செய்ய வேண்டும் என்று ஆந்திர MP ( அனந்தபூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ) திரு தலரி ரங்கையா அவர்கள் நம் துறை அமைச்சர் மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு  கடிதம்எழுதியுள்ளார் .   இது விஷயமாக விரைவில் DOT செயலாளருக்கும், DOP & PW செயலருக்கும் கடிதம் எழுத இருக்கிறார் . அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் .


மேலும் ஆந்திரா ,கர்னூல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சீவ் குமார்               (Dr. Sanjeev Kumar MP Karnool)அவர்களையும்



தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு K சுப்பராயன் அவர்களையும் சந்தித்து 
 ஏழாவது சம்பளக்கமிஷன்  பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட அமைச்சர் மற்றும் தொலை தொடர்பு துறை செயலரிடம் பேசவும் , கடிதங்கள் மூலம் அழுத்தம் தரவும் கோரியிருக்கிறோம்.







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.