Thursday, 5 January 2023

 


தோழர்களே,

4-1-2023 அன்று காலை சுமார் 11-30 மணி அளவில் நமது மாவட்டச் செயலர், மாநில உதவிச் செயலர்  மற்றும் நமது அமைப்பின் முன்னனித் தோழர்கள் மதுரை BSNL பொது மேலாளர் அவர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவரிடம் MRS திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய மருத்துவப் படி, மருத்துவ சிகிச்சைக்கான செலவினை சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் திரும்ப அளித்தல் ஆகியவை கிடைக்கப் பெறுவதில் உள்ள காலதாமதம் குறித்து விவாதித்தனர்.

பொது மேலாளர் அவர்கள் , துணைப் பொது மேலாளர் நிதி அவர்களை அறைக்கு வரவழைத்து இது குறித்து விவாதித்தார்.

அப்போது துணைப் பொது மேலாளர் அவர்கள் சுமார் 7638 நபர்களுக்கான மூன்று ஆண்டுக்கான மருத்துவப்படி, மருத்துவ சிகிச்சைக்கான பில் விவரங்கள், கண் சிகிச்சைக்கான பில் விவரங்கள் ஆகியவை முழுமையாக ERP ல் பதிவிடப்பட்டு விட்டதாகவும் எஞ்சியுள்ள மருத்து சிகிச்சை பில்கள் இந்த ஜனவரி மாத இறுதிக்குள்  பதிவிடப்படும் எனவும் உறுதியளித்தார். பதிவிடுவதுடன் நின்று விடாமல்  விரைவில் ஓய்வூதியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆவன செய்ய வேண்டுமாய் நமது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

யார் யாருக்கு என்னென்ன பரிந்துரை ERPயில் பதிவிடப்பட்டுள்ளது என்ற விவரம் நமது தரப்பில்  கோரப்பட்டது.

அந்தப்பட்டியல் ERP யிலிருந்து எடுத்து வழங்குவதற்கு வழிவகை இல்லை என்றும் அனைத்து பில்களையும் இம்மாத இறுதிக்குள் கண்டிப்பாக அனுப்பி பணம் விரைவில் கிடைக்க தங்களால் இயன்றதை செய்வதாகவும் பொது மேலாளரும்  துணைப் பொது  மேலாளரும் உறுதியளித்தனர்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
S .வீராச்சாமி 
மாவட்ட செயலர் 
AIBSNLPWA ,
மதுரை மாவட்டம் 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.