AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கம் ஓய்வூதியர் தின சிறப்பு விழாவை மிக பிரமாண்டமான முறையில் " ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் " 05-01-2024 காலை 10-00 மணிக்கு நடத்தியது. மாவட்ட சங்க கல்வெட்டு அகில இந்திய தலைவர் தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . சங்கத் கொடியை மதுரை மாவட்ட சங்க ஆலோசகர் தோழர் G.R .தர்மராஜன் அவர்கள் விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார் பிறகு விழா மண்டபத்தில் மாவட்ட தலைவர் தோழர் கன்னியப்பன் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் துவங்கியது . மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார் .
முதலாவதாக சமீப காலங்களில் இயற்கை எய்திய தோழர்கள் , தலைவர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஆலோசகர் தோழர் G.R தர்மராஜன் உரை நிகழ்த்தி கூட்டத்தை துவக்கி வைத்தார் மாநில செயலர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தோழர் K .முத்தியாலு, அகில இந்திய துணைத் தலைவர் ஆகியோர் பேசினார்கள் . இந்த வருடம் அக்காவை 70 ஐ அடைந்துள்ள தோழர்கள் துண்டு அணிவிக்கப்பட்டு , பரிசு பொருளுடன் தலைவர்களால் கவுரவிக்கப்பட்டார்கள். அகில இந்திய தலைவர் தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்களின் நீண்ட உரைக்குப்பின் கூட்டம் மாநில செயலரின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
450 தோழர்களுக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களின் உரைகளை கேட்டது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். கூட்டத்திற்கு வந்திருந்த அத்துணை தோழர்களுக்கு மதுரையின் பாரம்பரிய உபசரிப்புடன் அறுசுவை உணவு சூடாக , சுவையாக பரிமாறப்பட்டது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.