Tuesday, 14 May 2024

 


 One Crore Coin: A Symbol of Commitment and Trust*

The ability to raise one crore in just 40 days for the legal fund to pursue the pension revision case is an extraordinary achievement for our pensioners' association. This remarkable feat is akin to minting a special coin—one side representing the total commitment of our membership, and the other side symbolizing the most trusted leadership guiding us.

On one side of this one crore coin lies the unwavering dedication and support of our members, who have generously contributed to our cause with just a phone call or a message on WhatsApp. Their digital donations have streamlined the collection process, reflecting our adaptability and efficiency as an organization.

On the other side of the coin shines the leadership that has earned our trust and respect. Their steadfast guidance and vision have united us in pursuit of our justified demand for pension revision.

Together, these two sides of the one crore coin illuminate our path forward, affirming our destiny to achieve our rightful goal. With such strong support and determination, success is not just a possibility—it's inevitable.

Congratulations to all on this momentous achievement!

V Vara Prasad // GS

















Friday, 3 May 2024

1-5-2024 மதுரையில் மேதினம்

 மதுரையில் மே தின விழா

 1-5-2024  அன்று காலை    10 :30 மணி அளவில் BSNL பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மே தின விழா மாவட்ட உப தலைவர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 70க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர்   திரு வி சீனிவாசகன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் தனது முன்னுரையில் மே தின வரலாறு பற்றி எடுத்துரைத்தார். அதன் பின்னர் நமது மாவட்ட கௌரவத் தலைவரும் மூத்த தோழருமான திரு G R தர்மராஜன் அவர்களால் நமது சங்க கொடி புதிதாக நிறுவப்பட்டுள்ள நமது சங்க கொடி கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தோழர் தர்மராஜன் தனது உரையில் மே தின சிறப்பு பற்றி எடுத்துரைத்தார் பின்னால் பேசிய மாவட்டச் செயலர் தோழர் வீராசாமி நமது மாவட்ட சங்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் கொடிமரம் ஆகியவை நிறுவ உதவி செய்த தோழர்களுக்கும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். விழா நிறைவில் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் வடையும் வெப்பத்தை தணிக்கும் வகையில் மோரும் வழங்கப்பட்டது வடைக்கான செலவினை தோழர் தர்மராஜன் ஏற்றுக் கொண்டார். மோர் வழங்குவதற்கான செலவு உப தலைவர் தோழர் கண்ணன் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில் மோர் வழங்கியது தோழர்களின் பாராட்டினை பெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வடையும் மோரும் வழங்கிய தோழர்களுக்கு நன்றிகள் பல பல. 

விழாவின் புகைப்பட தொகுப்பு கீழே உள்ளது











Thursday, 2 May 2024

 For Revision Of Pension due to 78.2% IDA Merger.,

வணக்கம்.

78.2 % IDA உடன் Extra Increment சேர்த்து சில ஓய்வு ஊதியர்களுக்கு, pension revision10.6.2013 முதல் வழங்காதது குறித்து, நமது மத்திய சங்கமும், மாநில சங்கமும் நமது வழக்கில் மாண்பு மிகு சென்னை CAT 17.02.2022 நமக்கு சாதாகமாக நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பிறகு பலமுறை அன்றைய CCA & PCCA  அவர்களை சந்தித்து  பேசிய பிறகும் எந்த பயனு மில்லாமல், DOT நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மீண்டும், மீண்டும் அதிகாரிகள் மாற்றப்பட்ட நேரங்களில் எல்லாம், பல்வேறு கட்டங்களில் PCCA/CCA வை   சந்தித்து  COM.  DG, COM. சுகுமாரன்,மற்றும் CS, RV, Muthialu, ராமராவ் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். ஒரு கட்டத்தில், PCCA மகாராஷ்டிரா ஒப்புக்கொண்ட பின்னரும் எதையும் நிறை வேற்றவில்லை. இறுதியாக நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் Extra Increment கொடுப்பதை தற்பொழுது பரிசீலிக்க இயலாது என்று Jt. CCA கூறினார்.

நமது, பல தடவை  முயற்சிக்கு பின்னர் எக்ஸ்ட்ரா increment இல்லாமல் 78.2 சதம் ஓய்வு ஊதிய மாற்றம் கொடுப்பதற்கு  23.02.2024 ஸ்ரீமதி கௌதமி பாலஸ்ரீ  JT.CCA PENSION அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நமது மத்திய சங்க நிர்வாகிகள், டெல்லியில் Member சர்வீஸ் 12.02.2023 அன்றைய சந்திப்பில்,எக்ஸ்ட்ரா increment சேர்த்து 78.2% revision சாதகமாக வரும் என்பதால் நாம் பொறுத்திருந்தோம். மத்திய சங்க வேண்டுகோள் படி, 07.03.2024 அன்று PCCA  TN உடன் DOT மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் Comrades. DG, A. சுகுமாரன், CS கலந்து கொண்டனர். Extra increment உடன் 78.2% மாற்றம் கொடுக்கும் படி கேட்டு கொள்ளப்பட்டது. கடிதம் கொடுத்தோம்.

24.03.2024 அன்று டெல்லியில் இதுபற்றி விவாதிக்க DOT HQrs இல், DDG EST, JTCCA, CMD BSNL, UNDER SECY , DGM Finance DOT, கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகும் நமது மத்திய சங்க நிர்வாகி, DDG EST அணுகி விசாரித்ததில்,DDG அவர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார் . எனவே,தமிழ் மாநில செயலாளர்  10.04.2023 அன்று Jt.CCA சந்தித்து பேசியதில், நீதி மன்றத்தில்அப்பீல் இருப்பதால், DOT HQrs இதில் எந்த Direction கொடுப்பதாக தெரியவில்லை என்பது தெரிய வந்தது.

நமது வேண்டுகோளுக்கிணங்க, Feb24 அன்று கூறியபடி extra increment இல்லாமல், pension revision 78.2% அடிப்படையில் செய்து கொடுப்பதாகவம், ஒரு request லெட்டர் சம்பந்தப்பட்ட வர்கள் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். OFFICIAL COMMUNICATION தேவை என்று மாநில சங்கம் கேட்டு கொண்டது. இது தற்காலிக முடிவு. அப்பீல் தீர்ப்புக்கு பின்,increment முடிவு செய்யப்படும். இன்று CCA அலுவலகம் அவர்களது, Website இல் மாதிரி படிவம், பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதை கீழே  கொடுத்துள்ளோம் மாவட்ட செயலர்கள், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக விண்ணைப்பிக்க சொல்லவும். இணைப்பு எதுவும் தேவை இல்லை. பெயர், PPO NO  விவரம் நமக்கு தேவை. இது ஒரு interim relief. அப்பீல் மீது counter reply நமது வழக்கறிஞர் தயார் செய்து வருகிறார். வழக்கு விசயத்தில் Com. சுகுமாரன் அவர்கள் உறுதுணையாக, உள்ளார்.

மாநில சங்கத்தின் நன்றியை Jt. CCA அவர்களுக்கும் மற்றும் அனைத்து கணக்கு அதிகாரிகளுக்கும் தெரிவித்து கொள்கிறோம். காலம், காலமாக இந்த விவகாரத்தில், DOT HQRS டெல்லி இல், நமக்காக தொடர் முயற்சி எடுத்து வருகின்ற மத்திய சங்கத்திற்கும் நமது நன்றியை தெரிவித்து டுக்கொள்கிறோம். இந்த படிவத்தில் தெரியாத விவரம் இருப்பின், அதை பூர்த்தி செய்ய வேண்டாம்.நம்பிக்கை யுடன்,பொறுமை காத்த உறுப்பினர் களுக்கு நன்றி. நன்றி.

S. சுந்தரகிருஷ்ணன்

மாநில செயலர்

FORMAT  FOR  SERVICE  PENSIONERS


FORMAT FOR FAMILY PENSIONERS.