மதுரையில் மே தின விழா
1-5-2024 அன்று காலை 10 :30 மணி அளவில் BSNL பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மே தின விழா மாவட்ட உப தலைவர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 70க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் திரு வி சீனிவாசகன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் தனது முன்னுரையில் மே தின வரலாறு பற்றி எடுத்துரைத்தார். அதன் பின்னர் நமது மாவட்ட கௌரவத் தலைவரும் மூத்த தோழருமான திரு G R தர்மராஜன் அவர்களால் நமது சங்க கொடி புதிதாக நிறுவப்பட்டுள்ள நமது சங்க கொடி கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தோழர் தர்மராஜன் தனது உரையில் மே தின சிறப்பு பற்றி எடுத்துரைத்தார் பின்னால் பேசிய மாவட்டச் செயலர் தோழர் வீராசாமி நமது மாவட்ட சங்கத்திற்காக நிறுவப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் கொடிமரம் ஆகியவை நிறுவ உதவி செய்த தோழர்களுக்கும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். விழா நிறைவில் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் வடையும் வெப்பத்தை தணிக்கும் வகையில் மோரும் வழங்கப்பட்டது வடைக்கான செலவினை தோழர் தர்மராஜன் ஏற்றுக் கொண்டார். மோர் வழங்குவதற்கான செலவு உப தலைவர் தோழர் கண்ணன் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில் மோர் வழங்கியது தோழர்களின் பாராட்டினை பெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வடையும் மோரும் வழங்கிய தோழர்களுக்கு நன்றிகள் பல பல.
விழாவின் புகைப்பட தொகுப்பு கீழே உள்ளது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.