Saturday, 28 September 2024

15 வது மதுரை மாவட்ட மாநாடு.

15 வது மதுரை மாவட்ட மாநாடு.

மறைந்த நமது தோழர் வீராச்சாமியின் நினைவினை போற்றும் விதமாக          25-9-2024 புதன் கிழமை மதுரை தல்லாகுளம் காந்தி மியூசியம் அருகில் உள்ளபூங்கா முருகன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 15 வது மாவட்ட மாநாடு தோழர் வீராச்சாமி நினவரங்கம் என பெயரிடப்பட்டு  நடைபெற்றது.முதல் நிகழ்வாக தோழர் வீராச்சாமியின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  தோழர் ராஜேந்திரன் அவர்களின் விண்ணதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் மூத்த தோழர்    G R தர்மராஜன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின் தோழர் நாகராஜன் அவர்கள் அஞ்சலி செய்தியை படித்து   மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தோழர் G ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் கலந்து கொண்டார். நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக தோழர் ஜெபக்குமார் அவர்களும் மதுரை மாவட்ட NFTE சங்க செயலர் தோழர் V ரமேஷ் அவர்களும் AIBSNLPWREA மாவட்ட செயலாளர் தோழர் S ராமச்சந்திரன் அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநிலச் சங்கப் பிரதிநிதிகள் தோழர்கள் சூரியன், பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி உரை நிகழ்த்தினர். திண்டுக்கல் தேனி வத்தலகுண்டு கிளை செயலாளர்கள் மாநாட்டினை வாழ்த்தி அவர்களது கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 

மூத்த தோழர் திரு ஜி ஆர் தர்மராஜன் அவர்கள் சங்க வளர்ச்சி குறித்தும் ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

 மதுரை மாவட்ட பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சார்பில் திரு மோகன் தாஸ் DGMஅவர்களும் திருமதி கீதா AGM அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்களது உரையில் நமது ஓய்வூதிய சங்கத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய மாவட்டம் தயாராக இருப்பதாகவும் சங்கத்திற்கு நாம் கேட்டபடி   தல்லாகுளம் பகுதி வளாகத்தில் தரைத்தளத்திலேயே ஒரு அறையை கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வந்திருப்பதாகவும் மருத்துவப்படி மருத்துவ பில்கள் வழங்குதல் போன்றவற்றை விரைவாக செய்ய மேலும் ஒரு ஊழியரை நியமித்திருப்பதாகவும் கூறினர்.

மாநிலச் செயலாளர் தனது உரையில் முதலில் மாவட்ட சங்கத்தினை வாழ்த்தி பேசினார். பின்பு KYP ,FMA போன்ற பிரச்சனைகளை பற்றிய விளக்கங்கள் கொடுத்தார். ஓய்வூதியம் வழங்கப்படுவதில் உள்ள தாமதங்கள் களையப்பட்டு இம்மாதம் முதல் மாதத்தின் கடைசி வேலை நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய ஆவன செய்யப்பட்டதால் இம்மாத ஓய்வூதியம் 25 9 24 அன்று கிடைத்திருக்கிறது என்ற விளக்கத்தினை எடுத்துரைத்தார். குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் அதற்கு ஓய்வுதியர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் விளக்கிக் கூறினார். ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான பயோமெட்ரிக் கருவிகளை CCA அலுவலகம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இது நடைமுறைப் படுத்தப்படும்போது  ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிப்பதில் உள்ள பெரும்பாலான சங்கடங்கள் தீர்க்கப்படும். தமிழ் மாநில சங்கத்தின் முயற்சியின் காரணமாக ஒரு இன்கிரிமெண்ட் குறைக்கப்பட்டு 78.2% IDA இணைப்புடன்  ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயம் செய்ய ஆவன செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கு உரிய Declaration படிவத்தில் (affidavit in non judicial stamp paper ல் ) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். இதுவரையில் CCA அலுவலகத்துக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் 30 பேருக்கு இம்மாதம் இந்த இணைப்பு போடப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு விரைவில் கிடைக்க மாநில சங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் இதன்மூலம் பென்சன் மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 வரை அதிகரிக்கும். அரியர் தொகை சுமார் 1,20,000 வரை கிடைக்கும். இதுவரையில் அதற்கான விண்ணப்பித்தினை சமர்ப்பிக்காத பாதிக்கப்பட்ட தோழர்கள் விரைவில் அதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சென்னை சொசைட்டி விவகாரம் மத்திய சங்கத்தின் உதவியுடன் தீர்க்க  ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

ஓய்வூதிய மாற்றம் பெற  பாட்டியாலா மத்திய சங்க செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி செயல்படுத்தப்படும் என தெளிவு படுத்தினார். Notional Increment, Commutation பிடித்தல் காலம் குறைக்கப்படுதல்  பற்றிய விளக்கங்களையும் தெரிவித்தார். அவரது உரைக்குப் பின் மதிய உணவிற்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

சிறப்பான மதிய உணவிற்கு பின் மதியம் 2:30 மணி அளவில் மீண்டும் கூட்டம் தொடங்கியது கூட்டத்தில் ஆண்டறிக்கை செயலரால் படிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. வரவு செலவு கணக்கு மாவட்ட பொருளாளரால் படிக்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவரது பதில் பெற்று சபை ஏற்றுக் கொண்டது. 

அதன் பின்னர் மாநிலச் செயலாளர் மதுரைக்கு CGHS wellness centre வருவது குறித்து விளக்கங்கள் கொடுத்தார். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் CGHS பட்டியலிட்ட மருத்துவமனைகள் தொடங்கப்பட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாகவும் விரைவில் இவை அமுல்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார். 

அதன்பின்பு இப்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாவட்ட சங்க செயற்குழு தலைவரால் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில அமைப்பு செயலாளர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் நடத்தினார்.

புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் நன்றி உரை கூறி மாவட்ட சங்கத்தினை சிறப்பாக வழி நடத்த அனைவருடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டினார். 

தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.


























Monday, 16 September 2024

தோழர் வீராச்சாமி மறைந்தார் .

 


😭கண்ணீர் அஞ்சலி
தோழர் வீராச்சாமி நம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தி  மறைந்தார்.
நமது மாவட்டச்செயலர் தோழர் வீராச்சாமி S
அவர்கள் சிலகாலம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.
அவரது இழப்பு நமது ஓய்வூதியர் அமைப்புக்கும் அவரது குடும்பத்தார்க்கும்
 நிரப்ப முடியாத பேரிழப்பாகும். 
அவரது குடுபம்பத்தார்க்கும் நமது தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது இல்ல முகவரி
27B விசாலாட்சி புரம் 3 வது தெரு.
(விசாலாட்சிபுரம் IOB கிளை அருகில்).

தோழர்களே!

நமது அமைப்பின் மதுரை மாவட்ட செ ய லா லராக நீண்ட காலம் தோழர் தர்மராஜன் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் மாவட்டமாக திகழ்ந்து வந்தது. வயது மூப்பு காரணமாக அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.

அந்த இடத்தை இட்டு நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் அந்த இடத்தை தோழர் வீராசாமி ஓரளவிற்கு இட்டு நிரப்பினார். மிகவும் இனிமையானவர். அனைவருக்கும் உதவும் பண்பு கொண்டவர்.  நிர்வாகத்துடன் சுமுக உறவு கொள்ளும் தன்மை கொண்டவர். 

அவருடைய மறைவு நமது அமைப்பிற்கு, அதுவும் 10 நாட்களில் அந்த மாவட்ட மாநாடு நடைபெற உள்ள சூழலில், மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

DG CHQ President 

16/9/24

மாநில சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல். மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி அவர்கள் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. ஓரிரு மாதங்கள் உடல் நலகுறைவால் அவதியுற்றார். ஆனால் இந்த நிலை வரும் என்பதை எதிர் பார்க்கவில்லை. வழக்கமாக என்னிடம் வாரத்தில் மூன்று முறை பேசுவார். இனிய முகம். இனிமையான பேச்சு. சிறந்த மனிதர். அனைவருக்கும் நண்பர். தமிழ் நாட்டில் அதிக உறுப்பினரை கொண்ட மதுரை மாவட்ட சங்கத்தை, எவ்வித பிரச்சனை யும் இல்லாமல் சுமூகமாக நடத்தி வந்தார். சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமன்றி நமது மதுரை மாவட்ட, மற்றும் மாநில சங்கத்திற்கும் இழப்பு தான். மாநில சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை அண்ணார் குடும்பத்திற்கும், மதுரை மாவட்ட தோழர்களுக்கும், மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிரேன். அன்னாரின் ஆத்மா, ஆண்டவன் திருவடியில் இளைப்பாற, இறைவனை வேண்டுகிரேன். 

இவன். Sundarakrishnan CS TN


It is with great sorrow that I learned of the passing of Com Veerasamy, District Secretary of Madurai. During my visit to Madurai in May 2019, he extended his help and since then we continued our friendship.  We stayed connected over the years, meeting at association meetings, including the recent CEC  Tamilnadu at Salem. His service as DS AIBSNLPWA Madurai is highly commended.  His dedication to the association and his commitment to serving others were always evident. His sudden departure is a great loss, and my heartfelt condolences   to his family. He will be remembered for his contributions.

V Vara Prasad // GS

BSNL ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டச்  செயலாளர் தோழர் வீராச்சாமி அவர்கள் நம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தி  மறைந்தார்.😭

தோழர் வீராச்சாமி அவர்கள் சிலகாலம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்திவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.அவரது இழப்பு BSNL ஓய்வூதியர் நல அமைப்பிற்கும் அவரது குடும்பத்தார்க்கும்  பேரிழப்பாகும். 

அவரது குடுபம்பத்தார்க்கும் BSNL ஓய்வூதிய  தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை நமது இந்திய தென் மண்டல அஞ்சல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். 😭

அன்பு நண்பர் தோழர். வீராச்சாமி,

மாவட்ட. செயலர்..அவர்களின்

மறைவு...


இவ்வளவு விரைவாக வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..


கடின உழைப்பை ..

இரு கண்களாக கொண்டவர்..


தனி நபராகவும் போராட தயங்காதவர்...


சிறிது காலமே பழக்கம் என்றாலும் மறக்கவொன்னா நட்பாக... 

மனதில் பதிந்து விட்டது....


ஆழ்ந்த இரங்கல் அண்ணாரின் குடும்பத்தார்க்கு... அவரை இழந்து தவிக்கும் வேளையிலே...


அவரின் ஆன்மா அமைதியுற ஆண்டவனை வேண்டி நிற்ப்போம்.


இவண்.

நண்பன். நா.நடராசன்,தஞ்சை(சேலம்).16-9-24

இரங்கல் செய்தி 

தோழர்களே தோழியர்களே  வணக்கம்

.நான் மதுரை மாவட்ட சங்கத்தின் முன்னாள் மாவட்ட ச் செயலரும் இந்நாள் கௌரவ தலைவருமான தர்மராஜன்.

மதுரை மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு அன்று இருந்த சுமார் 30 ஓய்வூதியர்களை ஒருங்கிணைத்து ஒரு ஓய்வூதியர் சங்கம் துவக்கினேன். இந்தச் சங்கம் பின்னால் நான் விதை போட்டு உருவான AIBSNLPWA என்ற பெரிய ஆலமரத்தின் மாவட்டச் சங்கமாக இணைந்தது. எனது எண்பதாவது வயது வரை நான்  மதுரை மாவட்ட சங்கத்தின் செயலராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். வயது மூப்பின் காரணமாகவும் அனைத்து இந்திய சங்க விதிகளின் காரணமாகவும் எண்பது வயதுக்கு பின்பு இந்த பதவியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது என் முன்னால் தோன்றியவர் எனது இனிய நண்பர் தோழர்  வீராச்சாமி.

நான் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்ட பின்பு தோழர் வீராசாமி அவர்கள் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று இந்த மதுரை மாவட்ட சங்கத்தினை கட்டி காத்து சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாக உயர்த்தி அரும்பணி ஆற்றியிருக்கிறார். அவர் பதவி காலத்தில் அவர் ஆற்றிய பணி அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது. மாவட்ட சங்கத்திற்கு கல்வெட்டு, கொடிமரம் என்பன அவரால் செய்யப்பட்ட வாழ்நாள் சாதனைகள். எனக்கு பின்னால் மாவட்ட சங்கத்தின் செயலர் பொறுப்பேற்று அவர் திறம்பட செயலாற்றினார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவர் உடல்நிலை குறைவு காரணமாக 16 9 24 அதிகாலை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தையும் மன வேதனையையும் அளிக்கின்றது. அவரது செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீர் திரையிடுகிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மாவட்ட சங்கத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்குகின்றேன்.

இவண்

G R தர்மராஜன்.

கௌரவத் தலைவர் மதுரை மாவட்ட சங்கம்.

தோழர் வீராச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 


தோழர்களே தோழியர்களே! வணக்கம்.

நம்மை மீளாத் துயரில் ஆழ்த்தி மறைந்த நமது மாவட்ட செயலாளர் 

திரு S வீராச்சாமி அவர்களின் நினைவினை போற்றும் விதமாகவும் அவரது சேவையை பாராட்டும் விதமாகவும் ஒரு நினைவேந்தல் கூட்டம்                             21 9 2024 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மதுரை தல்லாகுளம் Level 4 கட்டிட நுழைவாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்ற அனைத்து தோழர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.

இவண்

 மாவட்டச் செயலர்.     மதுரை மாவட்டச் சங்கம்

Wednesday, 4 September 2024

Pensioner Patrika of September - October 2024 issue which contains 32 pages in Pdf format is posted for you. A Link is given below. By clicking the link you can read the latest issue of Pensioner Patrika.