Monday, 2 September 2013

செயற்குழுக்கூட்ட அறிக்கை-01 - 09 - 2013

நமது சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்
 01 - 09 -2013 அன்று பொதுமேளாளர் அலுவலக வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்றது.30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இரங்கல்
திரு.எஸ்.கண்ணண் சி டி எஸ்  திண்டுக்கல் 31 . 8 . 2013 அன்று இயற்கை எய்தினார்.பிறருக்கு உதவும் நல்ல குணமும் பண்பும் நிறைந்த அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் சார்பாக  ஒரு நிமிட மௌனம் காத்து ,இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 23 - 09- 2013

 செயலாளர் திரு ஜி . நடராஜன் , அகில இந்திய ஓய்ஊதியர் சங்கம் அறிவித்தபடி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று நமது உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

செல்வோம் டெல்லி வெல்வோம் 78.2  சத அகவிலைபடி இணைப்பை

23 - 10 - 2013 அன்று டெல்லியில் நடைபெற உள்ள தர்ணாவில் கலந்துகொள்ள இதுவரை 33 உறுப்பினர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதில் பங்குபெறவிரும்புவோர் 4 - 09 -2013 நண்பகல் 2 மணிக்குள் செயலரிடம் தெரிவித்து விவரங்களை தெரிந்துெகொள்ளலாம்.

மேற்கண்ட செய்திகளை தங்களது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமென கேட்டுகொள்ளபடுகிறது.

சேமநலநிதி

சேமநலநிதி ருபாய் 1000 ம் எனதீர்மானிக்கப்பட்டு எதிர்வரும் பொதுக்குழவின்ஒப்புதல் பெற்று நடைமுறை படுத்தப்படவேண்டும் என முடிவுசெய்ய்பட்டது.

மூத்த உறுப்பினர்களுக்கு சிறப்புசெய்தல்

80 வயதடைந்த நமது சங்க உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுக்குழவில் செயலாளர் திரு ஜி . நடராஜன் , அகில இந்திய ஓய்ஊதியர் சங்கம் முன்னிலையில் சிறப்பிகப்பட வேண்டும் என முடிவுசெய்ய்பட்டது.

மேலும் தகவல் வேண்டுவோர் நமது செயலாளரை தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.