Thursday, 5 September 2013

புதிய ஓய்வூதியத் திட்டம் - ஒரு கேள்வி ?

புதிய ஓய்வூதியத் திட்டம்  ஒரு கேள்வி ?

மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
04 - 09 - 2013  இது நிறைவேற்றப்பட்டாலும்  2004 இல் இருந்து அமலுக்குவரும்.

இதற்கு ஆதரவாக சொல்லப்ட்ட கருத்துகள் சில

1 . "புதிய ஓய்வூதியத் திட்டம் நீண்ட கால பலன்களை அளிக்கும். சம்பாதிக்கும்போதே சேமிக்கும் வாய்ப்பை இந்த மசோதா வழிவகை செய்யும். குறிப்பாக, நிலையாக வருவாய் பெற்றவர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அதிக பலன்கள் கிடைக்கும்.

2 . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 52.83 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பர். மத்திய, மாநில அரசுகள், ஓய்வூதிய சந்தாதாரர்களின் பங்களிப்பாக புதிய ஓய்வூதியத் திட்ட நிதி சுமார் ரூபாய் 34 ஆயிரத்து 965 கோடிக்கும் மேலாக உள்ளது. இந்த தொகையை பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் பயன்படுத்தவும் ஓய்வூதியதாரர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் ஆணையம் உருவாக்க புதிய மசோதா வகை செய்கிறது.

3.ஓய்வூதிய திட்டங்களில் அன்னிய முதலீடுகள் குவியவும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, எந்தெந்த திட்டத்தில் தமது ஓய்வூதியத்தை முதலீடு செய்யலாம் என்பதை பயனாளியே தீர்மானிக்கலாம்.

 4 . ஓய்வூதியதாரர்களுக்கு நீண்ட காலத் தீர்வை இந்த மசோதா அளிக்கும்.

இந்த புதிய ஓய்வு ஊதியத்திட்டம் அவ்வளவு சிறப்பான திட்டமாக இருக்குமேயானால் இந்த சிறப்பான திட்டத்தில் நமது நாட்டை காக்கும் வீரர்கள் மட்டும் சேர்கப்படாமல் விடப்பட்டது ஏன்?

.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.