Thursday, 25 December 2014

கேட்க, கேட்க இனிக்குதையா !

Wednesday, December 24, 2014



சித்தன்,  கோவை 
அவர்களின் ( face book )முக நூலிலிருந்து

கேட்க, கேட்க இனிக்குதையா !

பி எஸ் என் எல் குறித்த வெளிப்பார்வைகள் பெரும்பாலும் பொய்யாகவே போயிருக்கின்றன..!

நான் ஏர்டெல்லில் இருந்து பி எஸ் என் எல் மாறி மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் , ஏர்டெல் நான் கட்டிய கடைசி நிலுவை தொகையை அப்டேட் செய்யாமல் இருந்த கோளாறில் ..
.
MNP சேவை வழங்கும் நிறுவனம் மூலம், எனது இன்கமிங் அவுட்கோயிங் இரண்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டு விட்டது..!

என்னிடம் இருந்த பில் காப்பியை வைத்துகொண்டு கோவை சாயிபாபா காலனி BSNL CSR ஐ அணுகினேன்.. 
உள்ளே நுழைந்து அவர்கள் சொன்னவரை பார்த்து .

சரியாக மூன்றாவது நிமிடத்தில் என் இணைப்பு வேலை செய்யத்துவங்கி வெளியேவே வந்துவிட்டேன்..!!


பி எஸ் என் எல்லில் , ஹெல்ப் டெஸ்க் நம்பரை வைத்து அவர்களின் சேவையை எடை போட முடியாது.. சொல்லப்போனால் இந்த எட்டு ஏழு ஒன்பது அழுத்து என்கிற கொடுமை எல்லா கம்பெனிகளுக்கும் பொருந்தும்..!

ஆனால் உடனடி சேவையும் மரியாதையும் பி எஸ் என் எல்லில் சற்றும் குறையாமல் , வேகமும், மதிப்பும் தந்தே விரைவாக நம் வேலையை முடித்து தருகிறார்கள் !!

வெளியே இருந்து வாய் பேச்சில் கேட்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று பி எஸ் என் எல் சரி இல்லை என்பது !!

                                        HAPPY TO BE A BSNL SUBSCRIBER !
 
நன்றி: நெல்லை வலைப்பூ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.