Monday, 23 November 2015

ஏழாவது ஊதிய குழு

First Published : 19 November 2015 09:53 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது. 
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.
பரிந்துரைகள் விவரம்
  • அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
  • இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும்
  • குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
  • ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
  • ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும்
  • பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.
  • பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.
  • தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.
  • இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.
  • நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்
  • இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.
7th pay commission report Highlights:

 Minimum pay is 18,000/- 

Grade Pay System abolished

Fitment formula will be 2.57. So using present basic pay,
7th CPC pay can be calculated by multiplying the same with 2.57 factor.

 Increase in Military service Pay increased to 16,500

 3% annual increment 

52 allowances abolished

 16% increase in pay

  23.55% increase overall salary when taking in to increase
 in allowances also

 24% increase in Pension - 

See more at: http://www.centralgovernmentnews.com/#sthash.IoOJ3szU.dpuf

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.