Saturday, 29 June 2019
Sunday, 23 June 2019
PENSION ADALAT ON 21-6-2019
Friday, 21 June 2019
Many of our comrades and leaders had attended the adalath and participated very actively.
Among them, Comrades D.Gopalakrishnan, TS Vittoban, S. Arunachalam ,V,Rathna,
V.Ramarao, R.venkatachalam, Kalidasan, Victorraju, S.Sundarakrishnan N.S.Deenadhayalan,
Vairamani and many others attended. Photos taken on the occasion are posted here.
Write up will follow soon.
BSNL Officials
Pensioners
Bank Officials
DOT Officials
DOT Officials
அன்புத்தோழர்கள் அனைவருக்கும்
தோழமை வணக்கங்கள் .
9 மாத இடைவெளிக்குப்பின் பென்ஷன் அதாலத் கூட்டம் சென்னையில்
21-06-2019 அன்று நடைபெற்றது.
நமது அமைப்பின் சார்பாக தோழர்கள் D.கோபாலகிருஷ்ணன், விட்டோபன் ,
ராமராவ், நெல்லை அருணாசலம்,V
.ரத்னா ,
R வெங்கடாசலம், காளிதாசன்
சுந்தரகிருஷ்ணன் , விக்டர்ராஜூ ,தீனதயாளன் , STR நரசிம்மன் மற்றும்
மதுரை, கோவை , தஞ்சை , சேலம், தூத்துக்குடி, புதுவை , கடலூர் விருதுநகர் ,
சென்னை STR மாவட்டசெயலர்கள் கலந்து கொண்டனர்.
இது தவிர தனிப்பட்ட முறையில்பிரச்சினைகளை அனுப்பி
இருந்த சில தோழர்களும் வந்திருந்தனர்.
நிர்வாகத்திலிருந்து PCCA
, CCA , Dy CA , மூத்த கணக்கதிகாரிகள் மற்றும்
போஸ்டல் , கனரா வங்கி, ஸ்டேட் பாங்க், ஐஓபி ,இந்தியன் வங்கி,
BSNLதமிழ் மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
மாநில , மாவட்ட சங்கங்களின் சார்பில் 155 பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டன .
வழக்கமான அறிமுகம் , வரவேற்புரை இல்லாமல் நேரடியாகவே
பிரச்சினைகளை விவாதிக்க Dy .CCA முயன்ற போது, இதுசரியான முறையல்ல
என தோழர் DG கடுமையாக சுட்டிக்காட்டினார் .இதை ஏற்றுக்கொண்ட
அந்த அதிகாரி பென்ஷன் கணக்கதிகாரி வரவேற்புரை நிகழ்த்துவார் என்றார்.
நம்முடைய பரஸ்பரம் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு கூட்டம் துவங்கியது .
9 மாத இடைவெளி என்பது மிகவும் அதிகம் இது தவிர்க்கப்பட்டு குறுகியமாத
இடைவெளிகளில் அதாலத் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய நம்கருத்து
ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த அதாலத்கூட்டம் வரும் செப்டம்பர்மாதம்
நடைபெறலாம் என்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது.
இந்த முறை விவாதங்கள் நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டுஆராய்ந்து
விவாதிக்கப்பட்டன . இதற்கு முன் நடைபெற்ற அதாலத்துக்கள்போல்
அல்லாமல் பெரும்பாலான அதுவும்
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டள்ளது ஒரு நல்ல முன்னேற்றம். இருப்பினும் கீழ்மட்ட BSNL அலுவலகங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட
விவரங்கள் முறையாககையாளப்படவில்லை என்பதை நாம்
சுட்டிக்காட்டினோம்.அதே நேரத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்
SAMPANN முறைமூலம் வழங்கப்படும் பென்ஷன் வழங்கும் முறை சிறப்பாக
செயல்பட்டுவருவதாக நம் பாராட்டுதல்களையும் தெரிவித்தோம்.
கூட்ட முடிவில் பேசிய DY . CCA , நாம் மகிழ்வுடன் விடை பெறலாம் என்று
கூறியதை நாமும் பிரதிபலித்தோம். இந்த நடைமுறையை கையாண்டால்
ஓய்வூதியர் பிரச்சினைகள் தீர்வில் நல்ல முன்னேற்றம் மற்றும் திருப்தி
ஏற்படும் என்பதை நாம் எடுத்துக்கூறினோம்.
ஒப்புக்கொண்டு உத்திரவிடப்பட்ட அனைத்து பிரச்சினைகளின் நகல்களை
தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
Web Master தோழர் மோகன் அதாலத் நிகழ்வுகளை விரிவாக படமெடுத்தார்.
அவை நம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம் ,
தமிழ் மாநில செயலர் .
பின் குறிப்பு : மாவட்ட செயலர்கள் அதாலத்திற்கு அனுப்பியிருந்த தங்கள்மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளின் நகலை உடன் மாநில சங்கத்திற்குஅனுப்பி வைக்கவும்.
Subscribe to:
Posts (Atom)