Saturday, 24 April 2021

 

தோழர்களே ,
நம் மதுரை மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மன மகிழ் மன்றத்தில்  கொரோனா தடுப்பூசி போடும் ஓர் அரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தினை நம் ஓய்வூதிய தோழர்களும் , அவர்களது குடும்பத்தினரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நேற்று வாட்சப் , வலைத்தளம் ஆகியவற்றில் செய்தி பதிவிடப்பட்டது மேலும் தொலைபேசி வாயிலாகவும் செய்தி அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (24-04-2021) காலை 10-00 மணி முதற்கொண்டு நம் தோழர்கள் , அவர்களது குடும்பத்தார்கள் கூடினர். சுமார் 10-30 மணி அளவில் கோவி ஷீல்டு முதலாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. மதுரை மாவட்ட நம் செயலாளர் தோழர் வீராச்சாமி மற்றும் சில முன்னணி தோழர்கள் வந்திருந்தோரை வரவேற்று, முக கவசம் சரியாக அணிந்துள்ளார்களா என பார்த்து , போதிய இடைவெளி விட்டு அமர செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவி செய்தார்கள். சுமார் மாலை 2-00 மணிவரை நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 110 பேர்கள் தடுப்பூசி போடப்பட்டார்கள். இலாகாவின் செலவில் பிஸ்கட்டும் , தேநீரும் அளிக்கப்பட்டது.  இன்றைய பயனாளிகளில் , சுமார் 95 விழுக்காடு,  நம் ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடுப்பத்தினார்கள் மட்டுமே என்பது மன நிறைவு தரும் செய்தி
நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்ததை கண்ட நம் தோழர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இந்த முறையிலேயே போட விரும்பி வேண்டிக்கொண்டார்கள்.
நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நி
ர்வாகத்திற்கும் , மாவட்ட சங்கத்திற்கும் பாராட்டுதல்கள்
தெரிவித்து சென்றார்கள்
தோழமையுடன்
S . வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA ,
மதுரை மாவட்டம்.

Friday, 23 April 2021

 

தோழர்களே,
நம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நாளை       24-04-2021 சனிக்கிழமை காலை 10-00 மணி அளவில் BSNL ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா முதல் தவணை  ( First Dose ) தடுப்பூசி இலவசமாக போடப்படும்எனவே நம் தோழர்கள் தங்கள் 45வயதிற்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சென்று முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளலாம். கையில் ஆதார் செராக்ஸ் நகலுடன் செல்லவும்.
மிக முக்கியம்:  உங்கள் குடும்பத்தில் நாளை தடுப்பூசி  போட்டுக் கொள்பவர்கள் பெயர்கள் , உங்கள் கைப்பேசி எண் மற்றும் வயது குறித்த விபரங்களை நம் மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி அவர்களிடம் கைப்பேசி எண் 94871 82344 SMS வாயிலாக தகவல் கொடுக்கவும்அல்லது voice மூலமாக  இன்று (23-04-2021) மாலை 3-00 மணிக்குள் தெரிவிக்கவும்.
இந்த சிறப்பு வசதியை நம் தோழர்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA
மதுரை