Thursday, 20 October 2022

LIFE CERTIFICATE

 

நீங்கள்

1.வாடகை இல்லா  சலுகை கட்டண தொலைபேசி சேவை பெறுபவரா?

2.2019 பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவரா?

3. 2019 பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று சம்பன் (SAMPANN) திட்டத்திற்கு மாறி CCA அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவரா?

4. 2019 பிப்ரவரிக்கு பின் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றவரா?

 நவம்பர் மாதம் வருகிறது.

ஓய்வூதியமும் வாடகை இல்லா  சலுகை கட்டண தொலைபேசி சேவையும் தடையின்றி தொடர்ந்து பெற நாம் உயிருடன் இருப்பதை உறுதிசெய்ய உயிர்வாழ் சான்றிதழ்  நவம்பர் 30 க்கு முன் கண்டிப்பாக சமர்ப்பிக்கவேண்டும்

1.வாடகை இல்லா  சலுகை கட்டண தொலைபேசி சேவை

1. தமுக்கத்தில் CTO வளாகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம்    COUNTER 5  ல் வைக்கப்பட்டுள்ள பேரெட்டில் கையொப்பமிட்டு  

அல்லது

     கீழே பிற்சேர்க்கை ல் தரப்பட்டுள்ள மாதிரி படிவத்தினை(LIFE CERTIFICATE FOR PHONE)     

      பூர்த்தி செய்து பணியில் உள்ள பிஎஸ்என்எல் அதிகாரிகள்

      சான்றளிப்புடன் PGM அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

 குறிப்பு:வாடகை இல்லா  சலுகை கட்டண தொலைபேசி சேவை பெறுபவர்  தொலைபேசி இயங்கும் நிலையில் இல்லாவிட்டாலும் உயிர்வாழ் சான்றிதழ்  நவம்பர் 30க்கு முன் சமர்ப்பிப்பது நல்லது.

 

 2.2019 பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்.

ஓய்வூதியம் பெறும் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு ஜீவன் பிராமண்  செயலிவழியோ, கீழே தரப்பட்டுள்ள மாதிரி  படிவத்தில் சான்றளிப்பு செய்யும் அதிகாரம் உடையவர் (பட்டியல் கீழே உள்ளது) சான்றளிப்புடன் சாமர்ப்பிக்கலாம்.(LIFE CERTIFICATE FORM )

3. 2019 பிப்ரவரிக்கு முன் ஓய்வுபெற்று சம்பன் (SAMPANN) திட்டத்திற்கு மாறி CCA அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்

4. 2019 பிப்ரவரிக்கு பின் நவம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றவர்.

இவர்கள்  இவரும் (3,4)சம்பன் (SAMPANN) திட்டத்தில் CCA அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள். இவர்கள்  தமிழ் நாடு CCA அவர்களுக்கு த் தான் லைப் சர்டிபிகேட் சமர்ப்பிக்கவேண்டும்

தமிழ் நாடு CCA அவர்களுக்கு ஜீவன் பிரமாண்  செயலிவழியோ, கீழே தரப்பட்டுள்ள மாதிரி  படிவத்தில் சான்றளிப்பு செய்யும் அதிகாரம் உடையவர் (பட்டியல் கீழே உள்ளது) சான்றளிப்புடன் சாமர்ப்பிக்கலாம்.(LIFE CERTIFICATE FORM)

 ஜீவன் பிரமாண் மூலம் லைப் சர்டிபிகேட் கொடுக்கும்போது உள்ளிடவேண்டிய முக்கிய தகவல்கள் கீழே பிற்சேர்க்கை ல் தரப்பட்டுள்ளன.

ஜீவன் பிரமாண் செயலி ஆதார் அடிப்படையிலானதால் உங்கள் ஆதார் எண் அவசியம்.

ஜீவன் பிரமாண் செயலி மூலம் லைப் சர்டிபிகேட் தர உங்கள் ஆதார் எண், PPO எண் வங்கிக்கணக்கு எண், மொபைல் எண்  அவசியம். அதனால் அவற்றை கொண்டு செல்லவும்.

                                                                     பிற் சேர்க்கை

1.LIFE CERTIFICATE FOR PHONE

 


 2.LIFE CERTIFICATE FORM FOR PENSION


3.PERSONS AUTHORISED TO ATTEST LIFE CERTIFICATES


4, JEEWAN PRAMAN LIFE CERTIFICATE DETAILS TO BE ENTERED


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.