அன்பு தோழர்களே!
Member(S) தலைமையின் கீழ் நடந்த இன்றைய கூட்டம் வெற்றிகரமான தாகவும் நிறைவான தாகவும் அமைந்திருந்தது.
9 ஓய்வூதிய நலச் சங்கங்கள் சார்பில் ,
Zero % fitmentஐ நிராகரித்து, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் தேவை என்ற பொதுவான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தப் பொதுவான கோரிக்கை மனு இன்னும் சில ஓய்வூதியர் நலச் சங்கங்களாலும் வரவேற்கப்பட்டது.
நிர்வாகம் 0.02% பலன் கிடைக்கும் வகையில் கருத்தை முன்வைத்தது.
2017க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கான கூடுதல் பங்களிப்பைத் தர BSNL நிர்வாகம் தயாராயில்லை.
அனைத்து ஓய்வூதியர் நல சங்கங்களும் zero% fitment ஐ ஒருமித்த குரலில் நிராகரித்தனர்.
முடிவாக zero% fitment வழங்கப்படமாட்டாது என்று Member(S) கூறினார். ஆனால் தொலைத்தொடர்பு துறை அமைச்சரின் ஆலோசனைப்படியே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.
ஆனால் ஓய்வூதிய மாற்றம் என்பது ஊதிய மாற்றத்துடன் தொடர்பு படுத்தப் படாது என்று உறுதியாக முடிவானது.
முக்கியமான இடர்பாடு நீக்கப்பட்டதால்,
ஓய்வூதிய மாற்றம் பெறும் கோரிக்கையில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளைத் தொடர்வோம்!
இப்போது இணைந்துள்ள 9 ஓய்வூதியர் நல சங்கங்களுடன் மேலும் சில சங்கங்கள் இணைவதற்கான கூட்டு முயற்சிக்கான கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.
தோழர் கங்காதர ராவ்
அகில இந்திய பொதுச் செயலாளர்
AIBSNLPWA
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.