Sunday, 15 March 2026

மாவட்டச் சங்க அலுவலக திறப்புவிழா 14-03-2026



 தல்லாகுளம் North வளாகத்தில் AIGETOA அலுவலகத்தின் பக்கத்தில் நிர்வாகம் நமக்கு வழங்கியுள்ள இடத்தில் நமது மாவட்ட சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா மாவட்ட தலைவர் தோழர் S.கனியப்பன் அவர்கள் தலைமையில் 14-03-2026 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.


 நம் மதிப்பிற்குரிய பொது மேலாளர் திரு P.லோகநாதன் ITS அவர்களும்,நமது முது பெரும் தலைவர் தோழர் G.R.தர்மராஜன் அவர்களும், திருமதி K.வைரமதி உதவிப் பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களும் கலந்து கொண்டனர்.


 G.இராஜேந்திரன் மாவட்டச் செயலாளர் தன் வரவேற்புரையில் நமது சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்போதைய உறுப்பினர் நிலை, போன் மெக்கானிக் முதல் தலைமை பொது மேலாளர் வரை உறுப்பினர்களாக கொண்ட பன்முகத்தன்மை போன்ற விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.


 பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நம் நீண்ட நாள் கோரிக்கையான அலுவலக இடம் ஒதுக்கீடு செய்வதிலும் அதன் பிறகு வாடகை தொகையை நமது வேண்டுகோளை ஏற்று சற்று குறைத்து நிர்ணயிப்பதிலும் நமது பொது மேலாளர் மேற்கொண்ட பரிவான பரிசீலனைக்கும் இணக்கமான அணுகு முறைக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.


 அடுத்து அங்கு திரளாக கூடியிருந்த உறுப்பினர்களின் மகிழ்ச்சிக் கரவொலியுடன் நமது பொது மேலாளர் அவர்கள் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அங்கு அழகுற எழுதப்பட்டிருந்த நமது அலுவலகத்தின் பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார். பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தோழர் GRD, தோழர் M.ராஜாராம்,  தோழர் S.கனியப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.


 பொது மேலாளர் தன் உரையில் ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் சங்கத்தின் மூலம் செய்து வரும் பணிகளையும் சேவைகளையும் பாராட்டினார். ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதில் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை வழங்கும் என்று தெரிவித்தார். 


 கண் அறுவைச் சிகிச்சைக்குப் பின் தூசி, வெயில் தவிர்த்துவரும் நிலையிலும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பொது மேலாளர் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.


கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தோழர்கள் , தோழியர்கள்,மற்றும் அகில இந்திய சங்க நிர்வாகி, மாநில சங்க நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக 

 இருந்து கலந்து கொண்ட NFTE. மாவட்ட செயலர் தோழர் V..ரமேஷ்பாபு மற்றும் NFTE முன்னணி தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தோழமை வாழ்த்துக்களுடன்,...G.இராஜேந்திரன் மாவட்டச் செயலாளர் 









No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.