Sunday, 15 March 2026

மகளிர் தின விழா -14-03-2026

 


சர்வதேச மகளிர் தின விழா

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கத்தின் சர்வதேச மகளிர்தின விழா 14-03-2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் CSC மனமகிழ் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது.


 முதலில் CSC அருகில் உள்ள திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகளை திருமதி M.மகாலட்சுமி அவர்கள் திட்டமிட்டு நடத்தினார்கள். எல்லா போட்டிகளிலும் மகளிர் அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு. சிறப்பித்தனர்.


 அதன் பின்னர் அரங்கத்தில் நிகழ்ச்சிகள் துவங்கின. திருமதி R.எமிலி மரகதம் அவர்கள் தலைமை தாங்கினார். திருமதி P.விசாலாட்சி அவர்கள் இறைவணக்கம் பாடினார். 

திருமதி K.R.கலாவதி அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினர் திருமதி இரா. சித்ரா அவர்களையும் உதவிப் பொதுமேலாளர் திருமதி K. வைரமதி அவர்களையும் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


 திருமதி R. வத்சலா அவர்கள் வாசித்த தன் கவிதையில் பெண்ணின் சிறப்பையும் பல்வேறு பரிணாமங்களில் வியாபித்திருக்கும் அவள் பங்களிப்பையும் அழகுற வருணித்தார்.


அடுத்து உதவிப் பொதுமேலாளர் அவர்கள் தன் உரையில் வீட்டிலும் அலுவலகத்திலும் சமுதாயத்திலும் பெண்களின் பங்களிப்பையும் பெருமையையும் பற்றி அழகாக எடுத்துரைத்தார்.


 திருமதி M.மகாலட்சுமி அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினர் முது முனைவர் திருமதி இரா.சித்ரா அவர்களைப்பற்றி அறிமுகம் செய்து பேசினார்.சௌராஷ்டிரா கல்லூரி தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். சமூகத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் திருநங்கையருக்கும் பலவகையிலும் உதவி வருகிறார். ஒரு திருநங்கையைத் தத்தெடுத்து வளர்த்துப் படிக்க வைத்து, இப்போது அவர் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உயர்ந்த நிலையில் வாழ வழிவகுத்திருக்கிறார். அத்தகைய பண்பாளர் இந்த மகளிர்தின விழாவில் நம்மிடையே சிறப்புரையாற்றுவது மகிழ்ச்சி என்று பேசினார்.


 திருமதி சித்ரா அவர்களின் சிறப்புரை சிந்தனையை தூண்டுவதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. தற்காலத்தில் நண்பர்களோடும் உறவுகளோடும் கலந்து மகிழ்ந்து நேரத்தை செலவிடும் போக்கு குறைந்து கைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டுமே நேரத்தை செலவிடும் போக்கு பரவி வருவது கவலைக்குரியது.

 மனிதர்களுடன் பேச வேண்டும் குறிப்பாக முதியவர்களுடன் அடிக்கடி பேச வேண்டும்.

சமுதாயத்தில் ஒரு அநீதி கண்ணெதிரே நடக்குமானால் அதை எதிர்த்து குரல் கொடுத்து போராட வேண்டும்.நலிந்த பிரிவினருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். உரையின் துவக்கத்திலும் நிறைவின்போதும் உணர்வூட்டும் கவிதையுடன் அவரது சிறப்புரை கவித்துவமாய் விளங்கியது.


அடுத்து திருமதி P. F.மதீனா யாஸ்மின் அவர்கள் வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார். உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


விளையாட்டு போட்டிகளிலும், வினாடிவினா நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது.


அடுத்து தலைமை வகித்த திருமதி R.எமிலி மரகதம் அவர்கள் கண்மணி எனத் துவங்கும் குணா படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடலை  கீபோர்டில் வாசித்து அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தினார்.


 திருமதி E. சாந்தா மேரி அவர்கள் தன் நன்றியுரையில் விழாவின் சிறப்புப் பேச்சாளர் அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திய அமைப்பாளர்களுக்கும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.


அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.















































































No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.