Tuesday, 30 June 2020

உன்னதப் பெண்மணிக்கு உகந்த பாராட்டு.



இன்று பணி ஒய்வு பெறும் திருமதி S .E . ராஜம் ITS , PGM அவர்களுக்கு நம் மதுரை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலர் தோழர்        S .வீராசாமி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் . நினைவு பரிசினை மாநில உதவி செயலர் தோழர் S சூரியன் வழங்கினார். தோழியர் லட்சுமி ராகவன் சந்தன மாலை அணிவித்தார் . மாவட்ட பொருளாளர் தோழர்                S.ராஜாமணி சங்கத்தில் அங்கத்தினராக வேண்டி விண்ணப்பப் படிவத்தினை வழங்கினார் . தோழர் துவாரகநாதன் சங்க சாதனைகளை விளக்கும் கோப்புப்பையினை (FILE COVER)அளித்தார்.
தோழர்கள் சிவசுப்பிரமணியன் EC உறுப்பினர், சிவகுருநாதன்,ராகவன் AGM (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
இன்று தோழர் P . ஆனந்த ஜெயக்குமார் JTO   HRD அவர்களும் ஒய்வு பெறுகிறார்கள். அவர்  கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
ஒய்வு பெறும் அனைவரும் நல்ல உடல் வளத்துடன் , மன அமைதியுடன் , பொருள் வளத்துடன் நீண்ட நாட்கள் வாழ அனைவரின் சார்பில் வாழ்த்துகிறோம்.













Saturday, 27 June 2020

இரங்கல் செய்தி



நமது சங்க உறுப்பினரும், மதுரை K புதூர், கற்பக நகர்  12 வது தெரு 
கதவு எண் 385 ல் வசித்தவருமான
திரு.  V சித்திரவேலு, Retd DGM அவர்கள் 
நேற்று இரவு (26-6-2020) வெள்ளிக்கிழமை 
மாரடைப்பினால் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார். 
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (27-6-2020) சனிக்கிழமை மாலை 
நடைபெறும். 
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
0452 2567799
9443492233


Saturday, 20 June 2020

மாவட்டச்சங்க மாநாடு.

COVID-19 நோய் தொற்று காரணமாக நாட்டில் நிலவும் சூழல் காரணமாக மத்திய சங்கம், மாநில மற்றும் மாவட்ட மாநாடுகளை நடத்த டிசம்பர் 2௦2௦ வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

----பொதுச்செயலர் அவர்களின் செய்தி

ஓய்வூதியர் நலனில் நமது மாவட்டச்சங்கம்



ஓய்வூதியருக்கு E-PPO வழங்கும் நமது மாவட்டச்செயலர்.



Monday, 8 June 2020

இரங்கல் செய்தி

I




கண்ணீர் அஞ்சலி
நமது சங்க உறுப்பினரும் மதுரை வில்லாபுரம் பத்மா திரையரங்கம் 
அருகில் வசித்தவருமானை 
திரு. E  R பாலசுப்ரமணியன்  CTM  அவர்கள் 
இன்று 8-6-2020 திங்கள்கிழமை மாலை   மதியம் சுமார் 
5:30 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். 
அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம். 
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் 
நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரது இறுதிச்சடங்குகள் நாளை 9-6-2020 செவ்வாய்க்கிழமை 
மதியம் 3:00 மணியளவில் நடைபெறும் 

தொடர்புக்கு:
04522632747
8643010947

Monday, 1 June 2020

உப்பிட்டவரை உள்ளளவும் நினை- உதவிடுவோம் நமை வாழவைத்த BSNL க்கு.


What is the sincerest way of saying I'm here to help? - QuoraSurvival,survive,rescue, Help Free Stock Photo - Public Domain ...
அருமைத் தோழர்களே ,
சமீபத்தில் மதுரையில்  பெய்த மிகப்பெரிய மழை காரணமாக நம் மதுரைப் பகுதியில் தரை வழி தொலைபேசி சேவை ( Land Line Telephone  Service) மிகவும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக மதுரை KK நகர், திருப்பாலை , K .புதூர் போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன . எனவே ஓய்வு பெற்ற மற்றும் VRS ல் ஓய்வு பெற்றுள்ள TT /TM  தோழர்களின் சேவை மிகவும் தேவைப்படுகிறது. கண் துஞ்சா பணி செய்து துரிதமாக பழுதுகளை நீக்கி பழக்கப்பட்டவர்கள் நாம்.
நாம் பணியாற்றிய பகுதிகள்  பழுது காரணமாக  மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளன . இதனால் பொது மக்களும் கஷ்டப்படுகின்றனர். நம் முதன்மை மேலாளர் திருமதி S .E . ராஜம் அவர்கள்  நம் தோழர்களின் சேவை தேவை என்று என்னிடம் விரும்பி வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார் . நம் மாவட்ட AIBSNLPWA மூலமாகவும் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து TT  மற்றும்  TM கேடர்களில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் உடனடியாக KK நகர் , திருப்பாலை மற்றும் K புதூர் ஆகிய தொலைபேசி நிலையங்களுக்கு சென்று SDE  அவர்களை சந்தித்து பழுதுகளை களைந்து இலாக்காவிற்கு நற்பெயரையும் , நம் சங்கம்  என்றும் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு கை கொடுத்து உதவும் என்ற பெருமையை மீண்டும் நிலை நாட்டிட அனைத்து தோழர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி  வணக்கம் .
தோழமையுள்ள
S .வீராச்சாமி ,
AIBSNLPWA ,
மதுரை மாவட்ட செயலர்.

PGM.has asked us to wait for one day in her reply to our readiness to help. 
PGM's reply  :
Now the contractor is ready to supply man power tomorrow. Just wait for one day. I willl inform you. Thanks a lot for your support.