Friday, 19 August 2016

CHQ NEWS

18/08
We have already reported that the orders of CAT Ernakulam and High Court of Kerala were implemented only in the case of five pensioners who filed the case. First Applicant in the case was AIBSNLPWA, Kerala Circle. Therefore, we pleaded that all the affected members of AIBSNLPWA are entitled to get the benefit. DoT Cell did not accept our plea. Then our circle association filed a Contempt of Court petition. The CAT did not consider it as contempt as their order was implemented partially. Another reason is that DoT Cell can not find out all the affected members of the Association. However, the CAT ordered that affected members can approach the Tribunal again if their applications are not considered favourably by the DoT Cell. We have asked all affected members of Kerala Circle Unit to apply to DoT Cell. If not settled, we will go to CAT again.
The Court decision is given below. Click on the Link. extra_increment_contempt.pdf
19/08
BSNL Corporate Office has issued fresh instructions to Circles on implementation of the order granting 78.2% to Retirees. A proforma is also circulated which the SSA offices should fill up. The order can be seen by clicking on the link given below: 

Thursday, 18 August 2016

Extension of CGHS facility to retired BSNL employees

CLICK THE LINK  FOR MORE INFO<<Extension of CGHS facility to retired BSNL employees>>

முகவரி மாற்றம்?


                                     
தோழர்களே,

                         78.2% அகவிலைப்படி இணைப்புக்கான பணி நமது பொது மேலாளார் அலுவலகத்தில் விரைவாக நடைபெற்று வருகிறது. பணி முடிந்தபின் ஓய்வூதிய உயர்வுக்கான உத்தரவினை நமக்கு அனுப்பிட நமது தற்போதைய முகவரி கண்டிப்பாக தேவைப்படும்.
                          எனவே ஓய்வூதிய வழங்கல் உத்தரவில் உள்ள முகவரியில் மாற்றம் இருப்பின் உடனடியாக புதிய முகவரியை AO (TA), O/O GM BSNL, MADURAI மற்றும் நமது மதுரை மாவட்ட செயலர் தர்மராஜ் அவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்
                           இது அவசரமும் அவசியமுமான செய்தி. விரைந்து செயல்படுவீர்.


Collectors duty-bound to protect senior citizens: HC

Collectors duty-bound to protect senior citizens: HC:

 District Collectors are bound to protect the life and property of senior citizens within their jurisdiction and ensure that they are able to live with security and dignity .

Courtesy :www.thehindu.com

Wednesday, 17 August 2016

13-8-2016 தஞ்சை மாவட்ட மாநாடு

13-6-2016 அன்று தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் மதுரை மாவட்டத்தின் சார்பில் தோழர் திரு வீராசாமி  மாவட்ட துணை செயலர் கலந்துகொண்டார்.
மாநாட்டில் தோழர்கள்
A K தனபாலன் தலைவராகவும்,
V  சுவாமிநாதன் செயலராகவும்,
K சீனு பொருளாளராகவும்  தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நமது மாவட்டச்சங்கம் பாராட்டுதல்களையும் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

Tuesday, 16 August 2016

சங்கத்தின் சாதனைப்பட்டியல்

நம் சங்க சாதனைகள் ஒரு சிலவற்றை இங்கு நாம் எண்ணிப்பார்ப்போம் 




நம் BSNL லிலிருந்து 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு மறுக்கப்பட்டது. அப்போதுதான் எல்லா சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சங்க, கேடர் வேறுபாடின்றி ஒன்றுபட்டு அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலம் காக்கும் சங்கத்தை 2009ல்  அமைத்தனர். 

2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர்களும் ஓய்வூதிய உயர்வுக்கு தகுதியானவர்தான் என்று நாம் போராடி பெற்று தந்தோம் .இதன் மூலம் ஏறத்தாழ 60,000 ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் இரட்டிப்பாகக் கண்டு மகிழ்ந்தனர்.

IDA சதவீத உயர்வு அறிவித்த அதே மாதத்திலேயே அகவிலைப்படி பெற்று வருகிறோம்.

ஓய்வூதிய பலனுக்கு Extra Increment கணக்கிடப்பட்டது 

சேவையில் உள்ளவர்களுக்கு இணையான மெடிக்கல் அலவன்ஸ் , 
பிராட் பேண்ட் கட்டண சலுகை , 
ஓய்வூதியர்களுக்கும் BSNL குடியிருப்புக்களை வழங்குதல் , 
01-01-2008 லிருந்து 31-08-2008 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு பழைய கம்முடேஷன் முறையிலேயே கணக்கிடுதல் ( இதன் மூலம் கூடுதல் தொகை பெறப்பட்டது) 
போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை நம் சங்கம் தீர்த்து வைத்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான தனி நபர் பிரச்சினைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டதன் காரணமாக BSNL ஓய்வூதியர்களின் நலம் காக்கும் மிகப்பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில்  ஐந்தாவது  தமிழ் மாநில மாநாடு கொங்கு நாட்டின் தலைநகரம் கோவையில் இம்மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் கூடுகிறது. வாருங்கள். நம் வெற்றிகளை கொண்டாடுவோம். எதிர்காலத்தை திட்டமிடுவோம் வீறு நடைபோட்டு வெற்றிதனை எய்துவோம் 


நமது அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கத்தில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்து பலமான அமைப்பாக்குவோம். சங்கம் வளர்ப்போம் நாமும் பயனுறுவோம்.  

நன்றி : கோவை வலைத்தளம்

ஓய்வூதிய முரண்பாடு

01-10-2000 க்குப்பின் 30-06-2001 க்கு இடைப்பட்ட காலத்தில் பணி  ஓய்வு பெற்றவர்கள்2001 ஜூலை மாதம் அல்லது அதற்கு பின் ஓய்வு பெற்றவர்கள் வாங்கும் ஓய்வூதியத்தை வீட மிக மிக குறைவாகவே பெற்று வருகின்றனர். இது மாதா மாதம் அவர்களுக்கு தொடர்ந்து ஏற்படும்  இழப்பாகும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 237பென்ஷனர்கள்தான் என DOT கூறியதை நாம் ஏற்க மறுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4230 பென்சனர்கள் என்று நாம் எடுத்துரைத்ததைDOT யும் ஏற்றுக்கொண்டது. 


இழப்பிற்கு காரணம் கடைசி 10 மாத பணி யில் பெற்ற ஊதியத்தில் சில தங்கள் CDAவிகிதத்திலும், சிலமாதங்கள் IDA விகிதத்திலும் பெற்றதனால் சராசரி கணக்கிடுகையில் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது AIBSNLPWA இந்த case ஐ மிகத்  தீவிரமாக எடுத்துக்கொண்டு 16-07-2012 அன்று நம் பொதுச்செயலர் எல்லா விவரங்களுடன் நீண்டதொரு கடிதம் தொலைத்தொடர்பு செயலருக்கு எழுதியதன் அடிப்படையில் file மீண்டும் திறந்து ஆராயப்பட்டது.  


ஏற்கனவே இது போன்ற பென்ஷன் அனாமலி சமயங்களில் கையாண்ட இரு உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டினோம். DOT அதனை ஏற்றுக்கொண்டாலும் DOP & PW  அதனை ஏற்க மறுத்துவிட்டது. எனவே நம் CWC மீட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டதின் பிராகாரம் 31-05-2014 அன்று CAT யில் case file செய்தோம் .DOT 15-04-2015 அன்று தன்  பதிலை பதிவு செய்தது.DOP & PW தானாகவே ஒருநிலைப்பாட்டினை எடுத்து எந்த விதformula விலும் சேராத ஒரு தீர்மானத்தினை கூறியது. ஆனால் அது பென்ஷன் இழப்பீடை நிவர்த்தி செய்யாது என்ற காரணத்தினால் நாம் அதை ஏற்க மறுத்துவிட்டோம் . எனவே இந்த பென்ஷன் அனாமலி case இறுதி சுற்றுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 76 ஆண்டுகளை கடந்தவர்கள் , மேலும் 13 சதவீத பென்ஷனர்கள் இப்போது நம்மிடையே இல்லை எனும் செய்தி நம் நெஞ்சங்களை உலுக்குகிறது. நிர்வாகமும் ,  நீதி மன்ற அமைப்பும்  ஒன்றாக கைகோர்த்து இந்த தீரா பிரச்சினைக்கு  தீர்ப்பளித்தால் நலமாக இருக்கும்.


நன்றி P S R  


நன்றி நெல்லை வலைப்பூ