Tuesday, 20 July 2021
Monday, 12 July 2021
Wednesday, 7 July 2021
Monday, 28 June 2021
நமது 14 வது மாவட்ட மாநாடு
தோழர்களே!
உலகெங்கிலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் அதன் தாக்கம் கட்டுக்குள் அடங்காமல் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. நாமும் நமது தோழர் தோழியர்கள் பலரை இழந்துள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது தோழர்களின் நலனே நமது பிரதான குறிக்கோள். பெருந்தொற்று காரணமாக நமது தோழர்கள் பலர் பேரிழப்புகளை அடைந்துள்ளார்கள். இந்நிலையில் நாம் ஏற்கனவே முடிவு செய்தபடி நமது 14 ஆம் மாவட்ட மாநாட்டை 24-7-2021 அன்று நடத்துவது சாத்தியமானதாகவோ சரியானதாகவோ இருக்க முடியாது. மாநாடு நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நாம் அறியாதவை அல்ல.இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் மாநாடு நடத்த முன்னெடுக்கும் செயலிலும் நம்மை இணைத்துக் கொண்டு வயது மூப்பின் காரணமாக நம்மை களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வது சாத்தியமில்லை. மேலும் நமது மாநில மத்திய சங்கங்களும் நம் ஓய்வூதியர்களின் மேலுள்ள அக்கறையால் இக் கொரோனா காலத்தில் கூட்டங்களோ மாநாடுகளோ நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. எனவே பெருந்தொற்று முற்றிலுமாக நீங்கி நல்ல சகஜ நிலை திரும்பியபின் நமது 14 வது மாவட்ட மாநாட்டை நடத்துவதே நமக்கு நன்மையளிக்கும் என்ற காரணத்தால் மாநாடு 24-7-2021 அன்று நடத்த இயலாது.
எனவே நமது 14 வது மாவட்ட மாநாடு நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம்.
- சரியான முறையில் முகக் கவசம் அணிவோம்,
- சமுக இடை வெளி கடைப்பிடிப்போம்,
- அவசியமெனில் மட்டுமே வெளியில் செல்வோம்,
- அடிக்கடி சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வோம்.
- நம்மையும் காத்து மற்றவரையும் காப்போம்.
இவண்
மாவட்டத் தலைவர் மற்றும் செயலர்,
AIBSNLPWA,
மதுரை.
Thursday, 24 June 2021
ISSUE OF PENSION SLIP BY PENSION DISBURSING BANKS.,
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியபின் ,ஓய்வூதிய தொகையின் பகுதிகளான, அடிப்படை ஓய்வூதியத் தொகை, IDA , நிலுவைத்தொகை ( ஏதேனும் இருப்பின் ) , வருமானவரி பிடித்தம் ஆகியவைகளை ( Pension Slip ) ஓய்வூதியர்கள் கைப்பேசி எண்ணிற்கு SMS , மற்றும் e -மெயில் மூலமாக ஓய்வூதியத்தை வழங்கும் வங்கி, தெரிவிக்க வேண்டும் என DoP &PW அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது. உத்தரவின் நகல்கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tuesday, 22 June 2021
Dear Comrades,
Good evening.
Today we had a meeting with Joint CCA Pension and Joint CCA PVA. Discussed some of the Pending issues for which authorisation to be issued for Family Pension. He assured to issue authorisation after receipt of clarification from BSNL.
Regarding the issue with respect to Commutation restoration date in SAMPANN for VRS 2019 Pensioners, action taken with DOT NewDelhi. This is a software issue and hence to be resolved by HQrs only.
Regarding furnishing of GPF Balance details for VRS 2019, Balance sheet as on 31.01.2020 will be sent to respective Circle of BSNL shortly .In this connection, We have already taken up the case with Jt.CCA earlier.
Orders regarding FMA Payment to pensioners residing in non covered CGHS areas will be issued during 3rd week of July 2021. Procedures to exercise option will be intimated in the said letter.
Form 16 for FY 2020-21 will be available in SAMPANN Portal during July.
Thanking you.
R.Venkatachalam
Non-CGHS area- வில் உள்ள BSNL-IDA பென்ஷனர்களுக்கு, Fixed Medical Allowance (FMA) ரூபாய் 1000/- மாதம் தோறும் கொடுப்பது குறித்து , இன்று JT. CCA Dr. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் நானும், மாநில துணை செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணனும் பேசினோம். ஜூலை 21 இரண்டாம் வாரத்திற்குள் option கேட்டு கடிதம் அனுப்ப படும் என்று உறுதி அளித்துள்ளார்
VRS ல் வந்தவர்க்களுக்கு 31.01.2020 அன்று என்ன GPF balance இருந்தது என்பது குறித்து சம்பந்த பட்ட BSNL SSA களுக்கு அனுப்பி வைக்க படும்.R .வெங்கடாசலம்








