Monday 21 December 2015

PENSIONERS DAY AT MADURAI ON 20-12-2015












20-12-2015 அன்று மதுரையில் ஓய்வூதியர் தினம் காலை 1௦ ;3௦ மணியளவில் மதுரை B S N L பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாவட்டத்தலைவர் தலைவர் திரு மு. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இறைவணக்கத்திற்குப்பின் சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தில் சிக்குண்டு இறந்தவர்களுக்கும், உயிர் நீத்த நமது சங்க உறுப்பினர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தலைவர் தனது உரையில் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அதிகபட்ச அளவில் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாவட்டச்செயலர்  சென்ற பொதுக்குழு கூட்ட அறிக்கை படிக்க சபை அதை ஏற்றுக்கொண்டது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெல்லை மாவட்டச்செயலரும் ,மத்திய சங்க துணைப்பொதுச்செயலருமான திரு s. அருணாசலம் அவர்கள் தனது சிறப்புரையில்
  • ஓய்வூதியர் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பு
  • பெங்களுருவில் நடந்த 3 வது அகில இந்திய மாநாடு
  • 78.2% IDA இணைப்பு -தற்போதைய நிலை-இந்த நிலை எட்ட சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் -மத்திய அமைச்சர் மாண்புமிகுஆனந்தகுமார் அவர்களின் பங்கு
  • 7 வது சம்பளக்குழு அறிக்கை 
  • அனைத்து ஒய்வூதியர் சங்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் -அதில் நமது சங்கத்தின் நிலைப்பாடு மற்றும் முயற்சிகள் குறித்து  விரிவாகப்பேசினார்.
 நன்றியுரைக்குப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

        கூட்டத்தில் சுமார் 3௦ பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் அதிகமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
  
       கூட்டத்தில் மட்டும் தோழர்கள் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 25000/- வழங்கியுள்ளனர். இந்தத்தொகை சேர்த்து இதுவரை நமது மாவட்டத்தில் ரூ 56000/- சேர்ந்துள்ளது என்றும் இது நாளை (21-12-2015) அன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற செய்தியை பலத்த கரகோஷத்திற்கிடையே மாவட்டச்செயலர் தெரிவித்தார்.





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.