20-06-2018 ல் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்.
இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது.
01-01-2007 ல் BSNLஊழியர் ஊதிய மாற்றம் கண்டபோது
உழைத்து ஓய்ந்த ஓய்வூதியர் அடைந்தனர் ஏமாற்றம் .
ஓய்வறியா ஒப்பற்ற தலைவர்கள் முயற்சியாலே ,
ஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது என்ற நிலையினை
மாற்றி காட்டினோம் சாதனை படைத்தோம் நாம்.
15-03-2011 ல். ஓய்வூதிய மாற்றம் நிலுவையுடன் பெற்றோம்
78.2% IDA இணைப்பு பெற ஊழியர் மற்றும் நாம் இணைந்து போராட்டங்கள் நாளும் பல நடத்தி காட்டினோம்.
10-06-2013 ல் ஊழியர் மட்டும் பெற்றனர்.உவகை உற்றனர்.
தனித்து விடப்பட்டோம் ஆயினும் துவள வில்லை நாம்
இடையறாத போராட்டத்தால் மதியூக முயற்சிகளால்
18-07-2016 ல் ஓய்வூதியரும் பெற்றனரே நிலுவையோடு
உவகை மிகக் கொண்டனரே மனதோடு.
60:40 உடன்பாட்டினை மறையச் செய்தோம்
என்றும் மகிழ்ந்து கொண்டாட இமாலய வெற்றியல்லவா அது !
ஏழாவது சம்பள குழு பரிந்துரையில் நம் ஓய்வூதிய மாற்றம்
இதுவே நம் துயர் தீர்க்கும் மா மருந்தாம் .
இதனை பெற்றுவிடின் எதிர்கால ஓய்வூதிய மாற்றம்
இன்னலில்லாமல் பெற்று மகிழ்ந்திடுவோம் நாம்.
இதுவே நம் கோரிக்கை , கோரிக்கை வென்றெடுக்க
போராடும் கோடிக் கை .
சாதனை படைக்கவே பிறந்த சங்கமிது ,
இதனையும் பெற்றுத் தரும்.
இத்தனையும் சாத்தியம் எதனாலே ?
தானைத் தலைவர்களின் மதியூகத்தாலே ,
தொண்டர்கள் காத்து நிற்கும் ஒற்றுமையாலே
வாருங்கள் ஒன்று கூடுவோம், அவணி குலுங்க
கூவிடுவோம் AIBSNLPWA வாழ்க! வாழ்கவே!!
N.NATARAJAN,
AIBSNLPWA,
THANJAVUR