Wednesday 4 July 2018

NEWS FROM TN CIRCLE

Wednesday, 4 July 2018


As all of us are aware that our Tamilnadu Circle Conference is to be conducted on 7th and 8th August 2018 in Trichy.
In this connection a review committee meeting was held in Trichy on 3rd July in which our Circle Secretary Com. K.Muthiyalu attended and gave suggestions, ideas and directions for the smooth conduct of conference.

Tuesday, 3 July 2018



20-06-2018 ல் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்.
இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது.

01-01-2007 ல் BSNLஊழியர்    ஊதிய மாற்றம் கண்டபோது
உழைத்து ஓய்ந்த ஓய்வூதியர் அடைந்தனர் ஏமாற்றம் . 

ஓய்வறியா ஒப்பற்ற தலைவர்கள் முயற்சியாலே ,
ஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது என்ற நிலையினை
மாற்றி காட்டினோம் சாதனை படைத்தோம் நாம்.
15-03-2011 ல்ஓய்வூதிய மாற்றம் நிலுவையுடன் பெற்றோம்


78.2% IDA இணைப்பு பெற ஊழியர் மற்றும் நாம் இணைந்து போராட்டங்கள் நாளும் பல நடத்தி காட்டினோம்.

10-06-2013 ல் ஊழியர் மட்டும் பெற்றனர்.உவகை உற்றனர்.
தனித்து விடப்பட்டோம் ஆயினும் துவள வில்லை நாம்
இடையறாத போராட்டத்தால் மதியூக முயற்சிகளால்
18-07-2016 ல்  ஓய்வூதியரும் பெற்றனரே நிலுவையோடு 
உவகை மிகக் கொண்டனரே மனதோடு.  

60:40 உடன்பாட்டினை  மறையச் செய்தோம்    
என்றும் மகிழ்ந்து கொண்டாட இமாலய வெற்றியல்லவா அது !

ஏழாவது சம்பள குழு பரிந்துரையில் நம் ஓய்வூதிய மாற்றம்
இதுவே நம் துயர் தீர்க்கும்  மா மருந்தாம் .

இதனை பெற்றுவிடின் எதிர்கால ஓய்வூதிய மாற்றம்
இன்னலில்லாமல் பெற்று மகிழ்ந்திடுவோம்  நாம்.
இதுவே நம் கோரிக்கை , கோரிக்கை வென்றெடுக்க
போராடும் கோடிக் கை .

சாதனை படைக்கவே பிறந்த சங்கமிது ,
இதனையும் பெற்றுத் தரும்.
இத்தனையும் சாத்தியம் எதனாலே ?
தானைத் தலைவர்களின் மதியூகத்தாலே ,
தொண்டர்கள் காத்து நிற்கும்  ஒற்றுமையாலே
வாருங்கள் ஒன்று கூடுவோம்,  அவணி குலுங்க
கூவிடுவோம் AIBSNLPWA   வாழ்க! வாழ்கவே!!

N.NATARAJAN,
AIBSNLPWA,
THANJAVUR

Monday, 2 July 2018


AIBSNLPWA Madurai District secretary Com. Veerachamy with profound pleasure informs that they had sent 50,000/- for All India Conference Fund up to so far in three installments of Rs 9900/- + Rs 23750/- and Rs 16350/- respectively.
The Secretary also said with pride that the whole unit of Madurai is trying hard to collect little more amount in this month.
Hats off to Madurai Comrades.

Sunday, 1 July 2018



உழைப்பு !  உழைப்பு!!   உழைப்பு !!!
ஓய்வறியா உழைப்பு,
ஓய்வூதியர் நலம் காக்க , துயர் துடைக்க 
நாளும் பயணம் , பொழுதும் அவர்தம் சிந்தனை.
இன்னும் சொல்ல சொல்ல  நா இனிக்கும் நெஞ்சம் நிறையும்.
ஆம் . இத்தனைக்கும் சொந்தக்காரர் நம் தமிழ்மாநில செயலர் தோழர் முத்தியாலுவின் அரும்பணிகளை பாராட்டும் விதமாக அவருக்கு " வாழ்நாள் சாதனையாளர் விருது " அரங்கு நிறைந்த மன்றத்தில் வழங்கி நெல்லை மாவட்ட AIBSNLPWA  சங்கம் பெருமையுற்றது.
கிளைச் செயலராக , மாவட்ட செயலராக , மாநில செயலராக , ஓய்வூதியர் சங்க அகில இந்திய தலைவராக , அகில இந்திய அமைப்புச் செயலராக, மாநில தலைவராக, மாநில செயலராக ஒடி ஒடி உழைத்து , என்றும் ஓய்வூதியர் சிந்தனை , எப்போதும் அவர்களின் மேம்பாடு என்று அணுப்பொழுதும் மாற்று சிந்தனையில்லா ஒரே நோக்குடன் அல்லும் பகலும் தொண்டாற்றி வரும் தோழர் முத்தியாலுவை எவ்வளவுதான் பாராட்டினாலும் தகும் .
அவர் சேவையால் பயனுற்ற நெஞ்சங்கள் வாழ்த்தும் வாழ்த்துக்களே அவரை பல நூறாண்டு வாழ செய்யும்.
வாழ்க அவர் தளர்வறியா சேவை !     வளர்க அவர் தொண்டுள்ளம்!! 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.