International Womens' Day Celebration in Madurai
Today International Womens' Day was celebrated in a gala manner by AIBSNLPWA Madurai District Union. Photos clicked are posted here.
மதுரையில் உலக மகளிர் தினம் மற்றும் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம்
8-3-2020
8-3-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 1000
மணிக்கு மதுரை பி எஸ் என் எல் தலைமைப் பொது மேலாளர் அலுவலக மன மகிழ்
மன்றக்கூடத்தில் உலக மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கு திருமதி கல்யாணி சுந்தரேசன்
அவர்களின் இனிய இறைவணக்கப் பாடலுடன் தோழியர் இந்திராணி சுந்தரராஜன் தலைமையில் தொடங்கியது.
5௦க்கும் மேற்பட்ட தோழியர்களுடன் சுமார் 3௦௦ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த தோழர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
திருமதி T S சுந்தரவருணி அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்த, தலைவர் தனது முன்னுரையில் மகளிர் தின வரலாறு பற்றி பேசினார்.
மும்மதங்களில் மகளிர் பெருமை, மதுரை
மண்ணின் பெருமை, மதுரைத்தமிழின் பெருமை குறித்து, உணர்ச்சிபெருக்கில் நா உலர உலக
மகளிர் தின சிறப்பு போரூரை நிகழ்த்தினார்.திருமதி P F மதினா யாஸ்மின்.
திருமதி R வத்சலா அவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள மகளிர் தின சிறப்புக்கவிதை வாசித்தார்.
மதுரை காவல்துறையினரால் 7-3-2020 அன்று
நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் சிறப்பு விருது பெற்ற மதுரை மாவட்ட பி எஸ் என் எல் முதன்மைப்பொது மேலாளர் திருமதி S E ராஜம் ITS அவர்கள்
தனது வாழ்த்துரையில் பெண்களின் சமத்துவம் பற்றியும் கைத்தொலைபேசி
பெண்களுக்கு தொல்லை பேசியாக அமையாமலிருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை
விளக்கமாக எடுத்துரைத்தார்.
பொது மேலாளர் மற்றும் தோழியர்கள் இந்திராணி
சுந்தரராஜன், கல்யாணி சுந்தரேசன், T S சுந்தரவருணி, P F மதினா யாஸ்மின், R வத்சலா
ஆகியோர் திருமதி பானுமதி அவர்களால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
அவர் பி எஸ் என் எல் லில் உழைக்கும் மகளிர் ஐவருக்கு நமது சங்க
தோழியர் சார்பாக மகளிர்தின பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் நண்பகல் 12௦௦ மணிக்கு மதுரை
மாவட்டச்கங்கத்தின் சிறப்புப் பொதுகுழுக் கூட்டம் திரு GR தர்மராஜன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலரால் சென்ற மாவட்ட செயற்குழு,மற்றும்
பொதுக்குழு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு, விவாதத்திற்குப்பின் பொதுக்குழுவினால் ஏற்கப்பட்டது.
அதில் நமது AIBSNLPWA மதுரை மாவட்ட
மகாநாட்டினை 5-7-2௦2௦ அன்று நடத்துவது என்றும், நன்கொடையாக ரூ 3௦௦ (முன்னூறு)
உறுப்பினர்களிடம் வசூலிப்பது எனவும் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச்செயலர் தோழர்
R வெங்கடாசலம் மற்றும் அகில இந்திய பொருளாளர் தோழர் T S விட்டோபன்
அவர்களையும் அழைப்பது, தேவையான எண்ணிக்கையில் சுருக்கமான ஆண்டறிக்கை,
மற்றும் திருத்தப்பட்ட தொலைபேசிக் கையேடு அச்சிடுவது எனவும், சுமார் ரூ13O/-க்கு
உபயோகமான பரிசுப்பொருள் வழங்குவது எனவும்
ஆரோக்கியமான விவாதங்களுக்குப்பின் முடிவு செய்யப்பட்டது.
தோழர் ராஜாராம் நன்றி கூற சிறப்பான மதிய
உணவுடன் கூட்டம் இனிது முடிந்தது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.