Sunday, 22 May 2022

ஓய்வூதியர் தினம் 1-5-22

           1-5-2022 ஞாயிறு அன்று மதுரையில் ஓய்வூதியர் தினமும் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் மாவட்டத்தலைவர் திரு G R தர்மராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பல மகளிர் உட்பட சுமார் 250 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்  தாய் வாழ்த்து, அஞ்சலிக்குப்பின், தலைவர்  தன் உரையில் மே தினத்தின் சிறப்புகளைப்  பற்றியும் 28-4- 22 ல் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு பற்றியும் சிறப்பாக விளக்கினார். பின்னர் 70 வயதை நிறைவு செய்த ஓய்வூதியர்கள்  கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடை பெற்ற பொதுக்குழுவில் மதுரை மாவட்டத்தின் 14 மாவட்டமாநாடு குறித்து விவாதிக்கப்பட்டு 11-6-2022 அன்று மாநாட்டினை ஆரப்பாளையம் குரு திரையரங்கம் அருகில் உள்ள ஸ்ரீ லெட்சுமி மஹாலில் ,

 தமிழ் மாநிலச்செயலர் தோ  .  R. வெங்கடாசலம், 

மத்திய சங்க பொருளாளர்    தோ . T S விட்டோபன் 

அவர்களின் சிறப்புரையுடன் நடத்துவது, மாவட்ட மாநாடு நன்கொடை ரூ 300,அகில இந்திய மாநாடு நன்கொடை ரூ 50 விருந்தினர் கட்டணம் ரூ 100 வசூலிப்பது என்ற செயற் குழு முடிவு ஏற்கப்பட்டது. நன்றி உரை, நாட்டுப்பாண்க்குப் பிறகு சிறப்பான மதிய  உணவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

  இந்நிகழ்ச்சியின் சில  புகைப்படங்கள் கீழே.















No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.