தொலைத்தொடர்புத்துறை
ஓய்வூதியர்களும் மருத்துவத்திட்டங்களும்.
தொலைத்தொடர்புத்துறையில் இப்போதுள்ள ஓய்வூதியர்களை
3 வகையினராகப் பிரிக்கலாம்.
1.
தபால் தந்தி துறையில் பணியேற்று தபால் தந்தி துறை அல்லது தொலைத்
தொடர்புத்துறையில்
பணி நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று
ஓய்வூதியம் பெறுவோர். இவர்கள் மத்திய அரசு ஓய்வூதியர் அல்லது CDA PENSIONERS
2.
தபால் தந்தி
துறையில் பணியேற்று தபால் தந்தி
துறையிலும் தொலைத்தொடர்புத்துறையிலும் பின்னர் BSNLலில் சுவீகரிக்கப்பட்டு
(ABSORBED IN
BSNL) BSNLலில் ஊழியர்களாக பணி
நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர். இவர்கள் IDA PENSIONERS.
3.
இவர்கள் தவிர BSNL லில் பணி ஏற்று BSNL ஊழியர்களாக பணி
நிறைவு செய்து / விருப்ப ஓய்வு பெற்று EPF ஓய்வூதியம் பெறுவோர்.
முதல் வகையினரான மத்திய அரசு ஓய்வூதியர் அல்லது CDA PENSIONER களுக்கு மட்டும் உள்ள தனியான மருத்துவ
திட்டம் CGHS.
இரண்டாம் வகையினர் BSNL MRS (BSNL
Medical Reimbursement Scheme) திட்டத்தையோ அல்லது CGHS. திட்டதையோ தேர்ந்தெடுக்கலாம். CGHS ல் இணைந்த பின் MRS க்கு மாற முடியாது.
மூன்றாவது வகையினர் அதாவது EPF ஓய்வூதியம் பெறுவோர் CGHS
ல் இணைய முடியாது. இவர்கள் BSNL MRS
திட்டத்திலேயே தொடர்வார்கள்.
மருத்துவ
வசதிகள் :
முதல் வகையினர் CGHS வரம்புக்குள் (CGHS மருத்துவ மனையை சுற்றிய 5 கி மீ. பகுதி) வசித்தால் உரிய
கட்டணம் செலுத்தி CGHS மூலம் உள்
மற்றும் வெளி மருத்துவ சிகிச்சை பெறலாம். இவர்கள்
நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெற முடியாது. CGHSல் இணைந்த ஒருவர் அதன் வரம்புக்குள் வராத பகுதியில் வசித்தால் அவரின்
விருப்பப்படி அவர் CGHS ல் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சையோ, அல்லது CGHS ல் உள் மருத்துவ சிகிச்சையும் வெளி மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப் படியும் பெறலாம்.
இந்த வெளி மருத்துவ விருப்பத்தை ஒரே ஒரு முறை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி
உண்டு.
இரண்டாம் வகையினர்
1.
BSNL MRS (BSNL
Medical Reimbursement Scheme) திட்டத்திலேயே தொடரலாம்.
2.
CGHS வரம்புக்குள்
வரும் பகுதியில் வசிப்பவர்கள்
BSNL MRS திட்டத்திலிருந்து முற்றிலும் விலகி, (அதாவது BSNL MRS அட்டையை BSNL நிர்வாகத்திடம் ஒப்படைத்து, SURRENDER
CERTIFICATE பெற்று), BSNL லிருந்து
திரும்பப் பெறக் கூடிய உரிய கட்டணம் செலுத்தி
முற்றிலுமாக CGHS திட்டத்தில் இணைந்து உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சைகளை CGHS மூலம் பெறலாம். இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட
மருத்துவப்படி பெற முடியாது. (CGHS க்கு செலுத்த
வேண்டிய கட்டண விகிதங்கள் குறித்தும் அதனை BSNL லிருந்து திரும்பப் பெறும் முறை பற்றியும் கீழே
தரப்பட்டுள்ளது.)
3.
CGHS வரம்புக்குள் வராத பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்,
1.BSNL MRS திட்டத்திலிருந்து
முற்றிலும் விலகி, மேலே கூறிய உரிய கட்டணம் செலுத்தி CGHS திட்டத்தில்
இணைந்து உள் மற்றும் மருத்துவ சிகிச்சையை பெறலாம்
அல்லது உள் மருத்துவ சிகிச்சையை மட்டும் CGHS மூலம் பெற்று வெளி மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி பெறலாம். இந்த வெளி மருத்துவ விருப்பத்தை ஒரே ஒரு முறை
மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.
2. BSNLMRS திட்டத்திலிருந்து முற்றிலும் விலகி CGHS ல் இணையாமலேயே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி மட்டும் பெறலாம்.
இத்தனை விருப்பத்தேர்வுகள் உண்டு.அவரவர்
வசதிப்படி ,விருப்பப்படி தேர்வு செய்யலாம்.
இரண்டாம்
வகையினர் முன்னே இருக்கும் 3 விருப்பத்தேர்வுகள் படி மருத்துவ வசதி பெற அவர்கள் செய்யவேண்டியவை :
விருப்பத்தேர்வு 1
செய்யவேண்டியது ஏதும் இல்லை. MRS அட்டையை பத்திரமாக வைத்து MRS விதி முறைகளின் படி சிகிச்சைகளை.
எடுத்துக்கொள்ளலாம்.
விருப்பத்தேர்வு
2
முதலில் BSNLMRS அட்டையை BSNL நிர்வாகத்திடம் ஒப்படைத்து ஒப்படைப்பு சான்றிதழ் (SURRENDER CERTIFICATE)பெறவேண்டும். பிறகு நமது ஓய்வூதிய உத்தரவு மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவுடன் (ஏதேனும் இருப்பின்) இதனை இணைத்து CCA தமிழ் நாடு அவர்களுக்கு CGHS ல் இணைய நமது IDA சம்பளத்திற்கிணையான CDA சம்பள விகிதத்தை (PAY SCALE MAPPING)கேட்டு பெறவேண்டும். உரிய கட்டணம் செலுத்தி CCA விடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்துடன் திருச்சி, சென்னை, நெல்லை யில் உள்ள ஏதாவது ஒரு CGHS அலுவலகம் சென்று CGHS ல் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தினை உரிய ஆவணங்களுடன் (கீழே தரப்பட்டுள்ளன) சமர்ப்பிக்கவேண்டும். அவர்கள் தற்காலிக அடையாள அட்டை( CGHS index card to be downloaded in A4 sheet) மற்றும் நிரந்தர பிளாஸ்டிக் அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வழி காட்டுவர். அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு இந்தியாவில் உள்ள எந்த ஒரு CGHS மருத்துவ மனையிலும் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சை பெறலாம்.
விருப்பத்தேர்வு
3(1)
விருப்பம் 3 படி ஒருவர் CGHS ல் இணைய , “நான் CGHS வரம்புக்குள் வராத பகுதியில்
வசிக்கிறேன். ஆனாலும் CGHS க்கு உரிய கட்டணம் செலுத்தி உள் மருத்துவ
சிகிச்சையும் வெளி மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படியும் பெறுகிறேன்” என்ற விருப்பத் தேர்வினை விருப்ப விண்ணப்ப
படிவத்தில்[ஆப்ஷன் 2(I)] குறித்து CGHS வரம்புக்கு உட்படாத பகுதில் வசிப்பதற்கான சான்றளிப்பையும் (undertaking) CCA தமிழ்நாடு அவர்களுக்கு அனுப்ப
வேண்டும். அவர்களிடமிருந்து பெற்ற IDA சம்பளத்திற்கிணையான CDA
சம்பள விகித பட்டியலை (PAY
SCALE MAPPING) இணைத்து விருப்பம் 2ல் கண்டபடி
CGHS அலுவலகத்தில்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே வெளிப்புற மருத்துவ சிகிச்சைக்கு பதில்
நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி வேண்டும் என கோரும் கடிதத்தினையும் இணைத்து CGHS ல் இணைந்து CGHS மூலம் உள்
மருத்துவ சிகிச்சையும், வெளி மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படியும் பெறலாம்
விருப்பத்தேர்வு
3(2)
BSNLMRS அட்டையை BSNLநிர்வாகத்திடம்
ஒப்படைத்து பெற்ற ஒப்படைப்பு சான்றிதழ் (SURRENDER CERTIFICATE), ஓய்வூதிய
உத்தரவு மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவுடன்(ஏதேனும் இருப்பின்), PPO ல் உள்ள முகவரியில் மாற்றம்
இருந்தால் சரியான முகவரி உள்ள ஆதார் அட்டையின் நகல் இவைகளை இணைத்து CCA தமிழ் நாடு அவர்களுக்கு, “நான்
CGHS வரம்புக்குள் வராத பகுதியில்
வசிக்கிறேன். CGHS மூலம் உள் மற்றும் வெளி மருத்துவ சிகிச்சை
பெறாமல், நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி
மட்டும் பெறுகிறேன்” என, OPTION FORM ல் [ஆப்ஷன் 2(II)] என
குறித்து UNDERTAKING
FORM உடன் அனுப்பவேண்டும்.
அவர்கள் நமது ஓய்வூதியத்துடன்
நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி கிடைக்க ஆவன செய்வார்கள்.
இப்போது ஓய்வூதிய விண்ணப்பத்திலேயே மருத்துவத் திட்டத்திற்கான விருப்பம் கேட்கப்படுகிறது. BSNL MRS திட்டத்தில் இருந்து CGHS வசதிக்கு மாறுவதாக ஓய்வூதிய விண்ணப்பத்துடன் விருப்பம் தெரிவித்திருந்ததால். PPO வில் மருத்துவப்படி மாதம் ரூ.1000... என்று குறிப்பிடப்படுகிறது.
CGHS ல் இணைய தேவையான ஆவணங்கள்
1 ,CGHS விண்ணப்பம் (கீழே தரப்பட்டுள்ளது.)
2. BSNL MRS
Surrender Certificate
3. CCA விடமிருந்து பெறப்பட்ட சம்பள விகிதப்பட்டியல்
4. CGHS க்கு பணம் செலுத்திய ரசீது நகல்.
5. CGHS ல் இணையும் குடும்ப நபர்களின் ஆதார் நகல் (Only Dependents)
6.
இணைபவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
7. PPO நகல் மற்றும் பென்ஷன் மாற்ற உத்தரவு நகல்(இருப்பின்)
8
நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி கோரினால்
அதற்கான விண்ணப்பக்கடிதம்.
9.
இணைபவர்களின் இரத்த வகைக்கான ஆய்வுக்கூட சான்று.(விரும்பினால்)
CGHS APPLICATION FORM
நடைமுறையில் உள்ள CGHS கட்டண விகிதங்கள்
CGHS க்கு செலுத்திய கட்டணத்தை BSNL லிருந்து திரும்பப் பெறுவதற்கு
1.CGHS க்கு கட்டணம் செலுத்திய ரசீது
2.FORMAT IV. (கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
3.PPO நகல்.
4.CGHSஅடையாள அட்டை நகல்.
5.CGHS Index card copy (Down loaded in A4 Sheet.)
6.வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் / Cancelled Cheque
leaf.
7.MRS surrender
certificate copy.
இவைகளை இணைத்து PGM மதுரை அவர்களுக்கு CGHS க்கு செலுத்திய
கட்டணத்தை
திருப்பித்தருமாறு கோரி மனு அனுப்பவேண்டும்.
இவ்வாறு BSNL லிருந்து CGHS க்கு செலுத்திய கட்டணத்தினை ஒரே ஒரு முறை மட்டுமே திரும்ப பெறமுடியும்.. அதனால் கட்டணத்தை வாழ் நாள் கட்டணமாக (10 ஆண்டுக்கு) செலுத்துவதே சிறந்தது.
ஏனெனில் முதல் முறை 10 ஆண்டுக்கு குறைவான காலத்திற்கு CGHS
கட்டணம் செலுத்தி அதனை BSNL
லிருந்து திரும்பி வாங்கியபின் மறுபடியும் கட்டணம் செலுத்தி CGHS திட்டத்தை புதுப்பித்தால்
இரண்டாவது முறை கட்டிய பணத்தை BSNL
லிருந்து திரும்ப பெறமுடியாது.
CGHS க்கு கட்டணம் செலுத்திய ரசீது நகலினை BSNL லிருந்து
பணம் திரும்பக் கிடைக்கும் வரை பாதுகாப்பது நல்லது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.