Thursday, 31 December 2020
Tuesday, 29 December 2020
கண்ணீர்
அஞ்சலி.
நமது
மாவட்டச் சங்க மூத்த தோழரும், மாவட்டப் பொருளாளர் பொறுப்பினை திறம்பட பல காலமாக தன் உடல் நலிவுகளையும்பொருட்படுத்தாது சிறப்பான பணி புரிந்து அனைவரின் மனதிலும் நிறைந்தவருமான, மதுரை K புதூர், ஆத்திகுளம்
பிரதான சாலை, 5 வது குறுக்குத்தெரு, கதவு ஏண் 5/173 ல் வசித்தவரும், மதுரை
தந்தி அலுவலகத்தில் CTM ஆக பணிபுரிந்து பணிநிறைவில்
ஓய்வு பெற்றவருமான திரு
S ராஜாமணி அவர்கள் உடல் நலம் குன்றிய நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இன்று(28-12-2020, திங்கட்கிழமை) பிற்பகல் 2:20 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது இழப்பு நமது மாவட்டச்சங்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குவோம். அவரைப்பிரிந்து
வாடும் ஆவரது குடும்பத்தார்களுக்கும்,
நமது சங்க உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
9486997010.
S .வீராச்சாமி
மாவட்ட
செயலர்
Thursday, 24 December 2020
Tuesday, 22 December 2020
2019 விருப்ப ஓய்வூதியத்திட்டத்தில் 2020 ஜனவரி31 ல் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் கவனத்திற்கு
2019 விருப்ப ஓய்வூதியத்திட்டத்தில் 2020 ஜனவரி 31 ல் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் அனைவரும் 2021 ஜனவரி மாதத்தில் உயிர் வாழ் சான்றிதழ் தமிழ் நாடு CCA அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தடையின்றி ஓய்வூதியம் பெற 2021 ஜனவரி 2௦ க்கு முன் உயிர் வாழ் சான்றிதழ் தமிழ் நாடு CCA அவர்களுக்கு அனுப்புதல் நலம்.
Thursday, 3 December 2020
Wednesday, 25 November 2020
தோழர்களே,
Pension Adalat நடத்த வேண்டும் என்று DOT கடந்த 14.10.2020 ல் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் (24.11.2020) Online மூலமாக நடைபெற்றது.
மாநில சங்கத்தின் சார்பில் 47 பிரச்சினைகள் கொடுத்ததில் 19க்கு உத்திரவிட்டதாக தெரிவிக்கபட்டது. மற்றவற்றிற்கு சொல்லப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக Jt. CCA திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் அணுகுமுறையும், அவர் எடுத்து சொன்ன விதமும் ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் adalat திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு சென்ற நமக்கு ஏமாற்றத்தையே தந்தது.
பொதுவாக தலையிட்டு விளக்கம் கொடுக்கும் CCA அவர்கள் இம்முறை அமைதியாகவே இருந்தார். மேலும் கூட்டத்தில் பங்கேற்க அனுப்பிய Link குறித்து விவரமாக விளக்கப்படாத காரணத்தால்தோழர்கள் DG, V.ராமராவ், K.முத்தியாலு கலந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மிகுந்த முயற்சிக்கு பிறகு DG, V.ராமராவ் பங்கேற்றனர்.
தோழர்கள் A.சுகுமாரன்,STR Division செயலர் S.சுந்தரகிருஷ்ணன், கோவை மாவட்டம் B.அருணாச்சலம் ACS ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனி வரும் adalat களில் Jt. CCA அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.
மாநில செயலாளர்
Tuesday, 24 November 2020
Subscribe to:
Posts (Atom)







