Monday, 31 December 2018
Saturday, 29 December 2018
AIBSNLPWA MADURAI DISTRICT WELCOMES THE NEW PENSIONERS.
AIBSNLPWA: THE ORGANIZATION OF COMMITTED AND EXPERIENCED WELCOMES THE NEW PENSIONERS
LIST OF THE LAST BATCH OF RETIREES OF THE YEAR 2018 (ON 31-12-2018 )
S/S
1. N CHANRIKA , DGM
2. R GUNASEKARAN , SPECIAL GRADE DRIVER.
3. V MURUGAN, TT
4. M .POOVAKINGAM ,TT
5. A. RAJ MOHAMED, O.S (T)
6. N THANGAPPAN, TT.
7. K.URMILA, SDE.
Monday, 24 December 2018
Tuesday, 18 December 2018
ஓய்வூர்தியர் தினம் 16-11-2௦18 மதுரை
16-2-2018 அன்று காலை 1௦ மணியளவில், மதுரை BSNL
முதன்மைப் பொது மேலாளர் அலுவலக மன மகிழ் மன்ற அறையில், மாவட்டத்தலைவர் சத்யசீலன் அவர்கள் தலைமையில் ஓய்வூதியர் தினம் தொடங்கியது. மறைந்த நமது மாவட்டத்தலைவரின் சீரிய பணியினை நினைவு கூர்ந்து இந்த அரங்கத்திற்கு தோ. M. ரவீந்திரன் நினைவு அரங்கம் என் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
50க்கும் அதிகமான மகளிர் உள்ளிட்ட 3௦௦ க்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நமது மதுரை மாவட்ட முதன்மைப்பொது மேலாளர், திருமதி S E ராஜம், நமது மாநிலச்செயலர் திரு R.வெங்கடாசலம், , நமது மாநிலச்சங்க WEB MASTER , திரு N. மோகன் ,மதுரை BSNL துணைப்பொது மேலாளர்கள், திருமதி சந்திரிகா, திரு V K சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு.ஆனந்தன் அவர்களின் இறைவணக்கப் பாடலுக்குப்பின் நமது 78.2 % IDA இணைப்பில் நமக்கு உறுதுணை புரிந்த மறைந்த மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு ஆனந்த குமார், இயற்கையின் சீற்றத்தால் இன்னுயிர் ஈந்த நாகை,தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்கள், மறைந்த நமது மாவட்ட முன்னாள் தலைவர் திரு ரவீந்திரன், மற்றும் மறைந்த நமது சங்க உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துமுகத்தான் இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.
சென்ற கூட்ட அறிக்கை செயலரால் படிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட்டது. பின் மாவட்ட மற்றும் மாநில உதவிச்செயலர் தோழர் சூரியன் அவர்கள், மாவட்ட செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட, கஜா புயல் நிவாரண நிதி, மாவட்ட உறுப்பினர் நலத்திட்டம், புதிய கிளைகள் துவங்குதல்,ஓய்வூதியர் கௌரவிப்பு வயதை 7௦ஆக குறைத்தல், குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார். அவற்றிக்கும் அவை ஒப்புதல் பெறப்பட்டது.
நமது முன்னாள் மாவட்டச்செயலர் திரு GRD அவர்கள், ஓய்வூதியம் வந்த வரலாறு குறித்த சிறப்பான உரை நிகழ்த்தினார்.
முதன்மைப்போது மேலாளர் தனது உரையில் BSNL லின் தற்போதைய நிதி நிலை குறித்து விளக்கி, BSNL தொலைபேசி நிலையங்களை மூடும் முடிவு மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். BSNL வளர்ச்சிக்கு எப்போதும் அளிக்கும் ஓய்வூதியர்களின் பங்களிப்பு தொடர வேண்டினார். திருமதி சந்திரிகா DGM அவர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருப்பதாகவும் ஓய்வுக்குப்பின் நமது சங்கத்தில் தன்னை இணைத்துக்கொள்ள இருப்பதாகவும், வாழ்த்துக்களையும் கூறினார்.
நமது மாநிலச்செயலர், மலர்க்ரீடம் சூட்டப்பட்டு, நினைவுப் பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டார். முதன்மைப்போதுமேலாளர்,துணைப்பொது மேலாளர் ,ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். வெப் மாஸ்டர் மோகன் நாம் வழங்கிய மலர்மாலை,சால்வை , மற்றும் நினைவுப்பரிசினை அன்புடன் ஏற்றார்,
திரு மோகன் அவர்கள் சங்க வளர்ச்சி கோட்பாடு, "நமக்கிருவர் " , அதாவது ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்த பட்சம் இரண்டு புதிய உறுப்பினர்களை (ஆயுள் சந்தாதாரராக) சேர்த்து வளர்ச்சிக்கு வழிகோல வேண்டும், அப்போதுதான் நமது நியாயமான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க முடியும் என்றார்.
மாநிலச்செயலர் தனது நெடிய உரையில், கஜா புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப்பணிகளில் நமது பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்.
நமது மாவட்டத்திலும் தேவைப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மாநிலச்சங்கம் தயாராக இருப்பதாகவும்,அப்படி வழங்கிடும்போது , முதன்மைப்பொது மேலாளர் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், 1.1.2௦17முதல் 7 வது சம்பளக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய மாற்றம், 1-1-2௦௦7 முதல் 78.2 % IDA இணைப்பு நிலுவைத்தொகை, பென்ஷன் முரண்பாடு, EXTRA INCREMENT CASE, ஓய்வூதியம் PCCA மூலம் நேரடியாக வழங்குதல் ஆகிய செய்திகளை விரிவாகக்கூறினார்.
இரண்டாவது தவணையாக இன்று வழங்கப்பட்ட காசோலை சேர்த்து நமது மாவட்டம் அளித்த புயல் நிவாரண நிதி ரூ. 5௦௦௦௦/-ஆகும்.
75 வயது கடந்த 32 ஓய்வூதியர்கள் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கஜா புயல் நவாரண நிதி வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று மட்டும் 2175௦/-(ரூ இருபத்தி ஒரு ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது)நமது உறுப்பினர்கள் வழங்கியுள்ளார்கள். இது நமது உறுப்பினர்களின் உள்ளக்கிடக்கையை உலகறியச்செய்கிறது. இன்னும் நமது பங்களிப்பு தொடரும். என நம் செயலர் தோ வீராசாமி அறிவித்தார்.
தோ.ராஜாராமின் நன்றியுரையுடன் ஓய்வூதியர் தினம் நிறைவுற்றது. முத்தாய்ப்பாக அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)