Friday, 23 November 2018

நிதி தாரீர்!- சகோதரர்கள் துயர் துடைப்போம்!!



Image result for புயல் நிவாரண நிதி


புயல் நிவாரண நிதி -மாநிலச்சங்க வேண்டுகோள்

தமிழ் மாநில 
அனைத்து மாவட்ட  செயலர்கள் 
கவனத்திற்கு 

நேற்று நடைபெற்ற கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நிதி வசூல் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன் படி தமிழ்மாநில சங்கம் ரூ 50,000/-,  வேலூர் மாவட்டம் ரூ 50,000/- , STR சென்னை மாவட்டம் ரூ 40,000/-, கோயம்புத்தூர்  மாவட்டம்  ரூ 40,000/- , திருநெல்வேலி மாவட்டம் ரூ 30,000/-  கடலூர் மாவட்டம் ரூ 25,000/- , திருச்சி மாவட்டம் ரூ 10,000/- அளிப்பதாக தெரிவித்துள்ளன . மற்ற மாவட்ட செயலர்களும் அவசர அவசியம் கருதி தங்கள் மாவட்ட சங்கத்தால் எவ்வளவு ரூபாய் கொடுக்க இயலும் என்று ஓரிரு நாட்களுக்குள் தெரிவித்தால் மாநில சங்கம் உடனடியாக அந்த நிதியினை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணமாக அளிக்க இசைந்துள்ளது. அந்த ஒப்புக்கொண்டுள்ள நிதியை பின்னர் அந்தந்த மாவட்டங்கள் மாநில சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம்.,
தமிழ் மாநில செயலர் 
AIBSNLPWA 
கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மaக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம். 
அவர்தம்  துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை. 
தோழமையுள்ள 
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.

22-11-2018 மதுரை உண்ணாநோன்பு போராட்டம்






























          22-11-2018 அன்று மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய மிதி வண்டி கொட்டிலில் மத்திய சங்க அறைகூவலின் படி உண்ணாநோன்பு போராட்டம் மாவட்ட தலைவர் திரு K சத்யசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  . உண்ணாநோன்பில் பல தோழியர் உட்பட , மதுரை, திருமங்கலம், மேலூர் , திண்டுக்கல் வத்தலக்குண்டு, பழனி, தேனீ கம்பம்,  போன்ற இடங்களை சேர்ந்த   25௦ ஓய்வூதியர்கள் பங்குகொண்டனர். கூட்டத்தில் மாநிலச்சங்க உதவிச்செயலர்    திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தோழர் GRD நமது சங்கத்தின் தோற்றம் , போராட்ட வரலாறு ,சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். தோழர்கள் சுந்தரேசன் (மதுரை),                            M B கிருஷ்ணமூர்த்தி(மதுரை),  திண்டுக்கல்  அழகர்,  வத்தலக்குண்டு ராஜாராம், திருமங்கலம் சின்னச்சாமி ஆகியோர்  உரையாற்றினார்.
தோழர் G K வெங்கடேசன் அவர்கள் முன்னெடுப்பில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி  விண்ணதிரும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நமது கோரிக்கையை நிறைவேற்றிவைக்க DOT செயலரை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் படிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அதன் நகல் நமது மதுரை PGM BSNL அவர்களிடம் கொடுக்கப்பட்டு DOT செயலருக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படும்.
           கஜா புயல் நிவாரண நிதி வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தோழர்கள் உடனடியாக ரூ. 52௦௦/- நிவாரண நிதி வழங்கினர். 
            மாநில அமைப்புச்செயலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் குளிர்பானம்  வழங்கி உண்ணா நோன்பினை முடித்து வைத்தார்,




Thursday, 22 November 2018

CIRCLE and CHQ NEWS

Wednesday, 21 November 2018



Both BSNL serving staff and BSNL retirees face a very tough time. DoT is taking negative attitude towards Pay Revision and Pension Revision. 
Tomorrow Pensioners should express their strong emphatic protest by participating in the programme enmasse.

Now there is no Cabinet Minister for Communications. Govt. is not ready to bail out BSNL or MTNL. On the other hand Reliance get all patronage.

Sunday, 18 November 2018

ஓய்வூதியர் குறை தீர்க்கும் சிறப்பு கூட்டம். 18-11-2018



திண்டுக்கல் கூட்டம்



பழனி கூட்டம்


வத்தலக்குண்டு கூட்டம்






இந்த கூட்டங்களில் மறைந்த மத்திய அமைச்சர்
 திரு ஆனந்த குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில்  உறுப்பினர்களுக்கு 22-11-2018  உண்ணாவிரத போராட்டத்தின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டு அனைவரும்  உண்ணாவிரத போராட்டத்தில்  கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.