Thursday, 14 May 2020

மாநிலச்சங்கச்செய்தி


ஓய்வூதியர்கள் குறை தீர்க்க கட்டணமில்லா இலவச கால் சென்டர் சேவை
தோழர்களே ,
1.  ஓய்வூதியர்கள் தங்களுக்கு குறை ஏதேனும் இருப்பின் ,  " ஓய்வூதிய குறையினை நிவர்த்தி செய்யவும் , மற்றும் கண்காணிக்கவும் ஒரு மைய்யப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு "  ஒன்று உள்ளது இது  ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது                ( CPENGRAMS ) இதில் ஓய்வூதியர்கள் தங்கள்  குறைகளை முறையிடலாம்.   இது தவிர ஓய்வூதியர்கள் தபால் மூலமாகவும் , இ -மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு தெரியப்படுத்தலாம் .அவ்வாறு பெறப்பட்ட குறைகள் உடனடியாக CPENGRAMS  அமைப்பிற்கு  பதிவேற்றம் செய்யப்பட்டு , குறை பதிவேற்று எண் மற்ற விபரங்கள் புகார் அளித்தவருக்கு தெரிவிக்கப்படும் .மேலும் அந்த குறையினை   சம்பந்தப்பட்ட  அமைச்சகம் /இலாக்கா/நிறுவன த்திற்கு அந்த குறைகளை களைவதற்காக அனுப்பப்படுகிறது.

2.  ஆனால்  மிக அதிக வயதுள்ள முதியவர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் , புதிய தொழில் நுட்பம் அறியாத ஓய்வூதியர்களால் , தங்கள் ஓய்வூதிய குறைபாடுகளை CPENGRAMS  அமைப்புக்கு தெரிவிக்க முடிவதில்லை என்பதை  சமீப காலங்களில் உணரப்பட்டுள்ளது. ஆகவே அப்படிப்பட்ட வயது முதிர்ந்த ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உதவ வேண்டிய தேவை எழுந்துள்ளது .  அதன்பிரகாரம்  ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவானது கட்டணமில்லா தொலைபேசி கால் சென்டர் சேவை ஒன்றை துவக்கியுள்ளது. அதன் அழைப்பு எண் 1800 11 1960 ஆகும். இது கட்டணமில்லா இலவச சேவையாகும். எனவே ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியக் குறைகளை அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக பணி நடைபெறும் நேரங்களில் தெரிவிக்கலாம்.  இந்த கட்டணமில்லா தொலைபேசி இலவச கால் சென்டர் எண் 1800 11 1960 மற்றும் சேவைகளை நன்கு பிரபலப்படுத்துமாறு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

இணை செயலாளர் ,
இந்திய அரசு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகா
லோக் நாயக் பவன் , புது டில்லி .



மருத்துவப்படி
BSNL பணியில் உள்ளோர் / ஓய்வு பெற்றோர்க்கான மருத்துவ செலவினங்களை எப்படி கணக்கிடுவது என்கிற BSNL மருத்துவ கொள்கை வெளியீடு:
-----''''----'-'--------------'--------------தற்போதைய திட்டத்தை மாற்றம் செய்து 08.05.2020-ல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி:
1. பணியில் உள்ளோர்க்கு:
வெளி சிகிச்சைக்கு, ஒரு நிதி வருடத்திற்கு 15 நாட்கள் ( அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி ). அதாவது 19.7.18ல் வெளியியிட்ட உத்தரவின்படியே அடிப்படைச் சம்பளம் + 01.04.2020-ல் உள்ள D.A என்கிற வகையில் கணக்கிடப்படும்.

2. ஓய்வு பெற்றவர்களுக்கு:

மூன்று விருப்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:

1.CGHS
2. 15 நாள் சம்பளம் + ஓய்வு பெற்ற தேதியில் உள்ள D.A.
3. பில்கள் தராதவர்களுக்கு பிரதிமாதம் ரூ.1000 மருத்துவப்படி

இது பற்றி பல சந்தேகங்கள் உள்ளது:
பணியில்

உள்ளோர்க்கு பழைய கணக்கீட்டின்படி தரப்போகிறார்கள்.

ஆனால், ஓய்வூதியர்களுக்கு 2 விருப்பங்களிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகள் உள்ளது.
 CGHS அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இல்லை. தற்போதைய MRS திட்டம் தொடருமா, CGHS- க்கு மாறாதவர்களின் கதி என்ன?
அடுத்து ஏற்கனவே உள்ள விதிப்படி 15 நாள் சம்பளம் + பில் தரும் வருடத்தில் ஏப்ரல் மாத D.A என்பதை மாற்றி ஓய்வுபெரும் மாதத்தின் வருட D.A என்பது மிக குறைவானதாகவே அமையும்.
அடுத்து மருத்துவ படி, மாதம் ரூ.1000 என்கிற பழைய கணக்கீட்டின் படியே வழங்கப்படும் என்பதும் 2018-ல் இருந்த அளவீடு மாற்றாமல் அறிவித்ததும் நியாயமில்லை.

2 வருடங்களாக மெடிக்கல் பில்கள் / மெடிக்கல் அலவன்சுகள் இதுவரை தராமல் இருப்பதை மறந்தே போயிருக்கறார்கள். ஆனால் நாம் மறக்கவில்லை. நமது தலைவர்கள் இதுபற்றி நிர்வாகத்தடம் விவாதித்து வழி கானுவார்கள்.
= த. அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி

Tuesday, 12 May 2020

செவிலியரின் உன்னத சேவைக்கு மனமார்ந்த நன்றி.



நன்றி: மாநிலச்சங்க வலைப்பூ.

ARE U RETIED UNDER VRS 2019- PLEASE NOTE.



தோழர்களே,
February, March, April 2020ல்,  60 வயதை நிறைவு செய்தவர்கள் சம்பந்தபட்ட  BSNL  அலுவலகத்தில் 
Form 1A – 1 கொடுக்க வேண்டும்.
--மாநில செயலாளர்.


Monday, 11 May 2020

NEWS FROM CIRCLE



WITH GREAT PRIDE WE ANNOUNCE THAT TOTAL AMOUNT OF CONTRIBUTIONS MADE BY OUR MEMBERS TO THE COVID FUND HAS CROSSED RUPEES SEVENTYFIVE LAKHS AS AT 10 PM ON 9-5-2020.
Please see the statement:

Monday, 4 May 2020

கொரோன நிவாரண நிதி -மதுரையின் பங்களிப்பு தொடங்கியது

CCSHAU To Contribute About One Crore Fifty Lakh Rupees For Corona ...A few Hindu organisations donated Rs.1.37 lakh to CMRF Odisha

நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட நமது மத்திய சங்க  வேண்டுகோளின்படி நம் உறுப்பினர்கள் மாவட்ட சங்கத்திற்கு வழங்கிய நன்கொடை ரூ. 5௦௦௦௦/- ஐம்பது ஆயிரம் இன்று நமது மாநிலச்  சங்கத்திற்கு நேரலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இது முதல் தவணையே.இன்னும் பலப்பல தோழர்கள் நன்கொடை இந்த ஊரடங்கு முடிந்தபின் வழங்க வாக்களித்துள்ளனர். நமது உறுப்பினர்கள் நன்கொடை வழங்குவதில் என்றும் பின் வாங்குபவர்கள் அல்ல.இதனை நாம் இன்னும் செலுத்தும் நன்கொடை உறுதிப்படுத்தும்.
இது தவிர பிரதமரின் PM CARE மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், நமது மாநிலச்சங்கக் கணக்கிற்கு கொரோனா நிவாரண நிதியாகவும் நமது உறுப்பினர்கள்  வழங்கியுள்ளனர். இது விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


CIRCLE 6500
CM TN 3000
PM CARES 2500
TOTAL 12௦௦௦

இதுவரை மொத்தம் வழங்கப்பட்ட நிவாரண நிதி ரூ62௦௦௦.
நன்கொடை வழகிய மற்றும் நன்கொடை வழங்கவுள்ள நல்லுள்ளங்களுக்கும்.
நன்றி.
மேலும் அதிக நன்கொடை செலுத்தி நமது மாவட்ட பெருமையை நிலை நிறுத்துவோம்.

Sunday, 3 May 2020

இரங்கல் செய்தி

நமது சங்க உறுப்பினர் , கடச்சநேந்தலில் வசித்த 
 திரு S செங்கோல் RETD STS அவர்கள்

இன்று 3-5-2020 மாலை சுமார் 6-3௦ மணியளவில்  இயற்கை எய்திவிட்டார்.
அவரைப்பிரிந்து  வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
 தொடர்புக்கு:9442022451