ஓய்வூதியர்கள் குறை தீர்க்க கட்டணமில்லா இலவச கால் சென்டர் சேவை
தோழர்களே ,
1. ஓய்வூதியர்கள் தங்களுக்கு குறை ஏதேனும் இருப்பின் , " ஓய்வூதிய குறையினை நிவர்த்தி செய்யவும் , மற்றும் கண்காணிக்கவும் ஒரு மைய்யப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு " ஒன்று உள்ளது இது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது ( CPENGRAMS ) இதில் ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை முறையிடலாம். இது தவிர ஓய்வூதியர்கள் தபால் மூலமாகவும் , இ -மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு தெரியப்படுத்தலாம் .அவ்வாறு பெறப்பட்ட குறைகள் உடனடியாக CPENGRAMS அமைப்பிற்கு பதிவேற்றம் செய்யப்பட்டு , குறை பதிவேற்று எண் மற்ற விபரங்கள் புகார் அளித்தவருக்கு தெரிவிக்கப்படும் .மேலும் அந்த குறையினை சம்பந்தப்பட்ட அமைச்சகம் /இலாக்கா/நிறுவன த்திற்கு அந்த குறைகளை களைவதற்காக அனுப்பப்படுகிறது.
2. ஆனால் மிக அதிக வயதுள்ள முதியவர்கள் , குடும்ப ஓய்வூதியதாரர்கள் , புதிய தொழில் நுட்பம் அறியாத ஓய்வூதியர்களால் , தங்கள் ஓய்வூதிய குறைபாடுகளை CPENGRAMS அமைப்புக்கு தெரிவிக்க முடிவதில்லை என்பதை சமீப காலங்களில் உணரப்பட்டுள்ளது. ஆகவே அப்படிப்பட்ட வயது முதிர்ந்த ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உதவ வேண்டிய தேவை எழுந்துள்ளது . அதன்பிரகாரம் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகாவானது கட்டணமில்லா தொலைபேசி கால் சென்டர் சேவை ஒன்றை துவக்கியுள்ளது. அதன் அழைப்பு எண் 1800 11 1960 ஆகும். இது கட்டணமில்லா இலவச சேவையாகும். எனவே ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியக் குறைகளை அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக பணி நடைபெறும் நேரங்களில் தெரிவிக்கலாம். இந்த கட்டணமில்லா தொலைபேசி இலவச கால் சென்டர் எண் 1800 11 1960 மற்றும் சேவைகளை நன்கு பிரபலப்படுத்துமாறு அனைத்து ஓய்வூதியர் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இணை செயலாளர் ,
இந்திய அரசு
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாகா
லோக் நாயக் பவன் , புது டில்லி .
மருத்துவப்படி
BSNL பணியில் உள்ளோர் / ஓய்வு பெற்றோர்க்கான மருத்துவ செலவினங்களை எப்படி கணக்கிடுவது என்கிற BSNL மருத்துவ கொள்கை வெளியீடு:
-----''''----'-'--------------'--------------தற்போதைய திட்டத்தை மாற்றம் செய்து 08.05.2020-ல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி:
1. பணியில் உள்ளோர்க்கு:
வெளி சிகிச்சைக்கு, ஒரு நிதி வருடத்திற்கு 15 நாட்கள் ( அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி ). அதாவது 19.7.18ல் வெளியியிட்ட உத்தரவின்படியே அடிப்படைச் சம்பளம் + 01.04.2020-ல் உள்ள D.A என்கிற வகையில் கணக்கிடப்படும்.
2. ஓய்வு பெற்றவர்களுக்கு:
மூன்று விருப்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:
1.CGHS
2. 15 நாள் சம்பளம் + ஓய்வு பெற்ற தேதியில் உள்ள D.A.
3. பில்கள் தராதவர்களுக்கு பிரதிமாதம் ரூ.1000 மருத்துவப்படி
இது பற்றி பல சந்தேகங்கள் உள்ளது:
பணியில்
உள்ளோர்க்கு பழைய கணக்கீட்டின்படி தரப்போகிறார்கள்.
ஆனால், ஓய்வூதியர்களுக்கு 2 விருப்பங்களிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகள் உள்ளது.
CGHS அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இல்லை. தற்போதைய MRS திட்டம் தொடருமா, CGHS- க்கு மாறாதவர்களின் கதி என்ன?
அடுத்து ஏற்கனவே உள்ள விதிப்படி 15 நாள் சம்பளம் + பில் தரும் வருடத்தில் ஏப்ரல் மாத D.A என்பதை மாற்றி ஓய்வுபெரும் மாதத்தின் வருட D.A என்பது மிக குறைவானதாகவே அமையும்.
அடுத்து மருத்துவ படி, மாதம் ரூ.1000 என்கிற பழைய கணக்கீட்டின் படியே வழங்கப்படும் என்பதும் 2018-ல் இருந்த அளவீடு மாற்றாமல் அறிவித்ததும் நியாயமில்லை.
2 வருடங்களாக மெடிக்கல் பில்கள் / மெடிக்கல் அலவன்சுகள் இதுவரை தராமல் இருப்பதை மறந்தே போயிருக்கறார்கள். ஆனால் நாம் மறக்கவில்லை. நமது தலைவர்கள் இதுபற்றி நிர்வாகத்தடம் விவாதித்து வழி கானுவார்கள்.
= த. அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.