Thursday, 7 March 2024
Thursday, 8 February 2024
Dear
Comrades,
To expedite
the process of our Pension Revision, our AIBSNL CHQ leaders Com.
D.Gopalakrishnan, Com.V. Varaprasad, Com. Gangadhar Rao and Dy.GS, Com.Anup
Kaul are camping in Delhi. If the Pension Revision is accomplished before
Elections it would be easy. Revision file should first get approval of Finance
Wing. As the Honourable Minister is favourable the Department has not chosen to
appeal the case to High Court of Delhi.
Our leaders are appealing to Minister continuously through various channels.
Let’s hope our case of Pension Revision is solved as soon as possible. Andhra
M.P. Honourable Sri GVL Narasimha Rao also trying to resolve the issue on our
behalf.
---- From
M.Rajasekhara Reddy, AGS, AIBSNLPWA. (English translation of the above Telugu message
from AGS)
Thursday, 25 January 2024
Sunday, 14 January 2024
Sunday, 7 January 2024
AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கம் ஓய்வூதியர் தின சிறப்பு விழாவை மிக பிரமாண்டமான முறையில் " ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் " 05-01-2024 காலை 10-00 மணிக்கு நடத்தியது. மாவட்ட சங்க கல்வெட்டு அகில இந்திய தலைவர் தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . சங்கத் கொடியை மதுரை மாவட்ட சங்க ஆலோசகர் தோழர் G.R .தர்மராஜன் அவர்கள் விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார் பிறகு விழா மண்டபத்தில் மாவட்ட தலைவர் தோழர் கன்னியப்பன் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் துவங்கியது . மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார் .
முதலாவதாக சமீப காலங்களில் இயற்கை எய்திய தோழர்கள் , தலைவர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஆலோசகர் தோழர் G.R தர்மராஜன் உரை நிகழ்த்தி கூட்டத்தை துவக்கி வைத்தார் மாநில செயலர் தோழர் S .சுந்தரகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தோழர் K .முத்தியாலு, அகில இந்திய துணைத் தலைவர் ஆகியோர் பேசினார்கள் . இந்த வருடம் அக்காவை 70 ஐ அடைந்துள்ள தோழர்கள் துண்டு அணிவிக்கப்பட்டு , பரிசு பொருளுடன் தலைவர்களால் கவுரவிக்கப்பட்டார்கள். அகில இந்திய தலைவர் தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்களின் நீண்ட உரைக்குப்பின் கூட்டம் மாநில செயலரின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
450 தோழர்களுக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களின் உரைகளை கேட்டது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். கூட்டத்திற்கு வந்திருந்த அத்துணை தோழர்களுக்கு மதுரையின் பாரம்பரிய உபசரிப்புடன் அறுசுவை உணவு சூடாக , சுவையாக பரிமாறப்பட்டது.
Wednesday, 27 December 2023
ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம்
முக்கியச்செய்தி
தோழர்களே!
9-12-2023 அன்று நடைபெறுவதாக இருந்து தவிர்க்க இயலாத காரணங்களால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட நமது மாவட்ட ஓய்வூதியர் தின சிறப்புப் பொதுக்குழு கூட்டம் வரும் புத்தாண்டில்
5- 1- 2024 வெள்ளி அன்று அதே நிகழ்வு இடத்தில் அதே நிகழ்ச்சி நிரல்படி சிறப்பாக நடைபெற இருக்கின்றது. தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
மாவட்டச் செயலர்.
Friday, 8 December 2023
மிக முக்கியச் செய்தி.
09-12-23 அன்று நடக்க இருந்த மதுரை மாவட்ட ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் செய்தி கீழே. சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெரு வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் விழாவிற்கு சென்னையிலிருந்து வரவேண்டிய தலைவர்கள் மதுரை வருவது இயலாததா கிவிட்டது. எனவே 09-12-2023
அன்று நடத்த வேண்டிய சிறப்பு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால் பின்னர் சென்னையில் சகஜ நிலை திரும்பிய பின்பு சங்கத் தலைவர்கள் மதுரை வர இசைவான தேதியில் ஓய்வூதியர் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். சிரமத்தினை பொறுத்தருள வேண்டுகிறேன்.
நன்றி
மாவட்டச் செயலாளர்.









