Sunday, 2 December 2018

நம் மாநிலச்செயலருக்கு வாழ்த்துக்கள்.






04-12-2018 அன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நம் தமிழ்மாநில AIBSNLPWA செயலாளர் தோழர் ஆர்வி என்று அன்புடன் அழைக்கப்படும் R .வெங்கடாச்சலம் அவர்கள் , தன் பிறந்த நாளன்று கஜா புயலினால் இன்னலுற்று வீடு , வாசல், பொருட்களை இழந்து வாடி நிற்கும் எண்ணற்ற மக்களின் துயர் துடைக்க நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் தன்னை ஈடு படுத்திக்கொள்ள இருக்கிறார்.
மக்கள் பணியே மகேசன் பணி என்று இயங்கும் நம் மாநில செயலர் பல்லாண்டு காலம் நோயின்றி , பூரண உடல் நலத்துடன்  வாழ வாழ்த்துவோம்.
AIBSNLPWA,
TN CIRCLE


CIRCLE NEWS ON CYCLONE RELIEF


2-11-2018 அன்று நமது உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகு தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு இணங்க மாவட்ட சங்கங்கள் நன்கொடை அனுப்பியுள்ளன .மாவட்ட செயலர்கள் கொடுத்துள்ள தகவல் பிரகாரம் 6 லட்சத்திற்கு மேல் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .  இதுவரை சென்னை தொலைபேசி மாநிலம் - ரூ 1 லட்சம் , சேலம் மேற்கு - ரூ 1 லட்சம் , வேலூர் - ரூ 50 ஆயிரம் , கோவை - ரூ 20 ஆயிரம், தூத்துக்குடி - ரூ 20 ஆயிரம், சேலம் கிழக்கு -ரூ 10 ஆயிரம் , கடலூர்  ரூ 25 ஆயிரம், காரைக்குடி - ரூ 20 ஆயிரம், மதுரை - ரூ 25 ஆயிரம், மத்திய சங்கம் - ரூ 20 ஆயிரம், தமிழ் மாநிலம் - ரூ 50 ஆயிரம் என பணம் அனுப்பியுள்ள. 
தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 2 புடவைகள், 2 உள்ளாடைகள் , 2 லுங்கிகள் ,2 போர்வைகள், 2 துண்டுகள், பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் தேவைப்படுகிற உணவுப்பொருட்கள், மெழுகு வத்தி, தீப்பெட்டிகள் ஆகியவைகளும் வாங்கி எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பட்டுக்கோட்டையில் உள்ள தோழர் சிவ சிதம்பரம் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 3 அல்லது 4 தேதிகளில் தஞ்சை மாவட்ட தோழர்களுடன் தமிழ் மாநில தலைவர் , மாநில செயலர், மாநில பொருளாளர், மத்திய சங்க துணை பொது செயலர் , சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
STR  சென்னை ரூ - ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. நிவாரண நன்கொடை பெற விரைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்வி ,
தமிழ்மாநில செயலர்.

1800+ WHAT CIRCLE UNION SAYS.....


மதுரை பெருமை கொண்டது தமிழ் சங்கத்தால் அன்று 
இன்று பெருமை கொள்வது அதீத நம் சங்கத்தின் வளர்ச்சியால்.
ஆம். இன்று AIBSNLPWA  மதுரை மாவட்ட சங்க உறுப்பினர் எண்ணிக்கை1800+
தலைவர், செயலர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.
இரண்டாயிரத்தை விரைவில் எட்டிப்பிடிக்க இதய நிறை வாழ்த்துக்கள்.

A COMMITTEE OF BSNL MTNL PENSIONERS ASSOCIATIONS FORMED.

Friday, 23 November 2018

நிதி தாரீர்!- சகோதரர்கள் துயர் துடைப்போம்!!



Image result for புயல் நிவாரண நிதி


புயல் நிவாரண நிதி -மாநிலச்சங்க வேண்டுகோள்

தமிழ் மாநில 
அனைத்து மாவட்ட  செயலர்கள் 
கவனத்திற்கு 

நேற்று நடைபெற்ற கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நிதி வசூல் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன் படி தமிழ்மாநில சங்கம் ரூ 50,000/-,  வேலூர் மாவட்டம் ரூ 50,000/- , STR சென்னை மாவட்டம் ரூ 40,000/-, கோயம்புத்தூர்  மாவட்டம்  ரூ 40,000/- , திருநெல்வேலி மாவட்டம் ரூ 30,000/-  கடலூர் மாவட்டம் ரூ 25,000/- , திருச்சி மாவட்டம் ரூ 10,000/- அளிப்பதாக தெரிவித்துள்ளன . மற்ற மாவட்ட செயலர்களும் அவசர அவசியம் கருதி தங்கள் மாவட்ட சங்கத்தால் எவ்வளவு ரூபாய் கொடுக்க இயலும் என்று ஓரிரு நாட்களுக்குள் தெரிவித்தால் மாநில சங்கம் உடனடியாக அந்த நிதியினை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணமாக அளிக்க இசைந்துள்ளது. அந்த ஒப்புக்கொண்டுள்ள நிதியை பின்னர் அந்தந்த மாவட்டங்கள் மாநில சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
R .வெங்கடாசலம்.,
தமிழ் மாநில செயலர் 
AIBSNLPWA 
கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மaக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம். 
அவர்தம்  துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை. 
தோழமையுள்ள 
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.

22-11-2018 மதுரை உண்ணாநோன்பு போராட்டம்






























          22-11-2018 அன்று மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய மிதி வண்டி கொட்டிலில் மத்திய சங்க அறைகூவலின் படி உண்ணாநோன்பு போராட்டம் மாவட்ட தலைவர் திரு K சத்யசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  . உண்ணாநோன்பில் பல தோழியர் உட்பட , மதுரை, திருமங்கலம், மேலூர் , திண்டுக்கல் வத்தலக்குண்டு, பழனி, தேனீ கம்பம்,  போன்ற இடங்களை சேர்ந்த   25௦ ஓய்வூதியர்கள் பங்குகொண்டனர். கூட்டத்தில் மாநிலச்சங்க உதவிச்செயலர்    திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தோழர் GRD நமது சங்கத்தின் தோற்றம் , போராட்ட வரலாறு ,சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். தோழர்கள் சுந்தரேசன் (மதுரை),                            M B கிருஷ்ணமூர்த்தி(மதுரை),  திண்டுக்கல்  அழகர்,  வத்தலக்குண்டு ராஜாராம், திருமங்கலம் சின்னச்சாமி ஆகியோர்  உரையாற்றினார்.
தோழர் G K வெங்கடேசன் அவர்கள் முன்னெடுப்பில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி  விண்ணதிரும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நமது கோரிக்கையை நிறைவேற்றிவைக்க DOT செயலரை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் படிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அதன் நகல் நமது மதுரை PGM BSNL அவர்களிடம் கொடுக்கப்பட்டு DOT செயலருக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படும்.
           கஜா புயல் நிவாரண நிதி வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தோழர்கள் உடனடியாக ரூ. 52௦௦/- நிவாரண நிதி வழங்கினர். 
            மாநில அமைப்புச்செயலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் குளிர்பானம்  வழங்கி உண்ணா நோன்பினை முடித்து வைத்தார்,