Saturday 21 March 2015

2015 மார்ச் மாதம் 17,18 தேதிகளில் நாக்பூரில் நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளின் சிறப்பு அம்சங்கள் 

I.ஓய்வூதியர்களுக்கு 78.2% அகவிலைப்படி இணைப்புக்கு வேண்டிய மந்திரி சபை ஒப்புதலுக்கான குறிப்பு தயாரிப்பதில் தொலைத்தொடர்புத்துறையின் மெத்தனப்போக்கு விரிவாக விவாதிக்கப்பட்டு கிழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
  1. ஏப்ரல் மாதத்தில் MOC&IT மற்றும் MOS DOP&PW ஆகியோரை சந்தித்து ஒரு குறிப்பாணை  சமர்ப்பிப்பது 
  2. 13-5-2015 ல் டெல்லியில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஹரியானா,மத்தியப்ரதேசம், மேற்கு, மற்றும் கிழக்கு உத்திரப்ப்ரதேசம்,ராஜஸ்தான்,வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களின் ஓய்வூதியர்களை  வைத்து ஒரு மாபெரும் பெருந்திரள் தர்ணா           நடத்துவது, அதே நாளில் மாநில,மாவட்டத்தலைமையிடங்களில் தர்ணா நடத்தவது 
  3. மற்ற சகோதர BSNL ஒய்வூதியசங்கங்களையும் சந்தித்து அவர்களின் ஒத்துழைபுடனும் இப்பிரச்சினையைதீர்த்தல் , 
II.2015 நவம்பரில் பெங்களுருவில் நடக்க இருக்கும் அனைத்திந்திய மாநாடு.
  1. சார்பாளர்,பார்வையாளர் கட்டணம் ரூ .800.
  2. அமைப்பு விதிகளின்படி சார்பாளர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் 
  3. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பார்வையாளர் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.
  4. கிளை மற்றும் மாவட்டச்சங்கங்கள் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ரூ.50/-மட்டும்  அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக பெற்று,     வரவேற் ப்புக்குழுவுக்கு நேரடியாக அனுப்பிவிட்டு,மத்திய சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவேன்ன்டும். 
III.BSNL சங்கங்களின் "SAVE BSNL MOVEMENT" க்கு நமது உறுப்பினர்கள் ஆதரவு நல்குதல்.

IV . OPEN SESSION
  1. தோழர் S C மகேஸ்வரி பொதுச்செயலர்,BHARATH PENSIONERS SAMAJ,தோழர் .D.கோபாலகிருஷ்ணன் ,SECRETARY ASIA TUI&PR ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொண்டனர்.தோழர் மகேஸ்வரி தனது உரையில் 7 வது சம்பலக்குழுவின் சிறப்பு அம்சங்கள் குறித்துப்பேசினார்.7 வது சம்பலகுழுவிடம் நாம் வைக்கும் கோரிக்கைகளுக்கும்,78.2 % அகவிலைப்படி இணைப்பு விஷயத்திலும் நமக்கு ஆதரவு நல்கவும் உறுதியளித்தார்.    
  2. பல்வேறு இன்னல்களுக்கிடையில் மத்திய செயற்குழுக்கூட்டம் சிறப்பாக நடைபெற சிறப்பான ஏற்பாடு களைச்செய்திருந்த மகாராஷ்டிரா மாநிலச்செயலர் தோழர் M J பிள்ளை   மற்றும்           தோழர்களுக்கும்   நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.   

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.