Sunday, 15 March 2015

மதுரையில் மகளிர் தினம்

15-3-2015.

                     மதுரையில் மகளிர் தினம்.

     அன்னை மீனாக்ஷி அருளாட்சி ஆட்சி புரியும் மதுரையில் அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்டச்சங்கத்தின் சார்பில் 14-3-2015 அன்று மதுரை BSNL பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் காலை 1000 மணிக்கு அனைத்துலக மகளிர் தின விழாவும், மாவட்டத்தின்சிறப்புப்பொதுக்குழுக்கூட்டமும் மாவட்டத்தலைவர்        திரு மு.ரவீந்திரன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
     சிறப்பு விருந்தினராக நமது சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலர் திரு.அருணாசலம் கலந்துகொண்டார். விழாவில் 50க்கும் அதிகமான பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய சுமார் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
      திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்களின் இறைவணக்கத்திற்குப்பின் மறைந்த நமது சங்க செயல்வீரர் சித்துசிங், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியர்களின் ஒப்பற்ற தலைவர் திரு எஸ். கே. வியாஸ், ,நமது மாவட்டத்துணைத்தலைவரும்,முன்னாள் தமிழ் மாநில லைன் ஸ்டாப் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர் சங்கச் செயலருமான திரு சையது அலி மற்றும் மறைந்த நமது சங்கஉறுப்பினர்களுக்கும்  அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருமதி கல்யாணி சுந்தரேசன்,  திரு சங்கைய்யா,                      திரு. ஹாஜா மொஹைதீன், திருமதி. தங்கமீனாள்,                   திருமதி. இன்பஜோதி இந்திரகுமாரி,   திருமதி. பத்மாவதி,              திரு. அருணாசலம், திரு. ரவீந்திரன், திரு. எம்.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மகளிர் தின சிறப்புரையாற்றினர்.
          திரு. அருணாசலம் அவர்கள், தனது உரையில் மருத்துவப்படி,78.2% அகவிலைப்படி இணைப்பு, 7 வது ஊதியக்குழு, BSNL லில் 2017 ல் ஊதியமாற்றம் குறித்து சிறப்பான விளக்கவுரையாற்றினார்.
                  நமது செயலர் மகளிர் தின சிறப்புகளை விளக்கி தன் வாழ்துக்களையும் கூறி மகளிர் தின நிகழ்ச்சிகளை முடித்து வைத்தார்.
          7-12-2014 ல் நடைபெற்ற நமது ஓய்வூதியர்தின சிறப்புப்பொதுக்குழுக்கூட்டத்தின் அறிக்கை செயலர்                   திரு G R  தர்மராஜனால் படிக்கப்பட்டு ஏற்றுக்கோள்ளப்பட்டது. சிற்றுண்டி வழங்கப்பட்டது. அடுத்த பொதுக்குழுக்கூட்டம் 21-6-2015ல் நடைபெறும் என்றும் அன்று  பெங்களூரு வில் நடக்க இருக்கும் அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர் தேர்வு நடத்தவும், விருப்பம் உள்ளவர்கள்    15-6-2015 க்கு முன் பெயர்களை செயலரிடம் தெரிவிக்கவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.  
           பொருளாளர். திரு. ஜனார்த்தனன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் மதியம் ஒரு மணிக்கு நிறைவடைந்தது.















No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.