Wednesday 12 July 2017

9-7-2௦17 செயற்குழு கூட்ட செய்திகள்





9-7-2017  அன்று நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர்       திரு ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோ ஞானையா முன்னாள் NFPTE பொதுச்செயலர், மற்றும் சங்க உறுப்பினர்கள் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முந்தைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட அறிக்கைகள் படிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
78.2 % நிலுவைத்தொகை பெற்ற தோழர்கள் மனமுவந்து விரைவில்ரூ  1௦௦௦/- நன்கொடை வழங்கவும்,ஆண்டு சாந்த உறுப்பினர்கள் ஆயுள் சாந்த உறுப்பினர்களாக மாறவும் கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மற்றும்,
1.20-8-2017 நமது மத்திய சங்க நிறுவன தினத்தை தோ.சுகுமாரன் அவர்களை சிறப்பு பேச்சாளாரக அழைத்து கொண்டாடுவது,

2.நமது மத்திய சங்கம் 1-1-2௦17 முதல் 78.2% அகவிலைப்படி இணைப்பு நிலுவைத்தொகை பெற்றிடவும்,ஓய்வூதிய முரண்பாடு சரிசெய்திடவும் சட்ட   வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திட முடிவு செய்துள்ளது. அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க கீழ் காணும் விவரங்களை உறுப்பினர் களிடமிருந்து பெற்று தயாராகும் படி சிறப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எனவே இத்தகவல்களை விவரங்களை உறுப்பினர்களிடமிருந்து பெற்று பட்டியல் தயார் செய்வது,
3.20,21 -07-2017 தேதிகளில்  சென்னையில் நடக்கும் AIFPA அனைத்திந்திய மாநாட்டிற்கு தோ. G K வெங்கடேசன், தோ பிச்சை ஆகியோரை சார்பாளர்களாக அனுப்புவது
           எனவும் முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினர் விவரங்களை சேகரிக்கும் போது மத்தியசங்கம் கேட்டுள்ள விவரங்களைத்தவிர
1.கடைசியாகபெற்ற 1௦ மாதா சராசரி ஊதியம்
 (LAST TEN MONTHS AVERAGE PAY)(DOT  ஓய்வூதியற்கு மட்டும்)
2.கடைசியாக பெற்ற ஊதியம்(LAST PAY DRAWN)
3. ஓய்வு பெறும் போது நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம்(PENSION FIXED ON RETIREMENT)
4. தொடர்புக்கான தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள்
      ஆகிய விவரங்களையும் கேட்டு பதிவிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மத்திய சங்கம் கேட்டுள்ள விவரங்கள்:
1.ஓய்வூதியர் பெயர்
2. ஓய்வூதிய வழங்கல் ஆணை எண் (PPO No)
3. ஓய்வுபெற்ற அலுவலக விவரம்
4.பணியில் சேர்ந்த நாள்(DATE OF ENTRY IN SERVICE)
5.பணி நிறைவு நாள் (DATE OF RETIREMENT)

தோ.துவரகநாதன் அவர்களின் நன்றி அறிவிப்புடன் கூட்டம் இனிது நிறைவடைந்தது.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.