Wednesday 19 July 2017

THE SENIORS DEMONSTRATE

19/07
Hundreds of BSNL PENSIONERS from Chennai Telephone District and Chennai Traffic Division, Chennai STR Division and a large number of PENSIONERS from adjacent SSAs from CUDDALORE, PONDICHERRY & VELLORE participated in the MASS DHARNA on 19-7-17 in front of CCA OFFICE, Chennai protesting against the unhelpful attitude of the Pr.CCA Office towards the settlement of the pending problems of pensioners in 78.2% pension revision arrears and also to protest against the disrespectful attitude of the CCA OFFICE Officials, Ethiraj Salai showing towards our leaders and pensioners when they visit CCA OFFICE for genuine enquiries. 
Few Photographs of the Event are given below:


Wednesday, 19 July 2017


தோழர்களே 
இன்று காலை 10-00 மணி அளவில் எத்திராஜ் சாலையில் உள்ள CCAஅலுவலகம் முன் BSNL சென்னைத்தொலைபேசி மாவட்டம் , தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் STR & STP பகுதி களைச்  சார்ந்த ஓய்வூதியர்கள் ஒன்று கூடி CCA அலுவலக அதிகாரிகளின் ஆணவ நடவடிக்கைகளை கண்டித்து தர்ணா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். சுமார் 400 பேர்களுக்கு மேல் (பெண்கள் உட்பட )மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.விண்ணை முட்டும் கோஷங்களுடன் இனிதே துவங்கியது.
இன்றைய நிகழ்ச்சிகளுக்கு சென்னை மாவட்ட துணைத்தலைவர் தோழர் மதுரை முத்து அவர்களும் தமிழ் மாநில வட்டம் தலைவர் தோழர் V .ராமராவ் அவர்களும் கூட்டாக தலைமை ஏற்று நடத்தினார்கள்.தோழர்கள் கே.முத்தியாலு , M கோவிந்தராஜன் ChTD செயலர், பொது செயலர் G. நடராஜன் , D கோபாலகிருஷ்ணன் A .சுகுமாரன் மாநில துணைத்தலைவர், அகில இந்திய பொருளாளர் TS விட்டோபன் ,வேலூர் முருகன் ACS , திருச்சி R .வெங்கடாச்சலம் ACS ,கடலூர் பால்கி , பாண்டி செயலர் அன்பழகன் , கடலூர் ஜெயராமன் , ChTD பொருளாளர் கண்ணப்பன் ,மற்றும் பலர் சிறப்பாக பேசினார்கள்.
பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தோழர்களின் எண்ணிக்கை 

பாண்டி  --7,  நெல்லை --7,  கடலூர் --53, சேலம் --3,  வேலூர் --7,  தஞ்சை --2 திருச்சி --1 தூத்துக்குடி --3 .
CCA அலுவலகத்திற்கு ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை சம்பத்தப்பட்ட ஓய்வூதியர்கள் மட்டுமே வரவேண்டும். சங்கத்தைச்சார்ந்தவர்கள் வரக்கூடாது. மாதம் முதல் திங்கட்கிழமை மட்டுமே Jt CCAa அவர்களை சந்திக்கலாம். அவருக்கு கீழே உள்ள அதிகாரிகளை சந்திக்கக்கூடாது. மாதம் 3 கேஸ்களை மட்டுமே கொண்டுவர வேண்டும். அடுத்த மாத கேஸ்களை இந்த மாதமே கொடுத்து விட வேண்டும்.பென்ஷன் அதாளத்திற்கு பென்ஷனர் மட்டுமே வரவேண்டும். ஓய்வூதியர்கள் சிலர் பணமின்றி கஷ்டப்படுகிறார்கள் என்று நம் தலைவர்கள் நேர்காணலில் கூறியபோது சிலர் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் நீங்கள் பிரியாணி கேட்கிறீர்கள் என்பது போன்ற எரிச்சலூட்டும் துடுக்குப்பேச்சுக்கள் , 78.2% சாங்ஷன் செய்வதுதான் எங்கள் வேலை மற்றதெல்லாம் வங்கிகளில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.போன்ற ஆணவ பேச்சுக்களை அடக்கவே இந்த தர்ணா.
மத்திய அமைச்சரவையை நம் 78.2% நிலுவைத்தொகையினை 31-12-2016க்குள் வழங்கப்பட வேண்டுமென்று அமைச்சர்கள் குழு முடிவெடுத்தது.ஆனால் மேற்கொண்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் அனைவருக்கும் அது போய் சேரவில்லை. நம் மற்ற கோரிக்கைகளான 01-01-2007 முதல் 78.2% நிலுவைத்தொகை , அதற்கேற்ற DCRG , லீவு ஈட்டுத்தொகை,commutation , 7th CPC ஓய்வூதிய மாற்றம் இவைகளை பெற்றிட இன்னும் பல பல போராட்டங்களை நாம் நடத்திட வேண்டும் . அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் பேசினார்கள் பாண்டிச்சேரி இதனையே " Keep the gun powder always dry " என்ற சொல்லடை ஆங்கிலத்தில் உள்ளது என்றார் .
Extra Increment case -ல் கொடுக்கப்பட்ட பென்ஷன் தொகையை பிடிக்க/மாற்ற /நிறுத்த   ஜனாதிபதியைத் தவிர யாருக்கும் அதிகாரமில்லை எனவே பணத்தை பிடிக்கக்கூடாது என மாநில செயலர் கடிதம் கொடுத்துள்ளார். நம்மிடையே ஒற்றுமை வேண்டும்.இன்னும் ஓய்வூதியர் எண்ணிக்கை உயர வேண்டும். சாதனைகளை செய்துவருவது நம் சங்கம் மட்டும்தான். இவற்றை எடுத்துக்கூறி சங்கத்தில் சேராத ஓய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரையும் நம் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்.ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நபரை நம் உறுப்பினர் ஆக்கினாலே போதும், நம் எண்ணிக்கை உயரும் . நீங்கள் செய்வீர்களா?!



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.